வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்துள்ள மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை சிம்பு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
Time Loop Concept-ஐ வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் அனைத்து தரப்பான ரசிகர்களுக்கும், ஒரு நல்ல படம் பார்த்த எண்ணத்தை கொடுத்துள்ளது. சிம்பு அவர்களின் Comeback-ற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மாநாடு மாஸ் Comeback-ஆக அமைந்துள்ளது.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான மெஹரசைலா பாடலின் வீடியோ தற்போது youtube-ல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்பாடல் யுவன் ரசிகர்களின் Playlist-ல் முதல் பாடலாக ஒலித்து வருகிறது. பொதுவாக யுவனின் குரலில் ஒலிக்கும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு தாறுமாறாக இருக்கும். அந்த வகையில் Yuvan Drugs list-ல் மெஹரசைலா பாடலும் இணைந்துள்ளது.
இப்பாடலுக்கு பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். இப்பாடல் வெளியான பிறகு நிறைய திருமண மண்டபங்களில் தவறாமல் மெஹரசைலா ஒலித்து வருகிறது. சிலம்பரசனின் துறுதுறுப்பான நடனம் இப்பாடலுக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
மெஹரசைலா வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை youtube-ல் பெற்றுள்ளது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு மெஹரசைலாவின் வீடியோ கூடுதல் விருந்தாக அமைந்துள்ளது.
மெஹரசைலா பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.