நடிகர் விமல் சமீபத்தில் கொடுத்த சூரியன் FM நேர்காணலில் இதுவரை எந்த நேர்காணலிலும் கூறாத பல விஷயங்களை கூறினார்.
அதில் தல மற்றும் தளபதி உடன் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கில்லி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கூத்துப்பட்டறையில் இருக்கும் போது கிடைத்தது. அப்போது கூத்துப்பட்டறைக்கு இயக்குநர் தரணி நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகம் பார்த்து முடித்து விட்டு கில்லி படத்தில் நடிப்பதற்காக 3 பேரை தேர்வு செய்தார். அதில் நானும் ஒருவன்.
பின்னர் என்னுடைய படத்தில் ஹீரோவின் நண்பர்களாக நடிக்கிறீர்களா என்று கேட்டார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கூத்துப்பட்டறையில் இருந்த நான் இயக்குநர் தரணி சார் கேட்டதும் ஒப்புக்கொண்டேன். பெரிய படம், பெரிய ஹீரோ விஜய் சார், பெரிய இயக்குநர் அவர்களே நம்மை கூப்பிடுகிறார்கள் போவோம் என முடிவெடுத்து சென்றேன்.
- 2022-ல் பெரிதும் ரசிக்கப்பட்ட பிற மொழி திரைப்படங்கள்!
- Amy Jackson- Photo Gallery
- Thalapathy Vijay – Photo gallery
- கண்டம் விட்டு கண்டம் சென்று FOOD DELIVERY செய்த சென்னை பெண்!
- தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் மாவட்ட வாரியான தரவுகள்!
படப்பிடிப்பு தளத்தில் விஜய் சார் எங்களிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். நண்பர்கள் போல குடும்பத்தை போல எங்களுடன் இருப்பார். அவருடைய குழந்தைகளுடன் படப்பிடிப்பு தளத்தில் விளையாடிக் கொண்டிருப்போம்.
அதே போல் கிரீடம் படத்தில் அஜித் சாரின் நண்பராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரீடம் படத்தில் சற்குணம் உதவி இயக்குநராக இருந்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது. அஜித் சாரும் நன்றாக பேசி பழகுவார்” என்று கூறினார்.
மேலும் தமிழ் சினிமாவில் அவர் கடந்து வந்த பாதையில் நடந்த சுவாரசியமான பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :