இந்த உலகம் தோன்றியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றியுள்ளன. அதில் பல உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்து காலத்திற்கேற்ப தனது தகவமைப்புகளை மாற்றிக் கொண்டு தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. அதே சமயம் பல உயிரினங்கள் உலகத்தில் நிகழ்ந்த பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை மாற்றங்கள் காரணமாக அழிந்தும் போயுள்ளன.
இதில் நமக்குத் தெரிந்த உயிரினங்களை தாண்டி தெரியாத பல்வேறு உயிரினங்களும் உள்ளன. அந்த வகையில் இன்றைய சூழலில் நாம் அறிந்திராத நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடிய சில கடல் உயிரினங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
- Cow Fish இந்த விசித்திரமான கடல் உயிரினமானது தலையில் மாட்டுக் கொம்புகள் கொண்ட மீன் போன்ற உருவத்துடன் காட்சியளிக்கிறது.
இவை 10 முதல் 51 செமீ வரையிலான நீளம் கொண்டவை. இந்தோ-பசிபிக் பெருங்கடல் பகுதியில் வாழ்கின்றன.
- Sea Bats… வெளவாலின் தோற்றத்துடன் கடற்பரப்பில் காணப்படுவதால் கடல் வெளவால் என அழைக்கப்படுகிறது.
துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல கடற்பரப்புகளில் காணப்படும் இந்த கடல் வௌவால்கள் பெரும்பாலான நேரங்களில் அதன் துடுப்புகளை பயன்படுத்தி நகர்கின்றன. இவற்றின் வாய் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
- Cotylorhiza Tuberculata எனும் இந்த உயிரி ஒரு வகையான Jelly fish ஆகும். இவை மத்தியதரைக் கடலில் பரவலாக காணப்படுகிறது.
பார்ப்பதற்கு வறுத்த முட்டை போல் காட்சியளிப்பதால் The fried egg எனவும் அழைக்கப்படுகிறது. 35 செமீ அளவு வரை வளரும். இந்த Jelly fish-ன் விஷம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
- Blob Fish… உலகிலேயே அசிங்கமான உயிரினம் எனப் பெயர் பெற்றது.
இதன் தோற்றம் வழுக்கை தலை போன்று இருக்கிறது. உருவம் அருவருக்கத்தக்கதாக அமைந்துள்ளது. மெலிதான ஜெல்லியால் ஆன உயிரினமாக இது உள்ளது.
- Turritopsis Nutricula (Immortal Jelly Fish) எனப்படும் குடை போன்று காட்சியளிக்கக் கூடிய இந்த ஜெல்லி மீன் போன்ற உயிரினத்திற்கு சாவே கிடையாது. இது 4-5 மில்லிமீட்டர் விட்டத்திற்கு வளரக் கூடியது.
Reverse metaplasia எனும் முறையில், வளர்ச்சியடைந்த பின்பு உடல்நிலை சரியில்லாமல் அல்லது அச்சுறுத்தலாக உணரும்போது மீண்டும் அதன் ஆரம்ப நிலைக்கு சென்று விடுகிறது. பின்னர் மீண்டும் வளர ஆரம்பிக்கிறது. வளர்ந்து பெரிதான பிறகு மீண்டும் ஆரம்ப நிலைக்கு மாறிக் கொண்டு மீண்டும் வளரத் தொடங்குகிறது.

இப்படி தொடற்சுழற்சியாக சாவின்றி வாழக் கூடியது இந்த வகை ஜெல்லி மீன். உலகிலேயே இந்த திறன் கொண்ட முதல் உயிரினமாக இது அறியப்பட்டுள்ளது.
- Saw Fish : இது நீண்ட சுறா மீன் போன்ற உடலைக் கொண்டுள்ளது. இதன் நீளமான மூக்கு இதனை எளிதாக அடையாளப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

இது திருக்கை குடும்பத்தை சேர்ந்த மீன் வகையாகும். மூக்கின் இரு பக்கத்திலும் ரம்பம் போன்று பற்கள் உள்ளன. இதை பயன்படுத்தி கடலடி சகதியை கிளறி அங்கிருக்கும் கடல் உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது.
- Pinkhand Fish (Brachiopsilus dianthus) எனப்படும் இந்த மீன் வகை 22 ஆண்டுகளாக காணாமல் போயிருந்தது. ஆராய்ச்சியாளர்கள் இந்த மீன் இனம் அழிந்துவிட்டதாக நினைத்திருந்தனர்.
இறுதியாக 1999 ஆம் ஆண்டு டாஸ்மேனியன் கடற்கரையில் diver ஒருவர் இந்த மீனை பார்த்ததாக ஆவணங்களில் உள்ளது. ஆனால் 22 ஆண்டுகளுக்கு பின் 2021-ல் மீண்டும் டாஸ்மேனியன் கடற் பகுதியில் ஆழ் கடல் கேமராவில் இந்த மீனின் நடமாட்டம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இது கைகள் போன்ற துடுப்புகளை கொண்டு கடலின் அடிப்பரப்பில் நகரக் கூடியது. நீந்தவும் செய்யும் மேலும் பிங்க் நிறத்தில் இருப்பதால் தான் Pink handfish என அழைக்கப்படுகிறது. ஆழமற்ற கடற்பகுதியில் மட்டுமே இவை வாழும் என நினைத்த நிலையில் 150 அடி ஆழத்தில் இந்த மீன்களின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று நம்மை வியக்க வைக்கும் மேலும் சில வித்தியாசமான உயிரினங்கள் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.