மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள Selfie திரைப்படத்தின் trailer தற்போது youtube-ல் வெளியாகியுள்ளது. கல்லூரிகளில் சீட் வாங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது போல தெரிகிறது.
Selfie திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் உடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், குணாநிதி, வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதையின் நாயகனான ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களே இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள Bachelor திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாய் இந்த trailer update வந்துள்ளது. ஜி.வி-ன் படங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருப்பதால் அவரது படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
இப்படத்தின் trailer பார்ப்பதற்கே விறுவிறுப்பாகவும், படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை கூட்டும் விதத்திலும் இருக்கிறது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனமான தோற்றமும் வசனங்களும் trailer-க்கு மேலும் பலம் சேர்க்கிறது.
சமீப காலங்களில் கௌதம் வாசுதேவ் மேனன் நிறைய படங்களில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வில்லனாக கௌதம் மேனன் நடிப்பதை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Selfie திரைப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் இருந்தே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Selfie திரைப்படத்தின் trailer-ஐ கீழே காணுங்கள்.
இப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.