Cinema News Stories

இசைஞானியின் இடம், என்றும் தனி தடமே!

அன்னக்கிளி-யில் தூரலாய் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் அடை மழையாய் கொட்டி இன்று இசை கடலாய் பறந்து விரிந்து நம்மை பரவசப்படுத்தும் இளையராஜாவோட பயணம் இன்னைக்கு வரைக்கும் எப்படி இருக்குனு நம்ம எல்லாருக்கும் தெரியும் அதுனால அந்த பயணத்தை பத்தி இந்த தொகுப்பு பேச போறது இல்ல. நம்ம பயணத்துல இளையராஜா எப்படிலாம் நம்ம கூட பயணிக்குறாருனு தான் பேச போறேன்.

ஒரு படத்த நம்ம வாழ்க்கையோட இணைக்க அந்த படத்தோட கதை எவ்ளோ முக்கிய பங்கா இருக்குமோ அதே மாதுரி தான் அந்த படத்துல வர இசை இன்னொரு முக்கிய காரணம். அப்படி நம்ம ஊரு சினிமாக்கு புதிய ஒரு இசைய அறிமுகப்படுத்தி பட்டி தொட்டி எங்கும் இசையால திரும்பி பாக்க வச்சவரு தான் இசைஞானி.இவரோட BGMகள் படத்தின் கதைக்கு பின்னணியில் இருக்கும் சொல்லப்படாத எண்ணங்களையும் ,காணப்படாத தாக்கத்தையும் இசையாக கதையில் வெளிப்படுத்தும்.

உதாரணமாக, 1978ல் முள்ளும் மலரும், 1979ல் உதிரிப்பூக்கள், 1980ல் ஜானி, 1980ல் மூடுபனி, 1983ல் மூன்றாம் பிறை, 1985ல் சலங்கை ஒலி, 1985ல் முதல் மரியதை, 1987ல் பூவிழி வாசலிலே, 1987ல் நாயகன், 1988ல் கீதாஞ்சலி, 1990ல் கேப்டன் பிரபாகரன், 1991ல் இதயம், 1991ல் தளபதி, 1992ல் தேவர் மகன், 2003ல் பிதாமகன் என பல படங்களோட பார்வை அனுபவத்தை உயர்த்தி, தனித்துவமா இவரோட இசை மாத்திருக்கும்.

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் ஏராளமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் என பல திறமையாளர்களுக்கு அவரின் இசை அங்கீகாரம் கொடுத்தது . மோகன், முரளி, ராமராஜன் மற்றும் ராஜ்கிரண் போன்ற ஹீரோக்களின் வளர்ச்சியிலும் ,பாரதிராஜா ,சுந்தராஜன்,மனோபாலா போன்ற இயக்குனர்களை மக்களுக்கு அறிமுகம் செய்ததிலும் இவரின் இசை முக்கிய பங்காக இருக்கும்.

“கண்ணே கலைமானே” , “இளைய நிலா பொழிகிறதே”,“இளமை எனும் பூங்காற்று” , “பூங்காத்து திரும்புமா” ,”இஞ்சி இடுப்பழகி”s ,கண்மணி ,இது ஒரு பொன்மாலை பொழுது போன்ற பாடல்கள் இன்னைக்குவர பல பேருக்கு தினசரி கேட்க கூடியதாவும் ,சிலபேருக்கு மன அமைதிக்கான மருந்துனு சொல்றத விட ஒருவித இனம்புரியாத உணர்வா இருக்கு.
இசை அமைப்பாளர் மட்டுமில்லாம பாடகரா அவரோட இன்னொரு பரிணாமம்.சொந்த வார்த்தைகளில் இளையராஜா தற்செயலாக பாடிய பாடல்கள் ஒரு கிராமிய உணர்வை தூண்டி கிராமங்கள் தோறும் ஒலித்தது intro song இவர் பாடுனா படம் வெற்றிங்குற எண்ணம் சினிமாத்திரைல பரவி ஏராளமான intro songs பாடினார்.“ஏய் இந்த பூங்காற்று தாலாட்டா” மற்றும் “தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே இன்னைக்கும் பலரோட favorite songs .

இவரை பத்தி பேச ஆரம்பிச்ச இவரோட இசைக்கு தனி இலக்கணமே போடலாம். இவருக்கு முன்னாலும் ,பின்னாலும் இசை உலகில் பல ஜாம்பவான்கள் இடம் பிடித்து இருந்தாலும் இவரின் இடம் ஒரு தனி தடம் தான்.

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
என இவரின் இசை ,வரலாறு தாண்டியும் ஒலித்து கொண்டே இருக்கும்
என்றும் இந்த ராஜ ராஜ தான்
suryan Fm சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை இசைஞானிக்கு தெரிவித்து இவரின் இசையில் நாமும் கலந்திருப்போம் .

Article By RJ Mozhiyan