‘கனா’.., அப்துல்கலாம் சொன்னது போல் தூக்கத்தில் வருவதில்லை! கனா.., உன்னை தூங்கவிடாமல் செய்வது.., அந்த வகையில் இந்த கனா திரைப்படம் தூங்கிக் கிடந்த பலரின் கனாக்களை தட்டி எழுப்பிய திரைப்படமாக அமைந்தது..,
ஒரு பக்கம் மகளிர் அணி கிரிக்கெட்.., மறுபக்கம் விவசாயம் என இருகோடுகளில் பயணிக்கிறது கதை.., ஆனால் குழப்பமே ஏற்படுத்தாமல் தெளிவான திரைக்கதை அமைத்து.., ஒரு பார்வையாளனுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் படத்தில் புகுத்தி தான் ஒரு தேர்ந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்..,
அருண்ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கல்லூரி கால நண்பர்கள்.., ஒன்றாகவே தங்களது கலை பயணத்தை தொடங்கினாலும்.., கலைத்தாய் முதலில் சிவகார்த்திகேயனின் தனி திறமையினாலும் ஈடு இணை இல்லாத நகைச்சுவை உணர்வினாலும் ஆரத்தழுவி அரவணைத்துக்கொண்டாள்..,
இருந்தும் அருண்ராஜா காமராஜின் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.., நண்பர்களுக்கு தீய பழக்கத்தையும் தவறான வலிகளையும் பகிர்ந்து கொடுக்கும் இந்த காலத்தில் தனது வெற்றியை பகிர்ந்து கொடுத்தார் சிவகார்த்தியேன்..,
தன் நண்பனின் முதல் கனாவிற்காக, தனது முதல் தயாரிப்பு நிறுவனம் துவங்கி ’கனா’ எனும் நட்புக்கான தாஜ்மஹாலை கட்டுவித்தார் சிவகார்த்திகேயன்..,
படத்தில் ஒரு பெண் கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் போது, அதற்கு எப்படி எல்லாம் பிரிச்சனைகள் வரும் என்பதை மிக அழுத்தமாகவும், அதே நேரத்தில் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இன்று நம் நாட்டில் விவசாயமும், விவசாயிகளும் என்ன பாடுபடுகிறார்கள் என்பதையும் சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
படத்தில் வரும் கதாபாத்திரங்களும்.., காட்சி அமைப்புகளும்.., மிகைப்படுத்தப்படாமல் அளவாக அமைந்து ரசிக்க வைத்திருப்பதே படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.., கடைசி 30 நிமிடம்.., ஒரு டிவியில் ஒளிபரப்பாகும் உண்மையான கிரிக்கெட் போட்டியை காண்பது போலவும்.., அதில் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) வெற்றி பெற வேண்டும் என்று படம் பார்க்கும் ஒவ்வொருவரின் எண்ணமாக இருக்கும்படி இயக்குனர் செதுக்கி இருந்தார்..,
அதுவும் இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டியின் கடைசி ஓவரில், இரு அணிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு இருக்கும்போது, அனிச்சையாக நமக்குள் ஏற்படும் ஒரு பதற்ற உணர்வு, இந்த படத்தை பார்க்கும் போதும் ஏற்படுத்தி இருந்தார் இப்படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.., குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் “இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்..,
இந்தியாவில் விவசாயத்தை காப்பாத்த யாரு இருக்கா.., ஒன்னு லஞ்சம் கொடு.., இல்ல மரியாதை கொடு.., ஏன்யா ரெண்டையும் கொடுத்து கெடுக்கறீங்க..,” போன்ற மயிர்கூச்சரியும் வசனங்களால் நடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷை மட்டும் அல்ல அவருக்கு பின்னால் விஸ்வரூபம் எடுத்து காட்டிய அருண்ராஜா காமராஜையும் படம் பார்த்து வாழ்த்தாத நெஞ்சங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்..,
ஆக மொத்தத்தில் கனா திரைப்படம்.., இப்படத்தில் வரும் கௌசல்யா என்ற கதாபாத்திரம் வெல்லவேண்டும் என்ற கனா மட்டும் அல்ல.., சிவகார்த்திகேயனின் முதல் பட தயாரிப்பாளர் எனும் கனா.., அருண் ராஜா காமராஜின் முதல் பட இயக்குனராகும் கனா.., ஐஸ்வர்யா ராஜேஷின் முதல் லீட் ரோல் எனும் கனா.., என பலரின் கனவுகளை சுமந்து உருவாக்கப்பட்ட கனா திரைப்படம் உருவாகி 5 வருடங்கள் ஆகியும் அந்த திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவரின் கனாவிற்கும் சிறகு கொடுக்கும் திரைப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது..,