Cinema News Specials Stories

குமுதா ஹாப்பி அண்ணாச்சி!

தமிழ் சினிமால இதுவரைக்கும் தொன்று தொட்ட காலத்துல இருந்து பல ஹீரோஸ Cross பண்ணி வந்துருப்போம். நிறைய ஹீரோக்களுக்கு உயிரே குடுக்கிற அளவுக்கு நம்ப ஊர்ல தீவிரமான ரசிகர்கள் இருக்காங்க.

அதுல நம்மள மாதிரி மக்கள் கூடவே, எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து, திரையுலகத்துக்கு போய் அங்கேயும் படங்கள்ல கதாபாத்திரமா வாழ்ந்து, இன்னைக்கு மக்கள் செல்வனா நம்ப மனசுலயும் வாழ்ந்துட்டு இருக்காரு “விஜய் சேதுபதி”. இவரு கஷ்டப்பட்டு வந்தாருங்கிறத தாண்டி இஷ்டப்பட்டும் வந்தாரு.

நமக்கே தெரியும் அவரு ஆரம்பத்துல சீரியல்ல வர ஆரம்பிச்சாரு, அப்பறம் படத்துல Guest Role, இப்போ இங்க. இதை நம்ப சொல்றப்போ Easy ah சொல்லிரலாம். ஆனா, அவரு ஒவ்வொரு இடத்துலயும் எவ்ளோ கஷ்டங்கள் அனுபவிச்சாரு அப்டிங்கிறத தான் நம்ப தெரிஞ்சிக்கணும். எல்லாருக்குமே Life ஒரு கட்டத்துல பணத்தோட முக்கியத்துவத்த கத்து குடுக்கும்.

அந்த மாதிரி இவருக்கும் பணத் தேவை இருந்துது. அப்பா உடம்ப கவனிக்கணும் அப்படிங்கற பொறுப்பும் இருந்துது. அதுக்காக துபாய் போய் ரொம்ப சிரமப்பட்டாரு விஜய் சேதுபதி. அங்க போனதும், அவருக்கு படங்கள் மேல இருக்க ஆர்வம் ஜாஸ்தி ஆயிருச்சு. So படத்த பத்தி சின்ன சின்ன விஷயமும் தேட்றது, படிக்கிறது, வாய்ப்ப பயன்படுத்தறதுனு பல விஷயங்கள் பண்றாரு.

அதுக்காக துபாய்ல இருந்து இந்தியாக்கும் வராரு. நம்ம Aim-அ நோக்கி போறதுக்கு இவரு உண்மையிலே ஒரு True Example-ங்க. நடிச்சா ஹீரோவா தான் நடிப்பேன்னு சொல்லாம கிட்டதட்ட 200 Short Films-ல நடிச்சு Cameo Roles பண்ணி அதுக்கப்பறம் தான் இவருக்கு இந்த வாய்ப்பே கெடச்சுது. இவருகிட்ட இருந்து நாம Life-ல கத்துக்க வேண்டிய Lessons என்ன தெரியுமா?

Lesson 1: விடாமுயற்சி

ஒரு துறைல நம்ப பேர பதிக்கணும்னா அதுக்கு தொடர்ந்து முயற்சி எடுத்துட்டே இருக்கனும். விஜய் சேதுபதி பல படத்துல ஜூனியர் Artist ah நடிச்சுருக்காரு. புதுப்பேட்டை படத்துல அவருக்கு கெடச்ச சம்பளம் 500 ரூபாய்.

Lesson 2: Negative To Positive

நான் சொல்ல தேவ இல்ல உங்களுக்கே புரியும், இதே விஜய் சேதுபதி 16 வயசுல கமல் Sir ஓட நம்மவர் படத்துல நடிக்க வாய்ப்பு கேட்டாரு. அப்போ ரொம்போ சின்ன பயனா இருக்கனு, இவருக்கு வாய்ப்பு தரல. ஆனா, இப்போ விக்ரம் படத்துல கமல் Sir-க்கு எதிரா ஒரு முரட்டுத்தனமானா வில்லனா நடுச்சுருக்காரு. Love Birds, கோகுலத்தில் சீதை, நான் மஹான் அல்ல இப்படி பல படத்துல ஜூனியர் Artist-ah Work பண்ணி ஒரே வருஷத்துல 3 படம் Release பண்ணாரு.

நடிக்க ஆரம்பிக்கறப்பவே Negative கேரக்டர் பண்ண வேண்டாம்னு யோசிக்காம, அந்த கேரக்டர் ஓட Depth-ah புரிஞ்சு அந்த கேரக்டர அவரால எவ்ளோ ஸ்பெஷல்-ah பண்ண முடியுமோ, பண்ணாரு. அவரு சுந்தரபாண்டியன்ல பண்ண ஒரு நெகடிவ் ரோல் தான் அவர சீனு ராமசாமிக்கு அறிமுகப்படுத்துச்சு. இன்னும் சொல்லனும்னா… அந்த Negative Role தான் அவர Positive ஆன ஹீரோவாவே மாத்துச்சு ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல.

Lesson 3: Stability & Confidence

ஒரு துறைல இடத்த புடிக்கணும்னா ஏதோ ஒரு வகைல தொடர்ந்து உழச்சிட்டே இருக்கனும். First தென்மேற்கு பருவகாற்று அடுத்து நடுல கொஞ்சம் பக்கத்த காணும் அடுத்து Pizza 3 படங்களும் ஒரே வருஷத்துல இவர் நடிப்புல வெளியாச்சு. Overnight-ல ஒபாமா அப்படிங்கிறது இது தான் போல… இன்னொரு விஷயம் சொல்லுவாங்க “ஒரு ஆணோட வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண்ணு இருப்பாங்க”னு.

அதே மாதிரி இவரு நடிகராகணும்னு Try பண்ணப்போ அவங்க மனைவி தான் ரொம்போ Support பண்ணி பாத்துக்கட்டங்களாம்ப்பா… அது சரி மனைவி அமைவதெல்லாம் வரம்னு சும்மாவா சொன்னாங்க. இவரோட நடிச்ச எத்தனையோ Heroines ‘இவரா ஹீரோ’ அப்டினு கேட்டவங்க தான்… இத எங்கயோ கேட்ட மாறியே இருக்குல ஆமா அதே அதே. Appearance Are Deceptive… ஒருத்தரோட Look ah வச்சு Decide பண்ணக்கூடாது.

இப்படி தொடர் படங்கள் நடிச்சு நல்ல பேர் வாங்கின பிறகும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள்ல, Guest Role-ல நடிக்க தயங்காத கதாநாயகன் நம்ம விஜய் சேதுபதி. எவ்ளோ பெரிய படமா இருந்தாலும் அவர் 1 Second வந்தா போதும் அப்படியே நம்மள அவர் பக்கம் பாக்க வச்சுட்டு போய்டுவாரு.

Lesson 4:

இவரு ஆரம்பத்துல Short Film பண்றப்பவே 3 இயக்குனர்கள் கூட நல்ல நண்பனா பயணிச்சாரு. கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி, மணிகண்டன் இவங்க கூட தான். எல்லார் கிட்டயும் நல்ல Friend இவரு. So நம்ப இது மூலமா தெரிஞ்சிக்க வேண்டியது என்னனா நமக்கு துறை ரீதியா நல்ல நண்பர்கள் இருந்தா நெனச்சத பண்ணலாம்.

சினிமானு இல்ல, எல்லா துறைலயுமே விஜய் சேதுபதி மாதிரி தொடர்ந்து வித போட்டு தண்ணி ஊத்தி நம்ம வேலைய பராமரிச்சிட்டே இருந்தா… நம்மளும் ஒரு பெரிய மரமாகி நாலு பேருக்கு நிழல் தருவோம்!

Article By RJ Naga