Cinema News Specials Stories

மாநாடு எனும் Master Piece

மாநாடு எனும் Master Piece வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகின்றன, சினிமாவை போல சினிமா Shooting பார்க்க அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது, ஏனென்றால் ஒவ்வொரு காட்சியையும் அத்தனை Frame Frame ஆக எடுப்பார்கள், அதிலும் காட்சி சரியாக வரவேண்டும் என்பதற்காக திரும்ப திரும்ப எடுப்பார்கள்.

அவ்வளவு எளிதில்லை சினிமா… இயக்குனர் ஒருவரின் மனக்காட்சியை திரை மொழியில் நமக்கு திரை காட்சியாக கடத்த அவர்களின் மெனக்கெடல் மிக அதிகம். அப்படி இருக்க, Sci-Fi, Time Loop படங்கள் எடுப்பது எத்தனை கடினம்…!மாநாடு திரைப்படம் வரும் வரை Time Loop வகையறா படங்கள் தமிழ் சினிமா, ஏன் இந்திய சினிமாவே கண்டிராத ஒன்று. அதை நம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஏனென்றால் அது நம்மவர்களுக்கு புரியாது என்று தான் எள்ளி நகையாடியிருந்தனர் Those So Called Cinema Experts .

இதனை அவ்வளவு எளிதான மிக துல்லியமான திரைக்கதை மூலம் வெகுஜன மக்களை ரசிக்க வைத்திருப்பார் இயக்குனர் வெங்கட் பிரபு. பெரும்பாலும் நகைச்சுவை திரைப்படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் VP, புது முயற்சியாக இந்த Time Loop கான்செப்டை முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.

ஒவ்வொரு காட்சியும் திரும்பத் திரும்ப வந்திருந்தாலும் துளியும் தொய்வில்லாத திரைக்கதை அமைத்தது இந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பலம். ஆனால் இதற்கு அசுர பலம் சேர்த்தவர் எடிட்டர் பிரவீன் KL, எத்தனையோ காட்சிகள் திரும்ப திரும்ப வரும்போது அத்தனையையும் சரியாக எடிட் செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல… எடிட்டர் பிரவீன் KL அவர்களின் நூறாவது படம் மாநாடு, தனது நூறாவது படத்தில் இப்படி ஒரு சவாலை அவர் சந்தித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். Special Wishes அவருக்கு.

அடுத்ததாக SJ சூர்யா…! திரைப்படங்களில் ஹீரோக்களை தவிர்த்து வில்லன்களை ரசிக்க வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதனை மிக அருமையாக செய்திருப்பார் எஸ்.ஜே.சூர்யா, அப்படி ஒரு வாய்ஸ் மாடுலேஷன் அதற்கு முன் எஸ்.ஜே.சூர்யா பரிசோதித்துப் பார்த்ததில்லை என நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை சிரிக்க வைத்திருப்பார், ரசிக்க வைத்திருப்பார், ஆதங்கப்பட வைத்திருப்பார், இப்படி அத்தனை உணர்வுகளையும் ரசிகர்களுக்கு கடத்தியிருப்பார், எஸ்.ஜே.சூர்யா.

படத்தின் போக்கினை மெருகேற்றுவது பின்னணி இசை, அதனை முன்னணிக்கு கொண்டு வந்தது யுவன் ஷங்கர் ராஜா, மெஹரசைலா என Mesmerise பண்ணியிருப்பார். Last But Not Least, STR..! Come Back கொடுப்பது STR க்கு ஒன்றும் புதிதல்ல, என்றாலும் மாநாடு படத்தில் அவர் கொடுத்த கம் பேக் மொத்த தமிழ் திரையுலகை மட்டுமல்ல இந்தியத் திரையுலகே வியந்து பார்த்தது. உடம்பை Fit ஆக மாற்றி, புயலென ஓட்டமெடுத்தார்.

இவர் ஓடிய வேகத்திற்கு கேமராவால் Follow செய்ய முடியவில்லை என்று ஒரு நேர்காணலில் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். அவ்வளவு Dedication-ஓடு இந்த படத்திற்காக அவ்வளவு மெனக்கெட்டிருந்தார் எஸ்.டி.ஆர். அதோடு படத்தில் Pre Climax-ல் ஒரு சிங்கிள் ஷாட் காட்சி வரும், அந்த காட்சியில் SJ சூர்யா, YG மகேந்திரன் என பல ஜாம்பவான்கள் இருப்பார்கள், இருந்த போதிலும் சிம்பு ஒற்றை ஆளாக பல உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி அந்த காட்சியில் நடித்திருப்பார்.

இப்படி மற்றுமொரு திரைப்படம் தமிழில் வருமா என்பது தெரியாது, ஆனால் இந்த Team, Just Like That அதை செய்து முடிப்பார்கள் என நினைக்கிறேன். வந்தார்கள் ஹிட் அடித்தார்கள் Repeatttttu…. Many Repeattttt Wishes…!

Article by RJ Roopan

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.