தன்னோட வாழ்க்கையில பல துறையில முன்னோடியா இருக்கவங்க தான் நடிகை, தயாரிப்பாளர், இயக்கனர் ராதிகா சரத்குமார். தமிழ் சினிமா, தெலுங்கு திரையுலகம்னு, திரைப்படம் மற்றும் நாடக தொடர்ல நடிச்சி, தனுக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கிருக்காங்க. அதுமட்டும்இல்ல இந்தி, மலையாளம், கன்னட போன்ற திரைப்படங்கள்ல நடிச்சிருக்காங்க. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களோட பொண்ணு தான் ராதிகா.

தற்செயலா இயக்குனர் பாரதிராஜாவை சந்திக்கிற சூழ்நிலை. அப்ப, ராதிகா அவங்களோட திரைப்பட பயணம் ஆரம்பமாச்சு. “கிழக்கே போகும் ரயில்” – 1978 வெளியான இந்த திரைப்படம் மூலம் நடிகையா அறிமுகமானார். அதுக்கு அப்புறம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம்னு பல மொழிகள்ல நடிச்சாங்க. நடிகையாக மட்டும் இல்லாம தயாரிப்பாளரா 1985ல வெளியான “மீண்டும் ஒரு காதல் கதை” படத்தை தயாரிச்சாங்க.

அவங்களோட நடிப்புக்காக பல விருதுகள சம்பாதிச்சாங்க. அனா, இது இல்லாம எதாவது செய்யணும்னு ஆசை பட்டு, சின்னத்திரையில அடி எடுத்து வெச்சாங்க. தன்னை சேர்ந்தவங்க இது தவறான முடிவுன்னு சொன்னாலும், தன்னோட முயற்சியில அத மாத்தி அமைச்சாங்க. தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து தன்னோட நம்பிக்கையாளா ஜெயிச்சாங்க.

2019 – அவருக்கு “நடிகவேல் செல்வி” விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகை, தயாரிப்பாளர், துணை நடிகை, வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளை சம்பாதிச்சு, தன்னோட முயற்ச்சியில தனி அடையாளத்தை உருவாக்கிருக்காங்க.
Article by – RJ Keerthi