Cinema News Stories

ரஜினியின் தர்பார் – Single Update

Darbar Single

100 வருட இந்திய சினிமா வரலாற்றில் 44 வருடங்களாக முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே. 6 முதல் 60 என இவரது ரசிகர் பட்டாளம் பரந்து கிடக்க, இவர் தந்தது போல இமாலய வெற்றிகளை வேறெந்த நடிகரும் கொடுத்ததில்லை. கருப்பு வெள்ளை, வண்ணம், 3D என அனைத்து வடிவங்களிலும் வெற்றிவாகை சூடிய சூப்பர்ஸ்டார் தனது அடுத்த பிரம்மாண்ட வெற்றிக்கு தர்பார் திரைப்படத்தின் மூலமாக தயாராகி விட்டார் .

2020 பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் தர்பாருக்கு எதிர்பார்ப்பு விண்ணைத்தொட்டது என்றால் அது மிகையாகாது. அதற்கான காரணங்களும் நியாயமானதாகவே இருக்கிறது.

Darbar Movie Stills
தர்பாரில் ரஜினி

தமிழ் சினிமாவில் 2001ல் அறிமுகமாகி இந்திய அளவில் தலைசிறந்த இயக்குனராக இன்று உயர்ந்து பல வெற்றிகளை கொடுத்தவர் A.R.முருகதாஸ். தீனாவில் தொடங்கி ரமணா, கஜினி, துப்பாக்கி என தொடர்ந்து சர்க்கார் வரை இவர் தொட்டதனைத்தும் மாபெரும் வெற்றிப்பெற்றன. பல உச்சநட்சத்திரங்களை இயக்கிய முருகதாஸும் சூப்பர்ஸ்டாரும் இனைந்து பணியாற்ற வேண்டும் என்பது பல ரசிகர்களின் கனவாகவே இருந்தது. அந்த கனவு தர்பார் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது.

Darbar Rajinikanth
சூப்பர் ஸ்டாருடன் ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படப்பிடிப்பில்

ஆதித்தியா அருணாசலம் என்கிற கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் தர்பார் திரைப்படத்தில் தோன்றவிருக்கிறார். இந்த படத்தை இயக்கும் முருகதாஸின் தந்தையின் பெயரும் அருணாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா அருணாச்சலமாக தர்பார் திரைப்படத்தில் ரஜினி
ஆதித்யா அருணாச்சலமாக தர்பார் திரைப்படத்தில் ரஜினி

கிட்டத்தட்ட 27வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இவர் காவல்துறை அதிகாரியாக நடித்த மூன்று முகம் திரைப்படம் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்க, அதை மிஞ்சும் அளவிற்கு தர்பார் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் மாதம் 7-ம் தேதி தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதை தமிழில் உலகநாயகன் கமலும், மலையாளத்தில் மோகன் லாலும், ஹிந்தியில் சல்மான் கானும் அவர்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். உலகநாயகன் கமலின் பிறந்தநாளன்று அவரே இதை வெளியிட்டது சூப்பர்ஸ்டாருக்கும் அவருக்கும் இடையே இருக்கும் நட்பை வெளிப்படுத்துவது போல அமைந்தது.

இதுவரை இந்த மோஷன் போஸ்ட்டரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இதில் தமிழ் பதிப்பை மட்டும் 7 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர்.

நவம்பர் 14-ம் தேதி தர்பார் படத்தின் டப்பிங் பணிகள் துவங்குவதாக முருகதாஸ் தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய, அதை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் டப்பிங் செய்வது போல வந்த புகைப்படங்கள் வைரல் ஆனது.

Rajinikanth Darbar
Rajinikanth dubbing for Darbar

இந்த படத்திற்கான டப்பிங் வேலைகளை இரண்டே நாட்களில் சூப்பர்ஸ்டார் முடிக்க, தனது வாழ்நாளின் சிறந்த டப்பிங் அனுபவம் இந்த படத்தில் சூப்பர்ஸ்டாருடன் அமைந்ததாக பதிவிட்டுள்ளார் முருகதாஸ்.

சூப்பர்ஸ்டார் திரைப்படங்களில் இருக்கும் பல சிறப்பம்சங்களில் முக்கியமானவை பாடல்கள். MSV , இளையராஜா, தேவா, AR ரஹ்மான் என சூப்பர்ஸ்டாருக்கு பலரும் பல வெற்றிப் பாடல்களை கொடுத்திருக்க, இந்த ஆண்டு அந்த வரிசையில் சேர்ந்தது “ராக்ஸ்டார்” அனிருத். 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, ரெமோ, விவேகம் என பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக்கொண்ட அனிருத் சூப்பர்ஸ்டாரின் பேட்ட திரைப்படத்திற்க்கு இசை அமைக்க அதற்கான வரவேற்பும் மிக சிறப்பாகவே அமைந்தது.

இதற்கு முன்பாக முருகதாஸின் கத்தி திரைப்படத்தில் அனிருத் பணியாற்றி இருக்க அதுவும் வெற்றிகரமாகவே அமைந்தது. சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகரான அனிருத்துக்கு தர்பார் இருபத்தி ஐந்தாவது திரைப்படம் ஆகும். இந்த மாத இறுதியில் தர்பார் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.