Interview Stories

அஜித் சார் பிரியாணி சமைச்சதால என் Diet-அ விட்டுட்டேன்! – கார்த்திகேயா

Valimai

வலிமை படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் தல அஜித் உடனான அனுபவங்கள் குறித்து வலிமை பட வில்லன் கார்த்திகேயா, சமீபத்தில் நடைபெற்ற சூரியன் FM உடனான நேர்காணலில் நிறைய சுவாரசியமான விஷயங்களை கூறினார்.

வலிமை பட அனுபவங்கள் குறித்து பேசத் தொடங்கிய அவர், “அஜித் சார் லட்டு போல் இனிப்பானவர், ஹெச்.வினோத் சாக்லேட் போல் இனிப்பானவர். அஜித் சார் உடன் நடிக்கும் போது அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அவரைப் பற்றி மட்டுமே யோசிக்க மாட்டார். இது அவரிடம் மிகவும் பிடித்த விஷயம்.

மேலும் அஜித் சார் நிறைய அறுவை சிகிச்சைகள் செய்திருந்தாலும் படத்திற்காக முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு காட்சியிலும் 200% உழைப்பை போடுவார். மிகவும் professional ஆக இருப்பார். அது என்னை மிகவும் ஈர்த்த விஷயம்.

Image

அஜித் சாருக்கு sense of humour அதிகம். நிறைய ஜோக்ஸ் சொல்லிக் கொண்டே இருப்பார். அஜித் சார் இருந்தாலே ஷூட்டிங்கில் ஜாலியாக இருப்போம். இல்லை என்றால் எதையோ மிஸ் பண்ணுவது போல இருக்கும்.

கடைசி நாள் கிளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு முடிந்த உடன் அஜித் சார் அனைவருக்கும் மிகவும் சுவையான ஒரு பிரியாணி சமைத்துக் கொடுத்தார். அன்று மட்டும் நான் என்னுடைய Diet-ஐ விட்டுவிட்டேன். இதுவரை நான் சாப்பிட்டதில் மிகவும் சுவையான பிரியாணி அதுதான்” என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசினார். மேலும் தமிழ் சினிமா குறித்து பல்வேறு சுவாரசியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo