Specials Stories

Journey Of Jersey No.16

கர்நாடகா Ranji அணியுடைய அசத்தல் கேப்டன் தான் நம்ப Mayank Agarwal. பெங்களூர்ல பிப்ரவரி மாசம் பிறந்த இவரு கிரிக்கெட் மேல காதல் கொள்றாரு. சின்ன வயசுல இருந்து ரொம்ப நல்லா கிரிக்கெட் விளையாடுறாரு, Street Cricket-ல இவரு ஒரு All Rounder. பொதுவா ஊருல கிரிக்கெட் விளையாடுற எல்லாருக்கும் பேட்டிங்கும் பண்ணனும், பௌலிங்கும் பண்ணனும்னு ஆசை இருக்கும்.

ஆனா எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது, ஆனா Mayank ரொம்ப நல்லா ரெண்டுமே பண்ணுவாருனு அவருக்கு பேட்டிங், பௌலிங் கூப்ட்டு கூப்ட்டு குடுத்திருக்காங்க. தன்னோட 13 வயசுல கர்நாடக கிரிக்கெட் Team-க்காக விளையாடுறாரு. அவரோட முதல் கிரிக்கெட் Jersey U-13 கர்நாடக Jersey தான். U-13 கர்நாடக Team-காக விளையாடுறப்ப 150 ரூபாய் குடுப்பாங்களாம். அந்த Time-ல அந்த காசுல நிறைய Chocolates வாங்கி சாப்பிடுவாராம்.

இவரு ஸ்கூல் கிரிக்கெட் Team-லயும் இருந்திருக்காரு. அப்போ வேற Schools-க்கு எதிரா Match விளையாடுறப்ப பேட்டிங் விட பௌலிங் சூப்பரா போடுறாரு. அந்த Match-ல Mayank போட்ட பௌலிங் பத்தி Newspaper-ல வருது. அதுக்கப்புறம் இன்னும் உற்சாகமா கிரிக்கெட் விளையாடுறாரு. அடுத்த கட்டமா 2008-ல U-19 Cooch பீகார் Trophy-ல விளையாடுறாரு. அதுல நல்லா விளையாண்டதுனால 2010 U-19 ICC World Cup விளையாடுறதுக்கு வாய்ப்பு கிடைக்குது.

இது ஒரு மிகப் பெரிய வாய்ப்புன்னு அவருக்கு நல்லாவே தெரியும், கிடைக்குற எல்லா வாய்ப்பையும் வெற்றியா மாத்தணும்னு நினைக்குற அவர் Vera Level-ல பேட்டிங் பண்றாரு. எதிர்பாராத விதமா நம்ப இந்திய அணி Playoff-ல தென் ஆப்பிரிக்கா அணி கிட்ட தோல்வி அடையுது. ஆனாலும் அந்த வருஷம் Leading Run Scorer நம்ப Mayank தான்.

தன்னோட கிரிக்கெட் Inspiration ஆன “GOD OF CRICKET-SACHIN TENDULKAR” மாதிரி ஏதாச்சும் Record Create பண்ணனும்னு ஆசை படுறாரு & அவரோட Batting Hero Virender Sehwag மாதிரி Aggresive Batting பண்ணனும்னு முடிவு பண்ணுறாரு. இதோட Result-ஆ 2017 Ranji Trophy-ல கர்நாடக Team-காக ஒரே Match-ல 300 ரன் அடிக்குறாரு. அந்த மேட்ச்ல Mayank Notout பேட்ஸ்மேன். அந்த வருச ரஞ்சில 1160 Runs அடிக்குறாரு. Leading Run Scorer ஆகுறாரு.

அதுக்காக 2018-ல “Madhavrao Scindia Award” BCCI கொடுக்குறாங்க. அந்த Award வாங்கிட்டு அதே Fire-ஓட 2018-ல Vijay Hazare Trophy-ல வெறும் 8 Match-ல 723 Runs அடிக்குறாரு. அவரு ரொம்ப வருஷமா எதுக்காக காத்துகிட்டு இருந்தாரோ அந்த நாள் வந்துருச்சு, அவரோட பெயர் Indian Team-ல இடம் பிடிக்குது. மொத மேட்ச்சா Test மேட்ச், West Indiesக்கு எதிரா விளையாடப்போறோம்னு ரொம்ப ஆசையா ஆர்வமா இருந்த அவருக்கு அந்த மேட்ச்ல வாய்ப்பு கிடைக்கல.

அடுத்து Australia-க்கு எதிரா Test மேட்ச் அதுலயும் அவரோட Name இருக்கு. இந்த வாட்டியும் நம்ப வெளியிலதான் இருக்கபோறாம் அப்டினு நினைச்சிட்டு இருந்த அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குது. India Team-ல நல்ல Perform பண்ணிட்டு இருந்த Prithvi Shaw-க்கு Injury ஆகுது. அதனால Prithvi Shaw-க்கு பதிலா Mayank Agarwal-அ Team-ல சேக்குறாங்க.

Mayank-க்கு நல்லா தெரியும் இந்த மேட்ச் கண்டிப்பா தான் யாருங்கிறத Proof பண்ணியே ஆகணும், அதும் ஆஸ்திரேலியா மாதிரியான Team Against-ஆ நல்ல பேட்டிங் பண்ணி Proof பண்ணிட்டா Indian Team-ல அவருக்கு ஒரு இடம் கிடைச்சிரும். அந்த மேட்ச்ல நல்லா விளையாண்டு தன்னோட முதல் Half Century-அ பதிவு பண்ணுறாரு. நல்லா விளையாடிட்டு இருந்த அவரு 76 ரன்ல அவுட் ஆகி Pavilion திரும்புறாரு.

அடுத்ததா 2019 Test World Cup-ல இவரோட பேரு இடம் பெறுது. ஆனாலும் விளையாட வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல. ஏன்னா Rohit Sharma & Vijay Shankar நல்ல Form-ல இருந்தாங்க. ஏதாச்சும் Miracle நடக்கும்ணு யோசிச்சிட்டு இருந்த அவருக்கு Call வருது. Hey Monk, Vijay Shankar-க்கு Injury ஆகிருச்சு. இந்த Worldcup நீ தான் விளையாடப்போறன்னு சொல்றாங்க. அப்போ Mayank-அ எல்லாரும் Monk-னு தான் கூப்பிடுவாங்க. Mayank-க்கு செம்ம Happy.

IND vs SA மேட்ச் நல்லா பொறுமையா விளையாடி Century அடிக்குறாரு. சந்தோசமா பேட்ட தூக்கி காமிக்குறாரு. அப்போ இந்திய அணி கேப்டன் Virat Kohli எனக்கு 200 வேணும்னு Pavilion-ல இருந்து கைகாமிக்கிறாரு. சேரின்னு சொல்லிட்டு பொறுமையா 150 அடிக்குறாரு, அப்புறம் அவரோட Double Century அடிக்குறாரு. எல்லாரும் Standing Ovation குடுக்குறாங்க. Mayank ஓட வாழ்க்கைல ஒரு முக்கியமான நாளா இது மாறுது.

அடுத்த மேட்ச்சும் Century அடிக்குறாரு. அவரோட Batting Hero ஆனா Sehwag தான் இதுக்கு முன்னாடி அடுத்தடுத்த மேட்ச் 100 அடிச்சது. அந்த Record-அ இவரும் பண்ணுறாரு. 2019 Test WC-ல அவரே நினைச்சு பாக்காத ஒருத்தரோட Record-அ Beat பண்றாரு. Test கிரிக்கெட்டின் ஜாம்பவான் Don Bradman 13 Innings-ல 2 Double Century அடிச்சிருக்காரு.

Mayank தன்னோட 12வது இன்னிங்ஸ்ல பங்களாதேஷ்க்கு எதிரா தன்னோட 2 Double Century அடிக்குறாரு, Highest ரன்னா 243 அடிக்குறாரு. இந்த மேட்ச் மூலமா Don Bradman Record-அ Beat பண்ணுறாரு. 2020 ஐபில்ல Punjab Kings Team-காக விளையாடுறாரு. அந்த Tounament-ல ராஜஸ்தான் அணிக்கு எதிரா ஐபில்ல தன்னோட முதல் 100 ரன்கள அடிக்குறாரு. 50 Ball-ல 106 Runs. அந்த வருஷம் ஐபில்ல சூப்பர் Performance பண்றாரு.

Next Year 2021 Punjab அணி கேப்டன் KL Rahul-க்கு Health Issue-னால அவருக்கு பதிலா Part Time கேப்டனா Mayank-அ போடுறாங்க. 2022 Punjab அணிக்கு Full Time கேப்டனா Mayank-அ ஆக்கிட்டாங்க. கடைசியா 2023 ஐபில்ல Sunrisers Hydrebad-காக விளையாடினாரு. அடுத்து வரபோற 2024 ஐபில்லையும் SRH-க்காக விளையாடப்போறாரு Mayank. இன்னும் எக்கச்சக்கமான Recordsக்கு சொந்தக்காரர் ஆவாரு அப்டிங்குற நம்பிக்கையோட Jersey No.16, Monk என்கிற Mayank-க்கு சூரியன் FM-ன் பிறந்தாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Barath

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.