இறுதிச் சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா தற்போது சூர்யாவை வைத்து இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தின் காட்டுப் பயலே பாடல் யூடியூபில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், இப்படத்தின் காட்டுப் பயலே பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை யூடியூபில் கடந்துள்ளது மேலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது என்றே கூறலாம். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்பாடல் கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளியானது. இப்பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் ஒரு கோடி பார்வையாளர்களை இப்பாடல் கடந்துள்ளது.
ரவுடி பேபி பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகி தீ தான் இப்பாடலையும் பாடியுள்ளார். பாடலாசிரியர் சிநேஹனின் வரிகள் அனைத்தும் இப்பாடலுக்கு உயிர் ஊட்டும் விதத்தில் அமைந்துள்ளது. வித்தியாசமான பாடல்களை இசை அமைத்து வெற்றி பெறுவது ஜி.வி பிரகாஷுக்கு கைவந்த கலை. அந்த வகையில் இப்பாடலும் கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், காதுக்கு இனிமையாக அமைந்து உள்ளது.
இப்பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த சில நிமிடங்களிலேயே இப்பாடலின் வெற்றியை ரசிகர்கள் இணையத்தில் ஆரவாரத்துடன் கொண்டாடத் தொடங்கி விட்டனர். தற்போது #KaattuPayale எனும் டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சூரரைப் போற்று திரைப்படத்தின் காட்டு பயலே பாடலை கீழே காணுங்கள்.