Cinema News Stories

Chitra Birthday Special | சின்னக்குயில் சித்ரா ஸ்பெஷல்

Chitra Birthday Special in Tamil | சின்னக்குயில் சித்ரா ஸ்பெஷல்
Chitra Birthday Special in Tamil | சின்னக்குயில் சித்ரா ஸ்பெஷல்

இந்திய இசை உலகத்துல எத்தனை பாடகர்கள் வந்தாலும், சில குரல்கள் மட்டும் காலத்தைக் கடந்தும் நம்ம மனசுல எப்பவும் நிலைச்சு நிற்கும். அப்படிப்பட்ட ஒரு குரல் தான் சின்னக்குயில் சித்ரா அம்மாவோட குரல். 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள்… தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, வங்காளம், அசாமி அப்டின்னு பல மொழிகள்ல பாடி இந்திய இசை உலகத்துல தனக்குன்னு ஒரு தனி இடத்தை பிடிச்சிருக்காங்க சின்னக் குயில் சித்ரா.

1963 ஜூலை 27-ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்துல பிறந்த சித்ரா அம்மாவுக்கு, இசைன்னா சின்ன வயசுல இருந்தே உயிர். வெறும் ஐந்து வயசுலயே அகில இந்திய வானொலியில முதல் முறையா பாட ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் பள்ளி படிக்கும்போதே கே.ஜே. யேசுதாஸ் கூட பாடுற வாய்ப்பு கிடைச்சது. அந்த வாய்ப்பே அவங்களோட இசைப் பயணத்துக்கு ஒரு பெரிய திருப்புமுனையா அமைஞ்சது.

அதுக்கப்புறம் தரங்கிணி ஆல்பங்கள் ( யேசுதாஸால் 1980-களில் கேரளாவில் வெளியிடப்பட்ட இசை ஆல்பம் ), மேடை நிகழ்ச்சிகள் அப்படின்னு தொடர்ந்து பாட ஆரம்பிச்ச சித்ராம்மாவோட குரல், பல இசையமைப்பாளர்களையும் கவர்ந்தது. அதனால நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. அந்த வாய்ப்புகளை தேடி சென்னை வந்த சித்ராம்மாவுக்கு இளையராஜா இசையில பாடுற வாய்ப்பு கிடைச்சது. “பூஜைக்கேத்த பூவிது”, “கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட” மாதிரி பாடல்கள், அவரோட இசைப் பயணத்துக்கு பெரிய கதவை திறந்து வச்சது.

அதுக்கப்புறம் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களோட சேர்ந்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தாங்க. “அஞ்சலி அஞ்சலி”, “கண்ணாளனே”, “மலர்கள் கேட்டேன்” மாதிரி பாடல்களை கேட்கும்போது, அந்தப் பாடல்களுக்கு சித்ராம்மா உயிரே கொடுத்த மாதிரி இருக்கும்.

விருதுகளைப் பொறுத்தவரைக்கும், இந்திய தேசிய திரைப்பட விருதை ஆறு முறை, தென்னிந்திய பிலிம்பேர் விருதை ஆறு முறை, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகானு நான்கு மாநில விருதுகளையும் பெற்ற ஒரே பின்னணிப் பாடகி சித்ராம்மா தான். அதுமட்டுமில்லாம, இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதும் சித்ராம்மாவுக்கு வழங்கப்பட்டு இருக்கு.

தலைமுறைகள் மாறலாம் இசையின்… ட்ரெண்ட் மாறலாம்… ஆனா மெலோடிய தேடுற ஒவ்வொரு மனசுக்கும் எப்பயுமே ஆறுதலா இருக்கும் சித்ரா அம்மாவோட குரல். இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாடுற சின்னக்குயில் சித்ராம்மாவுக்கு, இவ்வளவு அழகான பாடல்கள நமக்கு குடுத்ததுக்கு நன்றியையும், சூரியன் FM சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

Article by – RJ Sandhiya