Cinema News Specials Stories

5 Years of ’Petta’

இது பேட்ட பாயுற நேரம்… Superstar அப்படிங்குறது வெறும் அடை மொழி கிடையாது. அது ஒரு Brand, அது ஒரு அடையாளம். ஒரு நிஜம் இருக்குனா கண்டிப்பா அதுக்கு Equal ஆன போலிய ரெடி பண்ணிரலாம், ஆனா Superstar ரஜினிகாந்த் மாதிரியான ஒரு தலை சிறந்த நடிகருக்கு Equal-ஆ போலி ரெடி பண்ண முடியாது. அவர மாதிரியான ஒரு நடிகர் இந்த நாட்டுலயே கிடையாது. Open-ஆ சொல்லனும்னா இந்த உலகத்துல கூட கிடையாது.

Jailer படத்துல வர dialogue மாதிரிதான் “பொருள் அந்த மாறி வர்மா” தலைவர் அந்த மாறி. Shivaji படத்துக்கு அப்புறம் குசேலன், கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா,2.0 இப்படி எந்த படத்துலயும் பழைய சூப்பர் ஸ்டார் மேனரிசத்த பாக்கவே முடியல. We Need Vintage ரஜினினு எல்லாரும் கேட்டுட்டு இருந்தாங்க!!!

அந்த ஒரு தீரா பசிய பேட்ட படம் மூலமா மக்களுக்கு ஒரு Full Meals-ஆ குடுத்தாரு கார்த்திக் சுப்பாராஜ். படம் Release ஆகி எல்லா Shows-ம் Housefull. படம் Blockbuster Hit ஆகுது. யார் யாரோ Fan Boy சம்பவம் பண்றாங்க. என்னோட தலைவருக்கு நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா அப்படினு சொல்லி Superstar ரஜினிகாந்த் அவர்களுக்கு Blockbuster படத்த கொடுத்தாரு நம்ப கார்த்திக் சுப்பாராஜ்.

பேட்ட படம் ரிலீஸ் ஆகி 5 வருஷம் ஆகியும் கூட இப்போ வரைக்கும் பேட்ட பட Shooting Time-ல எடுத்த Unreleased Photos எல்லாம் ஒவ்வொரு வருஷமும் தலைவர் பிறந்தநாள் அன்னைக்கு Social Media-ல ஷேர் பண்ணிட்டு இருக்காரு கார்த்திக் சுப்பாராஜ். DEC 12, 2023 அன்னைக்கு ரீலிஸ் ஆனது தான் கடைசி போஸ்டர். உண்மையிலேயே ஒரு தரமான Fan Boy-னா அது கார்த்திக் சுப்பாராஜ் தான்.

இந்த படத்துல நடிச்ச ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்னா படத்துல நடிக்காமலே ஹீரோ ஆகியிருக்காரு ராக் ஸ்டார் அனிருத். சும்மாவா ராக்ஸ்டார்னு பட்டம் கொடுத்திருக்காங்க. பேட்ட படத்துல Songs, BGM எல்லாத்துலயும் மரண மாஸ் பண்ணிருப்பாரு நம்ப அனிருத். “மரணம் மாசு மரணம்” இந்த பாட்ட அனிருத்தோட குரல்ல கேக்குறப்ப வேற Level-ல இருந்துச்சு, அப்புறம் தலைவர் Fight பண்ணிட்டு கெத்தா நடந்து வரப்ப பேட்ட Bgm வரும் பாருங்க…

அப்டியே புல்லரிச்சிருச்சி Theatre-ல. இந்த பேட்ட படம் எப்படி நம்ப தலைவருக்கு ஒரு Blockbuster மூவியோ அதே மாதிரியே நம்ம சிம்ரனுக்கும் நல்ல கம்பேக் மூவி தான். 2008-ல “வாரணம் ஆயிரம்” படம் இவங்களுக்கு ஒரு சூப்பர் படமா அமைஞ்சுது, அதுக்கு அப்புறம் 11 வருஷம் கழிச்சு ஒரு பெரிய படம் பண்ணிருக்காங்கனா, அது பேட்ட தான். இந்த படத்தோட வில்லன் பத்தி கண்டிப்பா பேசியாகணும். Nawazuddin Siddiqui சிங்காரம் அப்டிங்குற பேருல நடிச்சிருக்காரு.

Trisha BTS from Petta
Trisha BTS from Petta

Flashback-ல இவ்ளோ பயந்தாங்கோலியா இருக்கான் இவன் என்ன பண்ணிடப் போறான்னு பாத்தா, ஒரு ஊரையே வெடிக்க வெச்சி பெரிய வில்லனா மாறிடுவான். Flashback-ல நம்ம எல்லாருக்கும் புடிச்ச த்ரிஷா ரொம்ப அழகா அவுங்களோட Role-ல பண்ணிருப்பாங்க. இவங்களுக்கு Equal-லா மாளவிகா மோகனன் சூப்பரா நடிச்சிருப்பாங்க.

சசிகுமார், பாபி சிம்ஹா, சனந்த் இவங்க எல்லாருமே அவங்களுக்கு கொடுக்கப்பட்ட Role-ல ரொம்ப அருமையா பண்ணிருப்பாங்க. எல்லாத்தையும் சொன்ன நான் ஒருத்தர சொல்லல… அவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இந்த படத்துல பேட்ட சிங்காரம் எவ்ளோ முக்கியமோ அதே அளவுக்கு ஜித்துவோட கதாபாத்திரமும் ரொம்ப முக்கியம். அந்த Role-ல விஜய் சேதுபதிய தவிர வேற யாராலயும் கனக்கச்சிதமா பண்ணியிருக்க முடியாது.

Overall-ஆ பேட்ட படம் Release ஆகி 5 வருஷம்னு நம்ப Celebrate பண்ணுறோம்னா அதுக்கு இந்த ஒட்டு மொத்த Team-ம் தான் காரணம். பேட்ட மாதிரி சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து இதே காம்போல ஒரு மூவி வரனும்னு தான் வெயிட் பண்றோம், வரும் காத்திருப்போம்…

Article By RJ BHARATH