Cinema News Stories

வலிமை பட ரிலீஸ்… போனி கபூருடன் அஜித் பேச்சுவார்த்தை!

இன்று மும்பையில் நடிகர் அஜித், போனி கபூரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் வலிமை திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும், படத்தை மார்ச் இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பையொட்டி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால், ஜனவரி 2022 பொங்கல் சமயத்தில் வெளியாக இருந்த அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருவதே இதற்கு காரணம். நீண்ட எதிர்பார்ப்பை கடந்து திரைக்கு வரும் வலிமை 100% பார்வையாளர்களால் வரவேற்கப்பட வேண்டும் என்பதே படக்குழுவின் எதிர்பார்ப்பு.

காத்திருப்பது கூட சுகம் தான் என்ற வசனத்திற்கேற்ப அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டிலிருந்து ரிலீஸ் வரை காத்து வருகின்றனர். அந்த காத்திருப்புகளுக்கு பலன் அளிக்கும் வகையில் ஒவ்வொரு அப்டேட்டும் வெறித்தனமாக வெளியாகி ட்ரெண்ட் ஆனது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் வலிமை படத்திற்காக #valimai எனும் Tag-ல் ஒரு மில்லியன் பதிவுகள் பகிரப்பட்டு ஒரு புது சாதனையாக சமூகவலைதளங்களில் #1MInstaPostsforValimai எனும் ஹேஷ்டேகுடன் ரசிகர்கள் கொண்டாடினர்.

அதேபோல ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான வலிமை மேக்கிங் வீடியோ ரசிகர்களால் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதன்பின் வெளியான டிரைலரும் ரசிகர்களுக்கு மன நிறைவாக இருந்தது. அஜித் இதுவரை நடித்த பல படங்களிலும் Bike Chasing, Bike Stunt காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கும் Bike Chasing, Bike Stunt காட்சிகள் அற்புதமாகவும், தனித்துவத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே இப்படத்தின் எதிர்பார்ப்பிற்கு மேலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் வலிமை திரைப்படத்தை பொங்கலுக்கு எதிர்பார்த்திருந்த நிலையில் தான் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக படம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து பட வெளியீடு குறித்து பேசியதாகவும், மார்ச் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பரவி வரும் இந்த சூழலில் இதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வலிமை திரைப்படம் விரைவில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By Mano