ஆண்…
வரலாறு தோன்றிய காலத்திலிருந்து சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக (The role of a protector and provider) இருந்தான். அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டு இருந்தது.
பிறந்து சில வருடங்களிலே, அவன் மேல் பொறுப்பும், பலரின் கனவும் விதைக்கப்படுகிறது.
தகப்பன் தவறிய குடும்பத்தில் இருந்தால், மிக இளைய வயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்கவேண்டும்.
குடும்ப கஷ்டத்தை உணர்ந்து, மகன் ஏட்டு கல்வியை விடுத்து, அனுபவ கல்வியை கற்க அதை ஏற்க வேண்டும்.
குடும்பத்தில் மூத்த மகனாகவோ, இளைய மகனாகவோ இருந்தால், அக்கா, தங்கைகளின் திருமண பொறுப்பை ஏற்கவேண்டும்.
குடும்ப பாரத்தை பாறையை போல் பலமாக சுமக்க வேண்டும்.
உறவினர்கள் மத்தியில் பாலமாக இருக்க வேண்டும்.
அலுவலக பிரச்சனையை சமாளித்து, குடும்ப பிரச்சனையை சமாளித்து சமமாக இருக்கவேண்டும்.
அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையேயான சின்ன சின்ன சச்சரவுகளில், அம்மா பக்கம் சேர்ந்துக் கொண்டால் “அப்படியே நீ போய்டு” என மனைவி சொல்வதும், அதே மனைவி பக்கம் சென்றால், “இவ்வளவு நாள் வளர்த்தது எல்லாம் வீணாப் போச்சே” என அம்மா அழுவதும் என, தவிக்கும் ஆண்களும் இங்கு உண்டு ஏராளம்.
இப்படி தங்களுக்கு நிகழும் பிரச்சனைகளிருந்து, இந்த வாழ்க்கையே வேண்டாம் என முடித்துக் கொள்ளும் ஆண்களும் உண்டு சிலரும்.
இன்று ஆண்களை பொருளாதார ரிதியிலும், மன ரீதியாகவும், பல ஆண் எதிர் சட்டங்களின் செயல்பாடுகளால், இந்திய ஆண்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் சித்திரவதைகளையும், ஆணினத்தையே அழிக்கச் செய்யும் ஒரு பால் சார்பு நிலையையும் எதிர்த்துப் போராடுவது போன்றவற்றிற்காகவுமே, இன்றைய சில ஆண்களுக்கு வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது.
ஆணினத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய கொடுமைகளைக்களைய, அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (All India Men’s Welfare Association) “AIMWA” என்னும் அமைப்பு துவங்கப்பட்டது.
ஆண்களை கவுரவிக்க, ஆண்களின் உரிமைகளை மதிக்க, ஆண்களின் தியாகங்களைக் காட்ட, ஆண்களின் சாதனைகளைச் சொல்ல, ஆண்களின் வேதனைகளை விரட்ட, ஆண்களின் பங்களிப்பை உணர்த்த, ஆண்களுக்குச் சமூக அங்கீகாரம் அளிக்க, சாதித்த ஆண்களை வாழ்த்த, சாதிக்க நினைப்போரை வரவேற்க என அனைத்துமாக, ஆண்கள் தினம் என்று நவம்பர் 19 கொண்டாடப்படுகிறது.
பெற்றோருக்கு நல்ல மகனாகவும், தன் மனைவிக்கு நம்பிக்கையானவனாகவும், குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும், சொந்த பிரச்னைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு ஆணும், இங்கு போற்றப்பட வேண்டியவர்கள் தான்.
ஒவ்வொரு குடும்பத்தையும் தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் தாங்கி, தூக்க நிறுத்த நினைக்கும், அதனை நடத்திக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்..!
வீடியோ பதிவு:
Add Comment