காட்டின் மௌனத்தை ஒரு கர்ஜனையால் கிழித்தெறியும் காவிய நாயகன்… புலி!அதோட உடம்புல இருக்குற ஒத்தொரு வரியும், இயற்கை செதுக்குன வீரத்தோட வரலாறு. கண்ணுல தீப்பொறி, நடையில ராஜ கம்பீரம், பாய்ச்சல்ல மின்னல் வேகம்! காடுகளோட கிரீடம் இல்லாத பேரரசன் இந்த புலி.
அடர்ந்த காடுகளையும், அசைந்தாடும் புல்வெளிகளையும் தன் ஆளுகைக்குள்ள வச்சிருக்கிற, இயற்கையோட ஆகச்சிறந்த படைப்பு!அப்படிப்பட்ட புலியை, வெறும் மிருகமா பார்க்காம… கடவுளா வணங்குற ஒரு புண்ணிய பூமிக்குத்தான் நாம இப்போ போகப்போறோம்!
மேற்கு வங்காளத்துல இருக்க சுந்தரவன காடுக்குள்ள கால் எடுத்து வைக்கறதுக்கு முன்னாடி Bon Bibi-யை வேண்டிக்கிட்டுதான் மீன் பிடிக்கவோ, தேன் எடுக்கவோ உள்ளே நுழைவாங்க உள்ளூர் மக்கள்.
யார் இந்த Bon Bibi? அவங்களுக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?
West Bengal-ல அடர்ந்த, ஆபத்தான சுந்தரவன காட்டுக்குள்ள போகும்போது, உள்ளூர் மக்கள் புலிய வெறும் ஒரு wild animal-ஆ மட்டும் பாக்காம, பயமும் பக்தியும் கலந்த ஒரு சக்தியாத்தான் பாக்கறாங்க.
சரி… இதுக்கும் Bon Bibi-க்கும் என்ன சம்பந்தம்?
பழங்காலத்துல அசுர குணமும் பேராசையும் கொண்ட Dakshina Ray-ங்கிற ஒரு அரசன் இருந்தாராம். அவர் மாபெரும் புலி உருவத்துலதான் காட்டு வழியா போற மக்கள வேட்டையாடிட்டு இருந்தாரு. அப்போதான் காட்டோட ஏழை மக்கள காப்பாத்த Bon Bibi-ங்கிற பெண் தெய்வம் அவதரிச்சாங்க.அட்டகாசம் பண்ணிட்டு இருந்த புலியோட ஒரு ஒப்பந்தம் போட்டாங்க. காட்டுக்குள்ள பேராசையோட யாரு வந்தாலும் புலிக்கு இரையாயிடுவாங்க… ஆனா பிழைப்புக்காக உள்ளே வர்ற அப்பாவி மக்கள அதுவொண்ணும் பண்ணக்கூடாதுனு.
அன்று முதல் இன்று வரை காடுக்குள்ள போனா… அது நம்மளோட இடம் மட்டும் இல்ல… அங்க நம்ம வெறும் விருந்தாளிதான்கிற இயற்கையோட விதிய கடைப்பிடிக்கறாங்க சுந்தரவன மக்கள். இன்னைக்கும் மதங்களை மறந்து, காட்டோட காவல் தெய்வமான Bon Bibi-யை வணங்கிட்டுதான் காடுக்குள்ள கால் பதிக்கறாங்க. இந்தக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்…
புலிகள் வெறும் வன விலங்குகள் மட்டும் இல்ல… இயற்கையோட வரம்னே சொல்லலாம். அது ஒரு apex predator, அதாவது உணவுச் சங்கிலியினுடைய உச்சியில இருக்கிற அரசன்.
இதுதான் ecosystem balance-க்கு ஒரு பெரும் பங்காற்றுது. அதாவது ஒரு காட்டுல புலிகள் இருந்தாதான் மான், காட்டுப் பன்றி போன்ற herbivores, அதாவது தாவர உண்ணிகள் அதிகமாகி காட்டை அழிச்சிடாம பாதுகாக்க முடியும்.
இந்தப் புலிகள்தான் நம்ம water resources-ஐயும் காப்பாத்திட்டு இருக்கு. பல முக்கியமான நதிகள் origin ஆகுற இடமே இந்தக் காடுகள்தான். அதனால நம்ம புலிகள காப்பாத்தறது மூலமா, நமக்கான குடிநீரை மறைமுகமா காப்பாத்திட்டு இருக்கோம்னு சொல்லலாம்.
Project Tiger போன்ற பல முன்னெடுப்புகள எடுத்துட்டு, நம்ம இந்தியா புலிகள பாதுகாத்துட்டு வர்றது மட்டும் இல்லாம, 3682 புலிகளோட, அதாவது உலகத்தோட 70% tiger population-ஓட, இந்தியாதான் புலிகள் எண்ணிக்கையில முதல் இடம் பிடிச்சிருக்கு.
இன்றைய நவீன உலகத்துல மனிதர்களுக்கு இடம் பத்தாம காடுகள ஆக்கிரமிச்சிட்டு இருக்கோம். இதனாலதான் புலிகள் இரைய தேடி ஊருக்குள்ள புகுந்து, man-animal conflict அதிகரிக்குது.புலிகள பாதுகாப்பது அரசாங்கத்தோட கடமை மட்டும் இல்ல, இந்த ecosystem-ல பங்கு வகிக்கிற நம்ம ஒவ்வொருத்தரோட உரிமையும் கூட. இதை moral responsibility-ஆ எடுத்துட்டு, மனிதர்கள் எல்லைகள மதிச்சு நடந்துக்கிட்டா மட்டும்தான் எல்லாரோட எதிர்காலமும் பாதுகாப்பா இருக்கும்!
Article By – RJ NILA

