Specials Stories

இதை செய்தால் சிரமமின்றி மூச்சு விடலாம் !!!

Lockdown, isolation, quarantine, curfew இதெல்லாம் இந்த கொரோன கால கடடத்துல நம்ம கத்துகிட்ட, கேட்ட புது புது வார்த்தைகள். இந்த கொரோனா இரண்டாம் அலையில் இப்ப பரவலா எல்லாரும் சொல்லிட்டு இருக்கக்கூடிய ஒரு வார்த்தை Proning. இது வார்த்தை இல்ல, உயிர் காக்கும் முறைனு சொல்லப்படுது. proning-னா என்ன? அது என்ன மாதிரியான சிகிச்சை முறை? எந்த வகைகள்ல உயிர் காக்குதுனு? இந்த பதிவுல பாக்கலாம்.

Covid 19 Coronavirus Cases Today In India Health Ministry Report: Covid  Cases Rise, Corona Deaths, Lockdown, Remdesivir, Oxygen, Maharashtra, Mp,  Delhi, Gujarat, Up - Corona Live: राष्ट्रीय राजधानी दिल्ली में 13468 नए

கோவிட் – 19 க்கும் ப்ரோனிங்-க்கும் என்ன சம்பந்தம்? எந்த வகையில இந்த நோய்க்கு Proning தீர்வை தருதுனு பாக்குறதுக்கு முன்னாடி , ப்ரோனிங்னா என்னனு பாக்கலாம்.

ப்ரோனிங் என்பது சிகிச்சை முறைன்னு சொல்றத விட, அத ஒரு Position-னு சொல்லலாம் . முகம் கீழ் புறமா இருக்க மாதிரி படுக்கும் முறைக்கு பேறு தான் ப்ரோனிங். இது தான் இப்ப உயிர் காக்கும் முறையா இருக்கு.

இந்த கொரோனா இரண்டாம் அலையில oxygen தட்டுப்பாடு, oxygen இல்லாம இறந்து போறதுன்னு நிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம், கண்கூட பாக்கவும் செய்த்திருப்போம் . அப்படி oxygen இல்லாம, அதாவது பிராண வாயு குறையுற சமயத்துல, அதை அதிகரிக்க Help பண்ற முறைக்கு பேறு தான் ப்ரோனிங்.

இந்த Covid வைரஸ் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் . சிலருக்கு இது நேரடியா நுரையீரலை தாக்குது. நம்ம நுரையீரலில் கிட்டத்தட்ட 300 முதல் 500 வரை காற்று பைகள் இருக்கும்னு படிச்சுருப்போம், அதை ஆளவியோலைன்னு சொல்லுவோம். இந்த alveoli சீரான சுவாசத்துக்கு Help பண்ணுது, ஆனா இந்த Corona தொற்று இந்த காற்றுப்பைகளை தாக்குற காரணத்தால சுவாசம் தடைபட்டு மூச்சு திணறல் ஏற்படுது. அதனால தான் நமக்கு oxygen Support தேவைப்படுது .

Coronavirus treatment: Hospitals face supply shortage for COVID-19 patients  | Fortune

அப்டி மூச்சு விட சிரமப்படுற சமயங்கள்ல இந்த பிரான் Position Help பண்ணும். Oxygen saturation Level 94-க்கு கீழ குறையும்போது அத உடனே அதிகரிக்க இந்த பிரான் Position ஒரு தற்காலிக தீர்வா இருக்கும் . சரி proning எப்படி பண்ணனும்னு இப்ப பாக்கலாம். இந்த பிரோனிங்க்கு கழுத்துக்கு , மார்ப்புக்கு , இடுப்புக்கு கீழ 3 தலையணை வச்சு குப்புற படுத்து ஒரு 30 நிமிஷத்துல இருந்து இரண்டு மணி நேரம் அதே பொசிஷன்ல இருக்கணும். வலது மற்றும் இடது புறங்களில் ஒருக்களித்து படுத்து 30-நிமிடத்துல இருந்து 2 மணி நேரம் அதே Position-ல இருக்கணும். கால் நீட்டி அமர்ந்த நிலையில் 30 நிமிடம் முதல் இரண்டு மணி நேரம் முதுகுக்கு கீழ் தலையணை வைத்து Relax செய்ய வேண்டும் .

Does Lying on The Belly Improve Oxygen Levels in Covid Patients? Here

சரி யாரெல்லாம் பிரோனிங் செய்யக்கூடாது, எப்போவெல்லாம் செய்யக்கூடாது என பாக்கலாம் .

  • உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்திற்கு இந்த பிரானிங் செய்யக்கூடாது.
  • எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் தான் செய்ய வேண்டும்.
  • ஒரு நாளைக்கு 16 மணி நேரம் different cycles -ல இந்த பிரோனிங்-ஐ Try பண்ணலாம் .
  • கற்பகாலத்துல, தீவிர எழும்பு முறிவு இருக்கவங்க, இதய சம்மந்த நோய்கள் இருக்கவங்க இந்த பிரோனிங் செய்ய கூடாது.

இப்ப உங்களுக்கும் இதை பத்தின தெளிவு கிடைச்சுருக்கும்னு நினைக்கிறேன். இது மட்டும் இல்லாம பிராணாயாமம், அதிகமா தண்ணீர் குடிக்கிறது, இரும்பு சத்து உள்ள உணவுகளை சாப்பிடுறது, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் மூலமாவும் பிராண வாயுவை அதிகரிக்க முடியும்.

இந்த பதிவை Share பண்றது மூலமா மத்தவங்களுக்கு Help பண்ணுங்க .

Script By
Dharshini
Radio Jockey