Maniratnam: தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் இவர் பெயரை தவிர்த்து விட்டு சினிமா வரலாற்றை எழுத முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக தன்னுடைய திரைக்கதை மற்றும் தன்னுடைய திரைப்படங்கள் மூலமாக பதிய வைத்திருப்பவர். சினிமா குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சினிமா பார்ப்பதை கால விரயம் என்று நினைத்த ஒரு மனிதர் பின்னாளில் சினிமா பார்க்க ஆரம்பித்து இயக்குனர் பாலச்சந்தரின் உடைய இயக்கத்திலும் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் நாகேஷின் நடிப்பிலும் தன்னை மெய்மறக்கச் செய்து, சினிமா உலகில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் சுயம்புவாக சினிமா இயக்கி இன்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கின்ற ஒருவரை பற்றி தான் இன்று நாம் பேசப் போகின்றோம்.
1956-ல் மதுரையில் பிறந்த மணிரத்தினம் தான் அவர். அப்பா கோபாலரத்தினம் பட விநியோகஸ்தராகவும் மாமா வீனஸ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பாளராகவும் அண்ணன் ஜிவி வெங்கடேஷ் பட தயாரிப்பாளராக இருந்தாலும் சினிமாவின் மேல் ஏனோ ஆர்வம் இல்லாமல் இருந்த மணிரத்தினம் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் தன்னுடைய இடங்களை படிப்பையும் பிறகு மும்பையில் உள்ள ஜவஹர்லால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் தன்னுடைய முதுகலை எம் பி ஏ பட்டத்தையும் படித்து முடித்த பிறகு சென்னையில் மேலாண்மை துறையில் பணி செய்து கொண்டிருந்த போதுதான் சினிமாவின் மேல் ஆர்வம் வந்து தனியாக சினிமா எடுக்க விரும்பினார் தன்னுடைய மாமா வீனஸ் கிருஷ்ணமூர்த்தியின் தயாரிப்பில் 1983இல் அவர் எடுத்த முதல் படம் பல்லவி அணு பல்லவி என்ற கன்னட படம் அதற்கு ஒளிப்பதிவாளராக வாழும் மிகுந்தரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது பல்லவி அணு பல்லவி படம் திறக்கதையில் மிகச் சிறப்பாக வந்ததால் உணர்வு என்ற மலையாள படத்தை இயக்குகின்ற வாய்ப்பு 1984இல் அவருக்கு கிடைத்தது.
தொழிலாளர் சங்கங்களில் ஏற்படுகின்ற ஊழல்களையும் லஞ்சங்களையும் பற்றி பேசிய அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை 1985 இல் தான் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் முரளி ரேவதியை கதாநாயகன் நாயகியாக வைத்து அவர் எடுத்த அந்த முதல் தமிழ் படம் பகல் நிலவு வித்தியாசமான கதை அமைப்பு நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக இருந்தது.
அதே ஆண்டு சார்லி சாப்ளின் நடித்து 1956 இல் வெளிவந்த லைம் லைட் திரைப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இதய கோவில் ஒரு சிறந்த படமாக அமைந்தது ஆனால் மணிரத்தினத்திற்கு தன்னுடைய முதல் படமான பல்லவி அணு பல்லவியை தவிர மற்ற மூன்று படங்களிலும் ஏனோ அவருக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை அவருடைய எண்ண ஓட்டத்திற்கு பொருந்தாத படங்களாகவே அது அமைந்ததாக அவர் கருதினார். 1986இல் அவர் எடுத்த ஒரு திரைப்படம் இன்றளவும் மக்களால் போற்றப்படுகின்ற ஒரு படமாக இருக்கிறது 40 ஆண்டுகள் ஆனாலும் கூட இன்றும் அந்த திரைப்படம் தொலைக்காட்சியில் வந்தாலோ அல்லது அந்தப் பாடல்களை எங்காவது கேட்டாலோ எல்லோருடைய மனதிலும் இன்றும் அந்த படம் அழுத்தமாக நிறைந்ததாக இருக்கும்.

அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தின் உடைய திரை கதையும் நடிப்பும் ஒளிப்பதிவும் இசையும் கதை அமைப்பு இயக்கிய விதமும் என எல்லாமே சிறப்பாக அமைந்த ஒரு படமாக இருந்தது அந்த திரைப்படம் தான் 19 86இல் மணிரத்தினம் இயக்கத்தில் பிசி ஸ்ரீ ராம் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் மோகன் ரேவதி கார்த்திக் நடித்த மௌன ராகம். இந்த திரைப்படத்தின் உடைய மாபெரும் வெற்றி மணிரத்தினத்தை தமிழ் ரசிகர்களால் அடையாளம் காண உதவியது இந்த திரைப்படம் சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேசிய விருது பெற்றது. இந்த படத்தை இயக்கியதற்காக முதன்முறையாக பிலிம் ஃபேர் விருதை பெற்றார் மணிரத்னம்.
அதற்கு அடுத்த ஆண்டு 1987 இல் நடிகர் கமல்ஹாசனை கதாநாயகனாக வைத்து 1972ல் வெளிவந்த ஆங்கில படமான காட்பாதரை கழுவி நாயகன் என்ற படத்தை இயக்கினார் மணிரத்தினம் இந்த திரைப்படம் மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜ முதலியாரின் வாழ்க்கையின் வரலாற்றையும் இணைத்து இந்தப் படத்தில் கதை சொல்லி இருப்பார் மணிரத்னம் இந்த திரைப்படம் கமல்ஹாசன் வாழ்க்கையிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி ஒரு மிகப்பெரிய உச்சத்தை தொட்ட ஒரு திரைப்படமாக அமைந்தது அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ட்ரெயின் பத்திரிக்கை உலக சினிமாக்களின் காலம் தோறும் போற்றுகின்ற நூறு சினிமாக்களில் ஒன்றாக இந்த நாயகன் திரைப்படத்தை தேர்வு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து மூன்றே மூன்று படங்கள் தான் இப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது ஒன்று சத்யஜித்ரேவின் அபுதிரி போகி இரண்டாவது குரு தத் இயக்கத்தில் வெளிவந்த பியாசா மூன்றாவது மணிரத்னத்தின் நாயகன் அந்த அளவுக்கு நாயகன் திரைப்படம் மிக சிறப்பாக வந்திருந்தது. 1988ல் பிரபு கார்த்திக்கு வைத்து அக்னி நட்சத்திரம் 89 இல் நாகார்ஜுனா கிரிஜாவை வைத்து கீதாஞ்சலி என்ற தெலுங்கு படம் அது தமிழில் இதயத்தை திருடாதே என்று வந்தது அதற்கு அடுத்து ஆட்டிசம் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் அதனால் அவர்களுடைய பெற்றோர்களுடைய மனநிலை அவருடைய வாழ்க்கை முறை அந்த குழந்தையினுடைய வைரத்த குழந்தைகள் உடைய என்ன ஓட்டங்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்று மிக இயல்பாக எளிதாக மக்களுக்கு புரிகின்ற வகையில் 1990 இல் மணிரத்தினம் எடுத்த திரைப்படம் தான் அஞ்சலி படமும் மணிரத்னத்தினுடைய திரை வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக அமைந்தது 1991இல் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை வைத்து தளபதி என்ற மாபெரும் திரைப்படத்தை இயக்கினார் மணிரத்தினம் அந்த திரைப்படமும் ஒரு பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தது. அதுவரை தன்னுடைய எல்லா படங்களுக்கும் இசையமைத்த இளையராஜாவிடம் இருந்து முதல் முதலாக பிரிந்து அடுத்த ஆண்டு 92 ஆவது வருடத்தில் ரோஜா என்ற திரைப்படத்தை இயக்கினார் அதில் தான் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அறிமுகம் செய்யப்பட்டார்

93 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் ஆனந்தை வைத்து திருடா திருடா என்ற திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினம் 1995இல் மத மோதல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பணம் தான் பம்பாய் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது 1997 தமிழக அரசியலில் மிகப்பெரும் இரு துருவங்களாக இருந்த கலைஞரையும் எம்ஜிஆர் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இருவர் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 98 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஷாருக்கான் நாயகனாக நடிக்க திருசியை படத்தை இயக்கினார் அது மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக அமைந்தது 2000 ஆவது ஆண்டு காதலை மையமாக வைத்து மாதவன் ஷாலினியை ஹீரோ ஹீரோயினாக வைத்து எடுத்த படம் தான்.
அலைபாயுதே அது மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அடுத்தது கன்னத்தில் முத்தமிட்டால் ஆயுத எழுத்து குரு பிராமணன் கடல் போன்ற பல படங்கள் அடுத்தடுத்த அவர் படைப்பில் வெளிவந்தாலும் சில படங்கள் தோல்வியிலும் வசூல் இருக்கிறது வெற்றி பெறாமல் போய்விட்டது 2015 ஆம் ஆண்டு துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து எடுத்த படம் காதல் கண்மணி ஒரு புதுமையான படைப்பாக அதுவரை யாரும் சொல்லாத ஒரு காதல் கதையை சொல்லிய படமாக ஒரு காதல் கண்மணி அமைந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது ஆனால் அதற்கு அடுத்த எடுத்த காற்று வெளியிடை படம் பெரும் தோல்வியில் முடிந்தது.
2018 ஆம் ஆண்டு செக்க சிவந்த வானம் ஒரு குடும்பத்துக்குள் ஏற்படுகின்ற சகோதரர் யுத்தத்தை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் இது மகாபாரதத்தின் கதைகளை பேஸ் பண்ணி எடுத்த திரைப்படமாக செக்க சிவந்த வானம் அமைந்திருந்தது அடுத்தது கல்வி எழுதிய மாபெரும் நாவலான பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய படைப்பை ஒன்று இரண்டு என்று இரண்டு பிரிவுகளாக வெளியிட்டு மாபெரும் வெற்றி படங்களாக எடுத்தார் மணிரத்தினம் இப்படி தான் எடுத்த 90 சதவீத படங்களை மிகப்பெரிய வெற்றி படங்களாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத ஓர் உயரிய இடத்தில் வைக்கப்படும் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுகின்ற மணிரத்தினம் ஏழு தேசிய விருதுகள் ஆறு பிலிம்பேர் விருதுகள் மூன்று பாலிவுட் ஃபிலிம் ஃபேர் விருதுகள் என நிறைய விருதுகள் வாங்கியிருக்கும் மணிரத்தினம் தமிழ் திரைப்பட படைப்பாளிகளில் ஆகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்து நமது மனதோடு நெருக்கமாக இருக்கின்ற மணிரத்தினம்.

மணிரத்தினம் பிறந்த தினம் ஜூன் 2 இன்று கொண்டாடப்படுகிறது. எல்லா வளங்களும் நலங்களும் பெற்று மேலும் மேலும் சிறப்புற்று இன்னும் பல ஆகச் சிறந்த படைப்புகளை படைக்க வேண்டும் என்று சூரியன் எப்எம் நேயர்கள் சார்பாக மணிரத்தினம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

