Interview Stories

Foot ball விளையாட தெரியாதுனு விஜய் சார் சொன்னாரு! – ரெபா மோனிகா ஜான்

Bigil

பிகில் படத்தில் தளபதி விஜய் உடன் நடித்தது குறித்தும், பிகில் பட அனுபவங்கள் குறித்தும் சமீபத்தில் சூரியன் FM உடனான நேர்காணலில் ரெபா மோனிகா ஜான் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நேர்காணலில் அவர், “பிகில் படத்தில் எனது கதாபாத்திரம் பற்றி விவரித்தார்கள். முதல் பாதியில் காதல் செய்யும் கல்லூரிப் பெண் கதாபாத்திரமாகவும், பின் பாதியில் அதற்கு நேர்மாறாக கதையின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாகவும் அது இருந்தது.

மேலும் தளபதி விஜய் உடன் நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் ‘இது போதும்’ என ஓகே சொல்லி விட்டேன். மிகவும் பதட்டத்துடன் விஜய் சாரை சந்தித்தேன்.

அவர் என்னிடம், உங்களுக்கு Foot ball விளையாட தெரியுமா என கேட்டார். நான் தெரியாது இனிதான் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினேன். உடனே அவர், இல்லம்மா எனக்கு Foot ball சுத்தமா தெரியாது, என்ன பண்றதுனு போய் பாக்கனும் என கூறினார்.

இவ்வளவு பெரிய ஸ்டார் என்னிடம் இப்படி வெளிப்படையாக பேசியது அவரது எளிமையை வெளிப்படுத்தியது. மேலும் திரைப்படத்தை முதல் முறை பார்க்கும் போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிங்கப்பெண்ணே பாடல் தொடங்க நான் திரையில் வருவதைப் பார்த்த உடன் எனக்கு சிலிர்த்து விட்டது” என கூறினார்.

அதுமட்டுமல்லாமல், அவரது காதல் திருமணம் மற்றும் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழ்க்கண்ட இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo