Specials Stories Trending

Overconfident-ல் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா

ICC ஆண்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்து கோப்பையை வென்றதின் மூலம் இந்தியாவின் உலகக்கோப்பை வெல்லும் கனவை இன்னும் நான்கு ஆண்டுகள் நீட்டிக்க செய்துள்ளது.

லீக் சுற்றுகளில் ஆஸ்திரேலியா உட்பட தான் எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளையும் தோற்கடித்து, அரைறுதியில் நியூஸிலாந்து அணியயை மீண்டும் வீழ்த்தி பலம் வாய்ந்த அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா, அதே போல் ஆரம்பத்தில் சொதப்பினாலும், பின்வரும் அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதியில் தென்ஆப்ரிக்காவை எளிதில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.

இந்தியா தான் கோப்பையை வெல்லும் என்று உலக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து கூறியிருந்தாலும், Knock Out சுற்று என்றாலே இந்தியாவுக்கு ராசி இல்லை, அதுவும் குறிப்பாக இறுதிப் போட்டிகளில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாவே சொதப்பி தோற்று தான் வருகிறது என்ற பேச்சும் ஒரு புறம் இருந்தது.

ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டி என்றால் புலி போல் சீறுவார்கள் என்று கூறப்பட்டது, அதே போல தான் ஆஸ்திரேலியாவின் சீற்றத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் 6 விக்கெட்டுகள் வித்யாசத்தில் தோற்று கோப்பையையும் நழுவ விட்டது இந்தியா. இந்தியாவின் தோல்விக்கான காரணங்களை பலர் பல விதமாக யூகிக்கின்றனர். இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு பாதகமாகவும், இந்திய அணி செய்ய தவறிய சில விஷயங்களையும் பற்றி தற்போது பார்ப்போம்.

1) Tail Batsmen :-

நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு 5 விக்கெட்டுக்கு மேல் சரியான பேட்ஸ்மேன்கள் இல்லாததே இந்தியாவால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனதற்கு காரணம், Tail Batsmen எனப்படும் ஆல்ரவுண்டர்ஸ் மற்றும் இறுதி விக்கெட்டுகளில் ஓரளவு ரன் சேர்க்கும் All Rounder பேட்ஸ்மேன்கள் இல்லாததால் இந்தியாவால் அதிக டார்கெட்டை நிர்ணயிக்க முடியவில்லை, தொடர் முழுவதும் தொடக்க பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்திய நிலையில் Tail Batsmen பற்றி பெரிதாக இந்தியா கவலைப்படவில்லை, அதுவே பாதகமாக இந்திய அணிக்கு அமைந்து விட்டது. ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவின் விலகலும் அணிக்கு பெரிய பின்னடைவு.

2) 5 Bowlers :-


5 பவுலர்களை மட்டுமே வைத்துக்கொண்டு களம் கண்டதும் இறுதிப் போட்டியில் பெரிய சறுக்கல், இதுவரை இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சு என்றால் அது இந்த உலகக்கோப்பை தொடர் தான். இந்திய அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது. அந்த அளவுக்கு 5 பவுலர்களை மட்டுமே வைத்து இந்தியா சோபித்தது.

இருந்தாலும் 5 பவுலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு விளையாடும் போது எதிரணியினரை விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில் பார்ட் டைம் பவுலர் இருந்திருந்தால் இக்கட்டான சூழ்நிலையில் அணிக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும், நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய பவுலர்கள் சிறிது நேரம் விக்கெட் எடுக்க தடுமாறினர், இலக்கு அதிகம் என்பதால் அரையிறுதியில் இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது, ஆனால் இறுதிப் போட்டியில் இலக்கும் குறைவு, ஆஸ்திரேலிய செட் பேட்ஸ்மேன்களை 5 பவுலர்களால் விக்கெட் எடுக்க முடியாத நிலையில் கை கொடுக்க பார்ட் டைம் பவுலர்கள் இல்லாததும் நேற்றைய தோல்விக்கு காரணம். ஆஸ்திரேலிய அணியில் 7 பேர் பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.

3) பேட்ஸ்மேன்கள் செய்த தவறு :-

ரோஹித் ஷர்மா, கோலி, ராகுல் தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ரோஹித் ஷர்மா மட்டுமே அதிரடியாக ரன் சேர்த்தார். 3 விக்கெட்ஈற்கு பிறகு ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ராகுல் விக்கெட் விழக்கூடாது என்பதற்காக அதிக டாட் பால்களை விளையாடினர். ராகுல் 66 ரன்களை எடுக்க 107 பந்துகளை எதிர்கொண்டார். கில் தவறான ஷாட் மூலம் கேட்ச் கொடுத்தது, ஷ்ரேயாஸ் ஐயர் வந்ததும் அவுட் ஆகி வெளியேறியது, ரவீந்திர ஜடேஜா 22 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து பெரிய ஷாட்களை ஆட முடியாமல் அவுட் ஆனது என தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதும் தோல்விக்கு காரணம். மேலும் ஜடேஜாவுக்கு லைன் பால் , சூரியகுமாருக்கு Slow Bouncer என இந்திய வீரர்களின் Weekpoint-ஐ நன்கு அறிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீசினர்.

4) டாஸ் : ஆட்டத்தின் பிற்பாதியில் மைதானத்தில் பனி அதிகம் இருந்த சூழ்நிலையில் டாஸில் தோற்றதும் இந்தியாவுக்கு பாதகமாகவே அமைந்தது.

எனினும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வரை தோல்வியே இன்றி தொடர் வெற்றிகளை தக்க வைத்து, பல சாதனைகள் புரிந்த இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

Article By Sathishkumar Manogaran