Specials Stories

1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக அதிகபட்ச ரன் அடித்தவர் இவர் தான்

1983 உலகக்கோப்பை இறுதில இந்தியாவுக்காக அதிக ரன் அடிச்சவர் இவர் தான்! முன்னெல்லாம் கிரிக்கெட் ல டெஸ்ட் மேட்ச்-ஆ இருந்தாலும் சரி ஒன்டே மேட்ச்-ஆ இருந்தாலும் சரி விக்கெட்டுகள் போக கூடாதுனு ரொம்ப மெதுவா பேட்டிங் ஆடுவாங்க. இது நாளடைவுல மக்கள் மத்தியில கொஞ்சம் போரிங் ஆன கேமா மாற ஆரம்பிச்சது.

அதனால Four, Six-னு Batsman அதிரடியா விளையாண்டா தான் மக்களுக்கு ஆர்வம் அதிகமாகும்னு ஓவர்ஸ குறைச்சு T20, T10 லீக்ஸ் நடத்த ஆரம்பிச்சாங்க. ஏன்னா ஆடியன்ஸ பொருத்தவர ஒரு பேட்ஸ்மேன் பயமில்லாம பேட்டிங் பண்றத பாக்க தான் நல்லா இருக்கும் அப்டிங்கற நினைப்பு வர ஆரம்பிச்சுது.

இதெல்லாம் இப்போ தான்… ஆனா கிரிக்கெட் அப்டிங்கறது ஸ்லோவா ஸ்டெடியா விளையாடுற விளையாட்டுன்னு எல்லாரும் நெனச்சிட்டு இருந்த காலத்துல ஒருத்தர் டி20 ஸ்டைலில் பேட்டிங் பண்ணினார். ஹெல்மெட் கூட இல்லாம மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்ச சிக்ஸர்க்கு பறக்க விட்டு தில்லுக்கு துட்டு பேட்டிங் ஆடுனவர் தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

பயமா ஹாஹாஹா னு கபாலி படத்துல வர டயலாக் இவருக்கு பக்காவா பொருந்தும். எப்பவுமே எந்த பவுலரையும் பாத்து பயப்படாம… பட்டா பாக்கியம் படாட்டி லேக்கியம்னு பேட்டிங் பண்ணவர் தான் Cheekka என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்.

1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக அதிகபட்ச ரன் அடித்தவர் இவர் தான். பேட்டிங்ல எப்டி யாரப் பத்தியும் யோசிக்காம பயமில்லாமல் பேட்டிங் பண்ணாரோ அதே மாதிரி தான் இப்போ கிரிக்கெட் வர்ணனை-லயும் பயமில்லாம அவருக்கு தோணுற பாயிண்ட்ஸ வெளிப்படையா பேசுறாரு.

அதுவும் இவருடைய கிரிக்கெட் டெர்ம்ஸ்லாம் இப்போ எல்லாருக்கும் புடிச்ச விஷயமா இருக்கு. போடு சக்க, மூக்கு மேல ராஜா, தில்லுக்கு துட்டு பேட்டிங், தோசுகிங், Dear Viewers, Come On டா மச்சா இப்டி சொல்லிட்டே ஆகலாம்… கிரிக்கெட் விளையாடும் போதும் சரி இப்போ கிரிக்கெட் வர்ணனை பண்ணும் போதும் சரி எப்பவுமே நம்மள என்டர்டெயின் பண்ற சீக்கா அவர்களுக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Article By RJ Kavin