வயலும் வயல் சார்ந்த இடங்கள்னா மருதம் நிலம்னு மத்தவங்க சொல்லுவாங்க, ஆனா சினிமா ரசிகர்கள் கிட்ட வயலும் வயல் சார்ந்த இடமம்னா பாரதிராஜாவின் படங்கள்னு சொல்லுவோம்!
தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றியவர்!
என் இனிய தமிழ் மக்களே! -என்ற இவரின் தொடக்கம், ரசிகர்களான நம் புன்முறுவலோடு தொடங்கும் படங்கள் பாரதிராஜா era!
மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வையும் உலக திரையில் பதித்த இயக்குனர். கிராமத்து வாழ்க்கையின் எளிமையும் எதார்த்தமும் பாரதிராஜாவின் பார்வையின் வழி படங்கள் மூலம் உலகிற்கு நிரூபிக்கப்பட்டது. studio set இல் இருந்த camera வயல், காடு, மேடு கள் பயணித்தன….
நம்மால் பாரதிராஜாவாக அறியப்படும் சின்னசாமியின், சின்ன ஆசை சிறுவயதிலிருந்தே நாடகங்கள் எழுதுவதிலும் இயக்குவதிலும் இருந்த ஆர்வம், வளர வளர சினிமா மீதுள்ள காதலும் வளர்ந்து திரைக்கதை எழுதுவது, இயக்குவது, நடிப்பது, தயாரிப்பது என ரசிகர்களை இவரின் படத்திற்கான காத்திருக்கும் ஆர்வத்தையும் அதிகரித்தது. 16 வயதினிலே இல் தொடங்கிய இவரது சினிமா பயணம், முதல் படமே தேசிய விருது பெற்ற இயக்குனராக தடம்பதித்தார். தமிழ் அல்லாது தெலுங்கிலும் இவர் இயக்கிய முதல் படம் தேசிய விருதையும் நந்தி விருதையும் பெற்றுத்தந்தது . 50 ஆண்டுகள் தொடர்ந்து 48 படங்கள் 6 தேசிய விருதுகள் 6 தமிழ்நாடு மாநில விருதுகள், flim dare awards என இவரின் விருதுகளின் கணக்கும், வெற்றி படங்களின் வசூலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
இன்று தமிழ் சினிமாவில் போற்றப்படும் எத்தனையோ நடிகர், நடிகைகள் அன்று பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். ‘R ‘என்ற எழுத்தில் தொங்கும் நடிகர்களின் பெயர் கேட்டாலே பாரதிராஜா அறிமுக படுத்தியவர் என்று அடையாளம் காண முடியும்.
ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, கார்த்திக், பாண்டியன், நெப்போலியன், ப்ரியாமணி என versatile actor ஆக சொல்லப்படும் நடிகர்கள் இவராலே அறியப்பட்டவர்கள். பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, பொன்வண்ணன் போன்ற இயக்குனர்கள் பாரதிராஜாவின் பட்டறையில் செதுக்கப்பட்டவர்கள். இன்று 2k kids meme template trend செய்தாலும். பாரதிராஜாவின் வசனங்கள் இன்றும் 90’s kids ஆல் மனதில் மலரும் நினைவாக உள்ளது.
என் பேரு சப்பாணி இல்ல!
குத்துங்க எஜமா குத்துங்க!
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும் சாமி!
டீச்சர், நான் பாஸ் ஆகிட்டேன்!
போன்ற dialogues மறப்போமா நம்ம! கிராமத்து வாழ்வியலை திரையில் காட்சிபடுத்துவது மட்டுமில்லாமல் சமூக அக்கறை மிக்க கருத்துக்கள் இவரின் கதையிலும், வசனத்திலும் அமைந்திருக்கும்.
மதங்களை கடந்த காதலாக – அலைகள் ஓய்வதில்லை
பெண் இனி அடிமையில்லை என – புதுமைப்பெண்
காதலுக்கு ஜாதியில்லை பற்றி – வேதம் புதிது
காதலிக்க வயதில்லை என – முதல் மரியாதை
அண்ணன் தங்கை உறவுக்கு – கிழக்கு சீமையிலே
பெண் சிசு கொலையை எதிர்த்து – கருத்தம்மா
குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆனா பெண்ணா என்று கண்டறிவதை தடை செய்ய ஆக்கபூர்வமாக அமைந்த படம், தன் தாயாரின் பெயரிலே – கருத்தம்மா என பெயரிடப்பட்டது. மாற்றத்தை எதிர்நோக்கியே காட்சிப்படுத்தப்பட்ட படங்கள் ஏராளம்.
ஆயுத எழுத்து தொடங்கி, நம்ம வீட்டு பிள்ளை, திருச்சிற்றம்பலம் படங்களில் தாத்தாவாக பார்க்கப்பட்ட கதாபாத்திரம். நடிகர் அவதாரமும் எடுத்தவர். இன்றளவும் பார்த்து ரசித்து மகிழ்ந்துகொண்டு இருக்கிறோம், இவரின் படங்களையும் பாத்திரத்தையும்.
வெள்ளித்திரை அல்லாது சின்ன திரையிலும் பயணித்தவர். பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் போட்ட மெட்டுகள் அனைத்தும் Hitகள். இனிய இரவாக ஒருஒரு இரவையும் மாற்றிய இயக்குனர் இன்று உறங்கச்சென்றார். மண் வாசனையை அறியச்செய்த பாரதிராஜா இன்று மண் வாசனையில் ஓய்வெடுக்கிறார். தமிழ் மீதுள்ள பற்றும் மண் மீதுள்ள மரபும் பாரதிராஜாவின் ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து நினைவுகூருவோம். திரையுலகத்தில் கிராமத்து வாழ்வியலை எதார்த்தமாக காட்டி தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த நம் பாசத்துக்குரிய இயக்குனர் பாரதிராஜா
உறங்கட்டும் தமிழ் அன்னை மடியில்! – மண் வாசனை அருகில்!
Article By – RJ Hasini

