விஷால் வெங்கட் இயக்கி வெளிவரவிருக்கும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படத்தின் trailer தற்போது youtube-ல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் trailer-ஐ வைத்து பார்க்கும்போது இப்படம் ஒரு யதார்த்தமான கதை அம்சத்தை கொண்டு இருக்கும் என தெரிகிறது.
இப்படத்தில் அசோக் செல்வன், ரீயா, நாசர், மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், ரித்திகா, கே.எஸ்.ரவிக்குமார், பானுப்ரியா, இளவரசு என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் படத்தை திரையில் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் trailer-ஐ உலகநாயகன் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்டுள்ள பதிவில் இப்படத்தின் டிரைலரை அறிமுகம் செய்வதில் தான் உவகை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளியாகியுள்ள trailer-ஐ வைத்து பார்க்கும் போது, ஏதோ ஒரு சம்பவத்தால் இணைக்கப்படும் பல்வேறு கதாபாத்திரங்களின் கதையே இப்படமாக இருக்கக்கூடும் என கணிக்க முடிகிறது. சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டன், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்திலும் நடித்திருப்பதோடு இப்படத்தின் வசனங்களையும் எழுதியுள்ளார்.
இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த மூன்று பாடல்களையும் இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். இந்த மூன்று பாடல்களுக்கும் பாடலாசிரியர்கள் சினேகன், RJ விஜய், மாதேவன் ஆகியோர் வரிகளை எழுதியுள்ளனர்.
இப்படத்தின் trailer-ல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- Happy Birthday Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
- Divya Bharathi Serves Looks, Grace & Glow | Stunning Photos Go Viral
- புண்ணியம் தரும் புரட்டாசி!
- பூஜையில் மணி அடிப்பது ஏன் ?
- திரிசூலத்தின் தத்துவம்
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படத்தின் trailer-ஐ கீழே காணுங்கள்.

