ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் திரைப்படத்தின் teaser தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பொதுவாக வரலாற்றுச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் மரைக்காயர் திரைப்படமும் கி.பி.1500-களில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் இஸ்லாமிய கடற்படை தலைவனான முஹம்மத் அலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் திரைப்படமாகும்.

மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் என்று மக்களால் அழைக்கப்படுகிறார். கடல் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்து நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்த போர்ச்சுகீிய படைகளை எதிர்த்து மரைக்காயர் தனது படை கொண்டு போராடியிருக்கிறார்.
இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருவரின் வாழ்க்கை வரலாறை படமாக பார்க்க இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மரைக்காயர் திரைப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் லாலேட்டன் மோகன்லால் மரைக்காயரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பிரணவ் மோகன்லால், ஆக்சன் கிங் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், ஃபாசில், சித்திக், நெடுமுடி வேணு, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாபெரும் நட்சத்திர படை இணைந்து நடிக்கும் இப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை ஈட்ட வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியாகியுள்ள teaser வீடியோ இப்படத்தை விரைவில் திரையில் காண வேண்டும் என்ற ஆசையை மேலும் ஒரு படி அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். வெறும் 22 நொடிகள் மட்டுமே இருக்கும் teaser வீடியோ மாபெரும் பிரம்மாண்ட படைப்பின் ஒரு சிறிய முன்னோட்டமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மரைக்காயர் திரைப்படத்தின் தமிழ் teaser வீடியோவை கீழே காணுங்கள்.