Cinema News Stories

CV Sridhar: தமிழ் சினிமாவின் தனித்துவம்

cv sridhar Special Article in tamil
cv sridhar Special Article in tamil

தமிழ் சினிமா பல பேரோட அடையாளமா இருந்துருக்கு ஆனா சில நேரங்கள்ல தமிழ் சினிமாவோட அடையாளமா சிலர் இருந்துருக்காங்க.அந்த சிலர்க்கு முன்னோடியா இருந்த ஒருத்தர பத்தின கதை தான் இது.நம்ம கதாநாயகன் பொறந்தது செங்கல்பட்டுள்ள தான்

1951-ல 18 வயசு நிரம்பிய ஸ்ரீதர் தான் எழுதிய லட்சியவாதி என்ற கதையை ஏவிஎம் (AVM) நிறுவனத்திடம் கொண்டு போனாரு. ஆனால் இயக்குனர் பி. நீலகண்டன் அந்த கதையை நிராகரிச்சிட்டாரு. இதனால் சற்றும் மனம் தளராத ஸ்ரீதர், நாடக உலகின் ஜாம்பவான் அவ்வை டி.கே. சண்முகத்திடம் கதையைக் கூறினார். கதையால் கவரப்பட்ட சண்முகம், அதை நாடகமாக அரங்கேற்றினார். பின்னர் இதே கதைதான் 1954-ல் சிவாஜி கணேசன் நடிப்பில் ரத்த பாசம் என்ற மெகா ஹிட் திரைப்படமாக உருவெடுத்தது. ஏவிஎம்-மில் நிராகரிக்கப்பட்ட அதே ஸ்ரீதர், பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.

ஒரே கதையை மூன்று மொழிகளில் சூப்பர் ஹிட்டாக்கிய சாதனை-ஸ்ரீதர் தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட்டிலும் (ஹிந்தி) முத்திரை பதித்தவர். அவர் தமிழில் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அதை தெலுங்கில் ‘மனுஷுலு மமதி எலு’ என்றும், ஹிந்தியில் ராஜேந்திர குமார், மீனாகுமாரி நடிப்பில் ‘தில் ஏக் மந்திர்’ (Dil Ek Mandir) என்றும் ரீமேக் செய்தார். ஆச்சரியம் என்னவென்றால், ஒரே உணர்வுபூர்வமான கதையை மூன்று வெவ்வேறு மொழி ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றி, மூன்று மொழிகளிலுமே அந்தப் படத்தை வெள்ளி விழா (Silver Jubilee) கொண்டாட வைத்தார் ஸ்ரீதர்.

காதலிக்க நேரமில்லை (1964) தமிழ் சினிமாவின் எக்காலத்திற்குமான மிகச்சிறந்த நகைச்சுவைத் திரைப்படம். நாகேஷ் மற்றும் டி. எஸ். பாலையா கூட்டணியின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிக்கப்படுபவை.அதுவரை சினிமாவில் இருந்த மிக நீண்ட, அடுக்குமொழி வசனங்களுக்குப் பதிலாக, மக்கள் அன்றாடம் பேசும் எளிய தமிழ் வசனங்களை அறிமுகப்படுத்தி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

இன்னைக்கு எத்தனையோ இயக்குநர்களோட படங்களை நாம கொண்டாடிட்டு இருக்கோம் ஆனா இதுக்கெல்லாம் விதை போட்டவாறு அவர் தான்.அவரோட நெஞ்சில் ஓர் ஆலையம்,சிவந்த மண்,மீனவ நண்பன்னு எத்தனையோ படங்களை காலம் கடந்து காவியங்களை இருக்கு.எம் ஜி ஆர் ,சிவாஜி ல ஆரம்பிச்சு ரஜினி ,கமல் வர அன்னைக்கு இருந்த எல்லா சூப்பர்ஸ்டார்ட்ஸ்க்கும் ஹிட்டான படம் கொடுத்து என்னைக்கும் சினிமால தனக்குனு ஒரு இடத்தை அமைச்சிக்கிட்ட இயக்குனர் ஸ்ரீதருக்கு சூர்யன் fm சார்பாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இந்த கதையை முடிக்குறேன்.

Article By – RJ Mozhiyan

About the author

Sakthi Harinath