நடிகர் நகுலுக்கு கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதை தனது சமூகவலைத்தள பக்கத்தில் நகுல் தன் ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டி அந்த பெயரையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு சேர்த்து, தாங்கள் தங்களது குழந்தைக்கு குல்பீ என பெயர் சூட்டியுள்ளோம் என தவறாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். குல்பீ என்பது தங்கள் செல்ல மகளின் செல்லப் பெயர்தான். நகுல் எனும் பெயரிலிருந்து “குல்”, ஸ்ருபீ எனும் பெயரிலிருந்து “பீ” எனும் வார்த்தைகளை இணைத்து குல்பீ என தங்களது மகளை அழைப்பதாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவை கீழே காணுங்கள்.
அதற்கு அடுத்த பதிவில் தங்களது மகளின் உண்மையான பெயரை நகுல் வெளியிட்டுள்ளார். தனது மகளுக்கு அகீரா என பெயர் சூட்டி உள்ளார் நகுல். இந்தப் பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இரு பதிவுகளாக நகுல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நகுல் மற்றும் ஸ்ருபீ தம்பதியினருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.