Cinema News Stories

2023-ல் கொண்டாடப்பட்ட சிறந்த இந்திய திரைப்படங்கள்!

இந்திய அளவுல 2023 நிறைய நிறைய நல்ல படங்கள் வெளியாகியிருந்தது…! அதுல வெறும் பத்து படங்கள வகைப்படுத்துறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. என்னடா எடுத்த உடனே Disclaimer அப்படின்னு சொல்லி நீங்க நினைக்கலாம்.

என்னனா இங்க குறிப்பிட்டுருக்க ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்துல சிறந்த திரைப்படமா அமைஞ்சிருந்தது..! ஒவ்வொரு படமும் எத்தனாவது இடத்தில் இருக்கு அப்படின்னு பிரிக்கல. அந்த வகையில, எல்லா திரைப்படமும் உங்களுக்குமே சிறந்த திரைப்படம்தான். வாங்க இப்ப சிறந்த படங்கள் பத்தி பாப்போம்.

இப்படிப்பட்ட Supe Star-அ இதுக்கு முன்ன பாத்து இருக்கவே மாட்டோம்..! இரத்தம் தெறிக்க நெல்சனின் Jailer..! பாக்கா Raw Commercial 💥தலைவரோட Swag..! Anirudh Music இந்த படத்துல மிக பெரிய தூண்…! லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல மிக அதிக அளவு எதிர்பார்ப்புகளோட வெளியான Leo..! 2023-ல அதிக அளவு வசூல் செய்த தமிழ் திரைப்படம்…! மறுபடியும் விஜய் திரிஷா Pair. LEO Movie under the LCU -வா இல்லையா, அடுத்த Movie Lead, Fake flash back, Fans Theory-னு நிறைய பேச வச்ச படம்…!

தமிழ் சினிமாவுல அவ்வப்போது சில படங்கள் திடீர்னு அத்திப்பூவா பூத்து கொஞ்சம் நம்மளை சந்தோஷப்படுத்தும், கலங்கடிக்கும், கொண்டாட வைக்கும், கொஞ்சம் மிரள வைக்கும். அப்படி வந்த திரைப்படங்கள் குட் நைட், சித்தா, அயோத்தி, டாடா மற்றும் போர் தொழில்..! புதுமுக இயக்குனர்களால் மயிலிறகு வருடலாய் 2023-ல வெளிவந்த ரெண்டு திரைப்படம்..! கணேஷ் கே பாபு இயக்கத்துல வெளியான Dada..! கவின் & அபர்ணாவோட நடிப்பு, ஜென் மார்ட்டின் இசை படத்தோட பயணிக்க வெச்சது…!

வினாயக் சந்திரசேகரன் இயக்கத்துல வெளியான Good Night..! படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் கதாபாத்திர தேர்வு..! மணிகண்டன், மீத்தா முன்னணி கதாபாத்திரமா இருந்தாலுமே ரமேஷ் திலக் & ரேச்சல்(மகா) அதிகமா Score பண்ணிட்டு போயிட்டாங்க..! Sean Roldan இசை Vibe Material…! அயோத்தி திரைப்படம் திரையரங்கில் ரசிகர்களை அழுக வைக்கிறது அப்படிங்கறது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. அதுவும் சிறுவனிலிருந்து வயதானவர்கள் வரைக்கும் அனைத்து வயதினரையும் கலங்கடிக்க செய்த படம் தான் அயோத்தி. சசிகுமார் திரை பயணத்தில் ஒரு அழுத்தமான படம். ரசிக்க வைக்க மட்டுமில்ல படம் முடிந்து ஒவ்வொருத்தரும் தங்களுக்குள்ள ஒரு நல்ல குணத்தை கொண்டு செல்ல வைத்த படம் அயோத்தி.

ஒரு சில திரைப்படங்கள் வந்ததுக்கு அந்த திரை குழுவினருக்கு நம்ம வாழ்த்துக்கள் சொல்லலாம், ஆனால் ஒரு சில படங்களுக்கு தான் நம்ம நன்றியை சொல்லணும். அப்படி இந்த 2023-ல சித்தா திரைப்படம் எடுத்த அருண்குமாருக்கும் சித்தார்த்துக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அந்த படத்தில் நடித்த சகஸ்ரா ஸ்ரீ அவ்வளவு இயல்பா நம்ம மனசுக்கு ரொம்ப நெருக்கமா நடிச்சிருப்பாங்க, நாயகி நிமிஷா விஜயன் படத்துல வர்ற Pre Climax காட்சியில மொத்த படமும் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி இருப்பாங்க.

இன்றளவும் பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகளை செவிட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லி இருப்பார் இயக்குனர். அதற்காக படத்தின் காட்சிகள் பாடம் எடுக்கிற மாதிரி இருக்காது. பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அடுத்த வருடம் விருது வழங்கும் விழாக்கள்ல சித்தா தவிர்க்க முடியாத படமாக இருக்கும். இந்த வருடத்தின் மிகச்சிறந்த க்ரைம் திரல்லர் படங்கள்ல போர் தொழில் ஒரு முக்கியமான படம், அசோக் செல்வன் தன்னுடைய Life Time-ல பெருமையா சொல்லிக்கிற படங்களில் இந்த படம் ஒரு முக்கியமான படமாய் இருக்கும். அதோட சரத்குமார் அவர்களுக்கும் இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கும். ஒரு நல்ல Comeback அவருக்கு.

Atlee-யோட முதல் Debut ஹிந்தி திரைப்படமான Jawan- Highest Grosser of 2023…! இந்த திரைப்படமானது இதுக்கு முந்தைய ஷாருக்கான் நடிப்புலயே சித்தார்த் ஆனந்த் இயக்கத்துல வெளியான பதான் படத்தின் Collection-ஐயும் முறியடிச்சு முன்னிலைல இருக்கு..! அடுத்ததா 2018-அப்படிங்கற படத்த பத்தி சொல்லி ஆகணும். பிரபல மலையாள இயக்குனர் ஜூட் அந்தோனி ஜோசப் இயக்கியிருந்தார். நிறைய திரைப்பட நட்சத்திரங்கள் ரொம்ப இயல்பா நடிச்சிருப்பாங்க. சமீபத்துல சென்னைக்கு வந்த புயல் மழை கூட இந்த படத்தோட நம்மள கனெக்ட் ஆக வைத்திருந்தது.

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் மம்மூட்டி Mamukka..! 72வயதிலும் நடிப்பில் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் சாவாலாகவே இருக்கிறார்..! 2023 -ல் அவருடைய மூன்று திரைப்படங்கள் வெளிவந்து Commercial + Critic சிறப்பாய் அமைந்தது… LPJ (Lio Jose Pellissery) இயக்கத்தில் வெளிவந்த நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள படமாக இருப்பினும் பழனி அருகில் உள்ள கிராமத்தில் உருவாக்கப்பட்டது…! அறிமுக இயக்குனர் Roby Varghese Raj இயக்கத்தில் வெளிவந்த Kannur Squad. It’s a Tribute flim for Real Kannur Squad. Jeo Baby இயக்கத்தில் வெளிவந்த Kadhal-The Core எந்தவொரு முன்னணி நடிகரும் தொடத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கன்னடத்தில வெளிவந்த Sapta Saagaradaache Ello – Side B..! தமிழ்ல ஏழு கடல் தாண்டி-னு Release Aachu..! படம் முழுக்க பரிதவிப்பு..! ப்ரியா மாறி காதலிக்காக காத்திருப்போர் பட்டியல் வைக்குற அளவுக்கு ருக்மிணி வசந்த் நடிப்பு..! ரக்க்ஷித் ஷெட்டி பத்தி சொல்லவே வேண்டாம்..! Sapta Saagaradaache Ello – Side B எதார்த்த குவியல்…! இப்படி சொல்லிட்டே போகலாம்… இன்னும் பல படங்கள் இருக்கு. இருந்தாலும் மேல சொன்ன படங்கள் இந்த வருசத்தோட மிக முக்கியமான படங்கள்.

Article By RJ Roopan & RJ Meenu