செய்தி தொகுப்பாளராக தொடங்கிய இவரது பயணத்தில்… இன்று இவர் போடும் ஒவ்வொரு போஸ்ட்டும் செய்திகளாக மக்களுக்கு கிடைக்கிறது. யதார்த்தமான இவங்க பேச்சும், அன்பான சிரித்த முகமும், மத்தவங்களுக்கு ஒரு Positivity கொடுக்கும். இதுதான் இந்த டைட்டிலுக்கு காரணம். பொதுவா ஒரு விஷயம் சொல்லுவாங்க சின்னத்திரைல வந்துட்டா வெள்ளித்திரைல மக்கள் ரசிக்க மாட்டாங்கன்னு, ஆனா அத பிரேக் பண்ணது பிரியா பவானி ஷங்கர் தான்.
வெள்ளித்திரைல ஹீரோயினா மக்கள் மனசுல இடம் பிடிக்கறது அவ்ளோ ஈசி இல்ல. அத எப்டி சாத்தியமாக்கினாங்கனு பாக்கலாமா?! மேயாத மான் திரைப்படத்துல மது கதாபாத்திரத்துல தான் சினிமால என்ட்ரி கொடுத்தாங்க. அதுக்கு அப்பறம் இவங்க Performance-னால மான்ஸ்டர், மாஃபியாவா சினிமாவுல கலக்கிட்டு இருக்காங்க. நடிப்புக்கு Homework பண்றது இவங்க கதாபாத்திரத்த மேலும் அழகு படுத்தியிருக்கு.
Diet Follow பண்ற கதாநாயகிகளுக்கு மத்தில பிரியாணி சாப்பிட்டு Life-அ Enjoy பண்ற கதாநாயகி பிரியா தான். தனக்கு எந்த கதாபாத்திரம் சரியா இருக்கும்னு தேர்வு செய்றதுல பிரியா பவானி ஷங்கர் ரொம்ப தெளிவு. அதுதான் இவங்க சினிமா வாழ்க்கைல வெற்றி பெற காரணமும் கூட. அழகிய தமிழ் உச்சரிப்பு, சிரிக்கும் அழகு, தமிழ் மணம் வீசும் அழகு இதெல்லாம் பிரியா பவானி ஷங்கரின் Speciality.
கோவத்த கூட ரசிக்கிற விதமா தான் இவங்க நடிப்பு இருக்கும். அதுக்கு உதாரணமா மேயாத மான் திரைப்படத்துல இவங்க ஹீரோ கிட்ட கோவமா பேசுற ஒரு சீன் இருக்கும். அதுக்கு இப்போ வரைக்கும் Fans இருக்காங்க. குறிப்பிட்டு இந்த Scene-அ பாக்கவே இந்த படத்த பாக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. அது நம்ம பிரியா பவானி ஷங்கருக்கும் ரொம்ப ஸ்பெஷல். காரணம் வெள்ளித்திரையில் கேமரா முன்னால அவங்க நடிச்ச முதல் காட்சி இந்த கோவப்படுற Scene தான்.
பொதுவா ஹீரோயின் அப்டினா ஒரு பந்தா இருக்கும். ஆனா நல்ல தமிழ் உச்சரிப்புல எந்த அலட்டலும் இல்லாம Straight Forward பதில் பிரியா பவானி ஷங்கர் கிட்ட கிடைக்கும். இவங்களுக்கு பொருத்தமான ஒரு Term – Bold & Beautiful-னு சொல்லலாம். காரணம் Safe Zone-ல பதில் சொல்லாம Straight Forward-அ இவங்க கருத்துக்களை எப்பவும் சொல்லிருக்காங்க. இவங்களோட இந்த தைரியத்துக்கே ஸ்பெஷல் Fans இருக்காங்க. விமர்சனம் இல்லாத நடிகை தான் யாரு?
ஆனா அத Cool-அ Deal பண்ண பிரியா சொல்றத கேளுங்க “நம்மள பாதிக்கிற மாதிரி மத்தவங்க சொல்ற கருத்துக்களை நம்ம ஏத்துக்க கூடாது”. சரியான பாதையில் பயணம் செய்யும் பிரியா பவானி ஷங்கருக்கு அவருடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். பிரியா பவானி ஷங்கருக்கு பிரியமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.