Cinema News Specials Stories

‘2023’ Top 10 Heroines

தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு எந்தெந்த கதாநாயகிகள் மக்கள் மனதில் முத்திரை பதித்துள்ளனர் என்று தற்போது பார்ப்போம்.

  1. நயன்தாரா

The Only Lady Super Star of Tamil Cinema Industry நயன்தாரா. அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெற்றியை அடைவதை விட அந்த வெற்றியை தக்க வைச்சுக்குறது தான் மிகப் பெரிய வெற்றி. அந்த வகைல நயன்தாரா அவங்க கடின உழைப்பால மிகப் பெரிய வெற்றி அடைஞ்சுட்டாங்கனு சொல்லலாம். தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச மிகப் பெரிய கிப்ட் நயன்தாரா. இந்த வருஷம் இவங்களுக்கு ஜவான், இறைவன், அன்னபூரணி-னு மொத்தம் 3 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு.

  1. சமந்தா

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நம்ம எல்லாருக்கும் புடிச்ச சாம். அவரது அழகு, உடலமைப்பு மற்றும் நடிப்புத் திறன் இவையனைத்தும் அவரை ஒரு சிறந்த தமிழ் நடிகையாக மற்ற நடிகைகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இந்தி சினிமாவில் நடிக்காமலேயே நாடு முழுவதும் பரபரப்பான ஒரே நடிகை சமந்தா. சமந்தா 2010 இல் ஒரு தெலுங்கு காதல் திரைப்படமான ‘யே மாயா சேசவே’ மூலம் நடிகையாக அறிமுகமானார். இத்தனை ஆண்டுகளில், அவர் பல்வேறு வெற்றிகரமான தென்னிந்தியத் திரைப்படங்களில் தோன்றி பெரும் புகழைப் பெற்றுள்ளார். இந்த வருஷம் இவங்களுக்கு ஷாகுந்தலம், குஷி-னு மொத்தம் 2 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு.

  1. த்ரிஷா

திரைத்துறையில் படங்கள் நடிப்பதற்கு முன்பே மாடலிங்கில் பிசியாக இருந்த த்ரிஷா, மிஸ் மெட்ராஸ், மிஸ் சேலம் என நிறைய பட்டங்களை பெற்றுள்ளார். மாடலிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் சினிமாவிற்கு வரமாட்டேன் என த்ரிஷா உறுதியாக கூறி இருந்தார். ஆனால் இதற்குப் பிறகு, அவர் தென் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மௌனம் பேசியதே திரைப்படத்தில் த்ரிஷா முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். பல வெற்றிப் படங்கள் குடுத்த த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படம் ஒரு பிளாக் பஸ்டர். இந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான லியோ படமும் இந்திய அளவில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மேலும் த்ரிஷா நடிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய The Road திரைப்படமும் இந்த வருடம் வெளியாகியுள்ளது.

  1. கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். கீர்த்தி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தனக்கான Fan Base-ஐ சம்பாதித்துள்ளார். அவரது தனித்துவமான நடிப்பு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த வருடம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாமன்னன், தசரா, போலா ஷங்கர்-னு 2 திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

5. தமன்னா

இந்திய முழுக்க பிரபலமான நடிகைகளில் இந்த வருடம் தமன்னா முன்னணியில் இருக்கிறார். ஏறக்குறைய இரண்டு தசாப்த கால சினிமா வாழ்க்கையில், கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்துள்ளார். கலைமாமணி விருது, SIIMA விருது மற்றும் பல பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். இந்த வருடம் ஜெயிலர் படத்தின் காவாலய்யா பாட்டு மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தார். தமன்னா நடிப்பில் இந்த வருசம் தமன்னா நடிப்புல Bandra, Bhola Shankar, Lust Stories 2, Jailer-னு 4 படங்களும் Jee Karda, Aakhri Sach-னு 2 வெப் சீரிஸும் ரிலீஸாகியிருக்கு.

6. ராஷ்மிகா

ஒரு வரியில் இவரை பற்றி சொல்லவேண்டும் என்றால் Rashmika அனைவரின் Crush. அவருடைய அழகும் இனிமையும் அவரை பின்பற்றுபவர்களை வசீகரிக்கின்றன. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 37.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது ரஷ்மிகா கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவருடைய அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சந்தேகமே வேண்டாம் 2023-லும் அனைவர் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இந்த வருடம் இவருக்கு வாரிசு, Mission Manju, Animal என மொத்தம் 3 படங்கள் வெளியாகியுள்ளது.

7. ஐஸ்வர்யா ராஜேஷ்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் தற்போதைய காலகட்டம் சிறந்ததாக இருக்கின்றது. வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் குடுக்கும் இவர் இப்பொழுது தனித்துவமான படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, ரன் பேபி ரன், ஃபர்ஹானா, தீராக்காதல், புலிமடா என மொத்தம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

8. மீத்தா ரகுநாத்

ஏற்கனவே முதல் நீ முடிவும் நீ படம் மூலமா மக்கள் மனசுல இடம்பிடிச்ச மீத்தா ரகுநாத் இந்த வருசம் குட்நைட் படம் மூலமா மக்கள் மனசுல இன்னும் அழுத்தமா தன்னோட இடத்த பதிச்சுட்டாங்க. பக்கத்து வீட்டு Introvert பொண்ணா அப்படியே யதார்த்தமான ஒரு நடிப்ப வெளிப்படுத்தியிருந்தாங்க. இனி தமிழ் சினிமால அவருக்கு தனி இடம் நிச்சயம் இருக்கும். இனி நிறைய படங்கள் அவர் நடிப்புல வெளியாகும்.

9. நிமிஷா சஜயன்

நடிப்புத் திறமை இருந்தா மட்டும் போதும், மக்கள் மனசுல பெரிய தாக்கத்த உண்டு பண்ணலாம் அப்படிங்குறத நிரூபிச்சவர் நிமிஷா விஜயன். ஏற்கனவே மலையாளத்துல இவர் பிரபலமாகியிருந்தாலும் இந்த வருஷம் தமிழ்ல வெளியான ஜிகர்தண்டா டபுள் X, சித்தா படங்கள் மூலமா தமிழ்நாட்லயும் பிரபலமாகிட்டாங்க. யார்ரா இந்த ஹீரோயின்னு தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் தேட ஆரம்பிச்சுட்டாங்க. இனி தமிழ் சினிமால இவங்க நீண்ட நெடிய வலம் வர போறாங்க.

10. ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர் இப்போ தன்னோட சினிமா வாழ்க்கையில கிட்டத்தட்ட உச்சத்துல இருக்காங்க. முன்னணி நடிகர்கள் கூட மட்டும் ஒரு ரவுண்ட் வந்துட்டா போதும் உச்சத்துக்கே போயிடுவாங்க. இந்த வருசம் இவர் நடிப்புல அகிலன், ருத்ரன், டிமான்ட்டி காலனி 2, Kalyanam Kamaneeyam, பத்து தல, பொம்மை படங்கள் வெளியாகியிருக்கு.

இதைத்தாண்டி மற்றும் பல கதாநாயகிகள் மற்றும் அறிமுக நடிகைகள் தமிழ் மக்களை கவர்ந்துள்ளனர். அனைவருக்கும் அடுத்த வருடம் சிறப்பாக அமைய சூரியன் FM-ன் வாழ்த்துகள்.