சூரரைப் போற்று படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணையும் படத்திற்கு ‘சூர்யா 43’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூரரைப் போற்று திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் OTT-யில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு பல தேசிய விருதுகளையும் அள்ளியது. சூர்யா-சுதா வெற்றிக் கூட்டணியின் இரண்டாவது படம் என்பதாலும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதாலும் ‘சூர்யா 43’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

’சூர்யா 43’ ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் கேங்ஸ்டர் படம். ஆனால் சூரரைப் போற்று போன்று Biopic தழுவலாக இல்லாமல் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தின் கருவை மட்டும் வைத்துக்கொண்டு உருவாக்கப்படும் Commercial படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும் மற்ற குழுவினர் பற்றிய செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் துல்கர் சல்மான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை நஸ்ரியாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் அணுகியதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நஸ்ரியா ஒரு சில தமிழ் படங்களே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் அவரை வெகுவாக ரசித்தனர், நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்த பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா சமீப காலமாக படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
சூர்யா 43-ல் நஸ்ரியா உறுதியாகும் பட்சத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நஸ்ரியாவை ரசிகர்கள் காணலாம். சூர்யா – துல்கர் சல்மான் – நஸ்ரியா – சுதா கொங்கரா- GV பிரகாஷ் என்ற கூட்டணி மட்டும் உறுதியானால் சூர்யா 43 ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய படமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.