2007வது வருஷம் நவம்பர் 8 ஆம் தேதி அதுக்கு முந்தின ராத்திரி வரைக்கும் நான் சரியா படம் எடுக்கல, இன்னும் நல்லா படம் எடுத்திருக்கனும்னு, இந்த மாதிரி இவர் மனசுல பல எண்ணோட்டங்கள் ஓடுச்சு. படம் அடுத்த நாள் ரிலீஸ் ஆனது அப்புறம் இந்த மனிதரோடு பெயர் பட்டி தொட்டி வரைக்கும் இளைஞர்கள் மனசுல ஆழமா பதிஞ்சுது. அந்த பெயர் தான் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆரம்பகால கட்டத்துல இயக்குனர் பாலுமஹேந்திரா கூட உதவி இயக்குனரா வேலை செஞ்சாரு. ஒரு நல்ல ஆசான் தான் நல்ல மாணவர்கள உருவாக்க முடியும்.

அந்த வகைல இயக்குனர் பாலுமஹேந்திரா நல்ல மாணவன தான் தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்காரு அவர் தான் நம்ம இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவனை தொடர்ந்து ஆடுகளம் , விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை பாகம் 1,2-னு இந்த மாதிரி பல நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது மட்டும் இல்லாமல் பல விருதுகளும் வாங்கி கொடித்திருக்காரு. பொல்லாதவன் படத்துக்கு முதல் தேசிய விருது வாங்குறாரு சிறந்த திரைக்கதைக்காக. அதுக்கு அப்புறம் விசாரணை படத்துக்கு இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதும் வாங்குறாரு. சில படங்களுக்கு தயாரிப்பும் பண்ணியிருக்காரு. இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா 2024வது வருஷம் ஜனவரி 31ஆம் தேதி International Film Festival Rotterdam-ல விடுதலை பாகம் 1-2 படம் வெளியிட்டாங்க, உலக நாடுகள்ல இருந்து, பல சினிமா ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து தொடர்ந்து அதிர்வலை வீசியது அந்த அரங்கத்துல ரசிகர்களின் கை தட்டலால்.வெற்றி நாயகனுக்கு என்றுமே வெற்றி தொடரட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
Article by RJ ர. சதீஷ்