70s ல இருந்து இப்போ வரைக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகளை தமிழ் சினிமால நடிச்சி தனக்குன்னு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திகிட்டாங்க..
இப்படி சிறந்த நடிப்பு திறமையா சினிமால காமிச்ச எத்தனையோ நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்களாலும் சினிமா துறையினர்களாலும் புனைப்பெயர்கள் வழங்கப்பட்டது..
ஆனா 1978 சிகப்பு ரோஜாக்கள் படத்துல தொடங்கி கிட்டதட்ட 350 படங்களுக்கு மேல தன்னோட சிறந்த நடிப்ப வெளிப்படுத்துன ஒரு பன்முக நடிகைக்கு புனைப்பெயர் இல்லன்னு சொன்னா ஒங்களால நம்ப முடியுமா..!?
என்னதா புனைப்பெயர் இல்லனாலும் பல சினிமா துறையினர்கள், பார்வையாளர்கள தன்னோட கம்பீரம் மற்றும் எதார்த்த நடிப்பால மிரண்டு போகவச்ச பன்முகத்திரமையின் நடிப்பு அரசி தான் நடிகை வடிவுக்கரசி..
1962 ஜூலை 7 சென்னையில பிறந்த இவங்க ஒரு சினிமா குடும்பத்த சேர்ந்தவங்க. 60கள்ள தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், மேல்நாட்டு மருமகள், காரைக்கால் அம்மையார் போன்ற படங்கள இயக்குன இயக்குநர் ஏ. பி.நாகராஜன் உடைய தம்பி மகள் தான் நடிகை வடிவுக்கரசி. ஏ. பி. நாகராஜன் உடைய இயக்கத்துள்ள 1976 நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் நடிகை சாவித்ரி ஓட நடிப்புல வெளியான வடிவுக்கு வளைகாப்பு படத்தின் நினைவகத்தான் வடிவுக்கரசி என்று பெயர் வைக்கப்பட்டது.
நடிகை வடிவுக்கரசியோட பெரியப்பா எப்படி இயக்குனரா சினிமா துறையில இருந்தாரோ அதேபோல அவருடைய அப்பாவும் சினிமா துறையில பைனான்சியரா இருந்தாரு. என்னதான் தான் குடும்பமே சினிமா துறையில் இருந்தாலும் நடிகை வடிவுக்கரசிக்கு படிப்புல சாதிக்கணும்னு ஆசை.
வசதியா இருந்த வடிவுக்கரசியோட குடும்பம் சில பொருளாதார நஷ்டத்தால ஏழையா மாறிட்டாங்க இதனால அவங்களோட படிப்பு கனவும் PUC யோட நின்றுச்சு. ஏழ்மையில இருந்த தன்னோட குடும்பத்தை மீட்டெடுகுறதுக்கான பொறுப்பு வடிவுக்கரசிக்கு வந்தது.. அதனால ஜவுளி கடை, ஹோட்டல், பள்ளிக்கூடத்துல ஆசிரியராக மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில தொகுப்பாளர் போன்ற கிடைக்குற வேலைகள்லாம் செய்ய ஆரம்பிச்சாங்க.
அதே சமயம் விமான பணிப்பெண் வேலைக்காக ஒரு போட்டோவ எடுத்தாங்க நடிகை வடிவுக்கரசி. ஆனா அப்போ அவங்களுக்கு தெரியாது அந்த போட்டோ தான் அவங்கள சினிமாவுக்கு அழைச்சிட்டு போகும்னு. பாரதிராஜாவின் உதவியாளரான பாலகுருவிடம் அந்த போட்டோ போக அம்மன் கிரியேஷன்ஸ் அலுவலகத்தில இருந்து நடிகை வடிவுக்கரசிக்கு அழைப்பு வந்திருக்கு. சினிமாவுல நடிக்க விருப்பம் இல்லங்குறத சொல்றதுக்காக அம்மன் கிரியேஷன்ஸ் அலுவலகத்திற்கு போன நடிகை வடிவுக்கரசி முதல்முறையா இயக்குனர் பாரதிராஜாவை சந்திக்கிறாங்க.
அந்த காலத்துல பல பேர் தனக்கு சினிமால நடிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சுராதனு ஏங்கிட்டு இருந்தபோ நடிகை வடிவுக்கரசிக்கு தானாக வாய்ப்பு தேடி வந்தும் அத நிராகரிச்சாங்க, ஏன்னா அவங்க குடும்பம் சினிமானால தான் நஷ்டத்துல வந்தது அதனால குடும்பமே அதை எதிர்த்தாங்க.
