Cinema News Stories

சிவகார்த்திகேயன் – நம்ம வீட்டு பிள்ளை

Sivakarthikeyan Special Birthday Article in Tamil
Sivakarthikeyan Special Birthday Article in Tamil

இன்னைக்கு தமிழ் சினிமாவுல “நம்ம வீட்டு பிள்ளை”ன்னு சொன்னா எல்லாருக்கும் முதல்ல ஞாபகத்துக்கு வர்ற பேர் அப்படின்னா அது கண்டிப்பா நடிகர் சிவகார்த்திகேயனா தான் இருக்கும் . ரொம்ப சாதாரண பின்னணியிலிருந்து வந்து, முழுக்க முழுக்க தன்னோட உழைப்பால இவ்வளவு பெரிய உச்சத்துக்கு வந்த, உழைப்பால் உயர்ந்த மனிதர்.

சினிமாவுக்குள் வர்றதுக்கு முன்னாடி, ஒரு தனியார் தொலைக்காட்சியில ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில பார்ட்டிசிபேட் பண்ணி இருந்தாரு. சரியான டைமிங் காமெடி, பேச்சு ஸ்டைல் இது எல்லாமே மக்களோட மனசை அவர் பக்கம் இழுத்துச்சுன்னு தான் சொல்லணும். அதுக்கப்புறம் ஆங்கரிங், ஸ்டேஜ் ஷோ, ஈவெண்ட் அப்படின்னு ரொம்ப பிசியா ஓடிக்கிட்டே இருந்தாரு. நடிகர் தனுஷ் மூலமா 3 படத்துல சினிமாவுக்கு அறிமுகமானாரு. அதுக்கப்புறம் மெரினா படத்துல ஹீரோவா நடிச்சாரு. அந்த படத்துல அவரோட ஆக்டிங் பிகினர் மாதிரி இருக்காது ப்ரோ மாதிரி ஃபீல் ஆகும்.

ஆரம்பத்துல கொஞ்சம் ஸ்லோவா போனாலும், மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரியான படங்கள் வந்ததும் இவருக்குன்னு தனியா பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.அதுக்கப்புறம் ரஜினிமுருகன், ரெமோன்னு அடுத்தடுத்து வந்த படங்கள் அவரை சினிமா கெரியரோட உச்சத்துக்கு கொண்டு போச்சு. ஆனா சிவகார்த்திகேயன் காமெடி மட்டும் பண்ணுற ஆள் கிடையாது. டாக்டர், மாவீரன் மாதிரி படங்கள்ல சீரியஸா, மாஸ்ஸா, உணர்ச்சியோட நடித்துக் காட்டி, “ஆல்ரவுண்டர்” அப்படின்னு மக்களோட மனசுல ஆழமா பதிஞ்சாறு.

நடிப்புல மட்டும் இல்லங்க பாட்டு எழுதுறது, பாடுறது, படம் தயாரிக்கிறதுனு பல விஷயங்களிலயும் கலக்கிட்டே இருந்தாரு. இவர் இன்னும் எவ்வளவு பெரிய இடத்துக்கு போனாலும்,“கைண்ட் ஹார்ட் பர்சன்னா” தான் இருப்பாரு. மத்தவங்களோட பேசுற விதம், எளிமை, மரியாதை இது எல்லாமே அவரை இன்னும் பெரிய உயரத்துக்கு கொண்டு போகும்.

நம்மள மாதிரி ஒரு சாதாரண மனிதரா ஸ்டார்ட் பண்ணி, இன்னைக்கு தமிழ் சினிமாவுல முன்னணி நடிகரா இருக்குற சிவகார்த்திகேயன், நிறைய பேருக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்காரு. அவரோட பிறந்த நாளான இன்னைக்கு, (17 Feb) அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கறதுல நான் பெருமப்படுறேன்!

Article By – Sandhiya