என்னதான் இவங்க சினிமாவை விட்டு தூரமா போனாலும் சினிமா இவங்கள விடல. பாரதிராஜா உடைய இயக்கத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு திரும்ப இவங்கள தேடி வந்தது. வந்த வாய்ப்பு மீண்டும் நிராகரிச்சாங்க வடிவுக்கரசி. ஆனா அவங்க கூட வேலை பார்த்தவங்க சினிமா வாய்ப்பை பத்தி எடுத்து சொல்லி நடிக்க அனுப்பி வச்சாங்க. வீட்டுக்கு தெரியாம பயத்தோடவே நடிக்கப் போன அந்த முதல் திரைப்படம் தான் 1978 இயக்குனர் பாரதிராஜா ஓட இயக்கத்துல நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடிப்புல வெளியான சிகப்பு ரோஜாக்கள்.
படப்பிடிப்பு சமயத்துல வீட்ல விஷயம் தெரியவர வடிவுக்கரசி உடைய அப்பா எதிர்க்க ஆரம்பிச்சாரு ஆனா அவங்களுடைய அம்மா எப்படியோ பேசி சம்மதிக்க வச்சாங்க. சிகப்பு ரோஜாக்கள் படம் வெளியானதுக்கு அப்புறம் பலரும் வடிவுக்கரசி உடைய நடிப்பை பாராட்டி பேச ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல எதிர்த்த குடும்பம் பின்னாடி சம்மதிக்கவும் நடிகை வடிவுக்கரசியும் பல படங்கள்ல தன்னுடைய நடிப்பு திறமைய வெளிப்படுத்துனாங்க..
1979 கே. பாக்யராஜோட இணைந்து கதாநாயகியா நடிச்ச கன்னிபருவத்திலே திரைப்படம் மூலமா தான் நடிகை வடிவுக்கரசியோட நடிப்பு திறமை முழுமையா வெளிய வந்தது, அந்தப் படமும் மாபெரும் வெற்றி அடைஞ்சது. கன்னிப்பருவத்திலே திரைப்படத்ததுல நடிகை வடிவுக்கரசியோட நடிப்பு திறமையை பார்த்து பல பட வாய்ப்புகள் அவங்கள தேடி வந்தது..
பல படங்கள்ல கதாநாயகியாக நடிச்சிட்டு இருந்த இவங்க பின்னாடி குணச்சித்திர நடிகையா மாறினாங்க.
1982ல வெளியான வா கண்ணா வா திரைப்படத்தில நடிகர் சிவாஜி கணேசனுக்கு மகளா நடிச்ச நடிகை வடிவுக்கரசி பின்னாடி 1985 ல இயக்குனர் பாரதிராஜா ஓட இயக்கத்துல வெளியான முதல் மரியாதை படத்துல நடிகர் சிவாஜி கணேசன் உடைய மனைவியா பொண்ணாத்தான்ங்குற கதாபாத்திரத்துல நடிச்சு பலரையும் மிரண்டு போக வச்சாங்க. அதேபோல 1997 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் உடைய நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்துல மூத்த வேதவள்ளிகுற வில்லி கதாபாத்திரம் பண்ணி இருப்பாங்க. நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்மறை கதாபாத்திராம நடிகை வடிவுக்கரசி நடிச்சிருந்ததுனால அவரோட ரசிகர்கள் கிட்ட இருந்து சில எதிர்ப்புகள் வந்தது. ஆனா அது எதையும் மனசுல ஏத்துக்காம அடுத்ததா 2007ல இயக்குனர் ஷங்கருடைய இயக்கத்தில வெளியான சிவாஜி திரைப்படத்துல நடிகர் ரஜினிகாந்தின் அம்மாவா நடிச்சி இருப்பாங்க..
இப்படி கிட்டத்தட்ட 350 படங்களுக்கு மேல நடிகை கதாபாத்திரமும் குணச்சித்திர கதாபாத்திரங்களும் பண்ணி இருக்காங்க. அது கூடவே சின்ன திரையிலையும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்கள்ல நடிச்சிருக்காங்க. என்னதான் தன்னுடைய சொந்த வாழ்க்கையில சில கசப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும் அதை எதையும் தொழில் வாழ்க்கையில காமிச்சிக்காம இப்ப வரைக்கும் தன்னோட கம்பீர நடிப்பை திரையில காமிச்சிட்டு இருக்குற நடிகை வடிவுக்கரசிக்கு சூரியன் FM சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Article by – RJ Durga

