Specials Stories Trending

இசையின் இந்திரன் யுவன் !!!!

உலகத்துல எத்தனையோ தேடல்கள், எத்தனையோ காதல்கள், எத்தனையோ சோகங்கள், எத்தனையோ மோதல்கள், எத்தனையோ காயங்கள் இருக்கு. தினம் தினம் பலவிதமான மன மாற்றங்கள்ல நாம இருக்கும் போது எப்போவோ எங்கயோ எந்த நிமிசத்துலயோ எதோ ஒரு குரல் நம்ம மனசுல வந்துட்டு போகும் இல்லையா அந்த குரல்….!

காலம் காலமா நம்மள பல குரல்கள் கட்டி போட்ருக்கு. ஹிட்லரோட அதிகார குரல், மதர் தெரசாவோட அன்பான குரல், ஷேக்ஷ்பியரோட, கவித்துவமான குரல் இப்படி நம்மள ஆண்ட குரல்கள என்னைக்காவது நம்ம வாழ்க்கையில நினைக்காம இருக்க மாட்டோம். ஏன்னா அது நம்ம மனசுல ஆழமா பதிஞ்சு போன விஷயமா இருக்கும் அப்படிபட்ட வசிய குரல் … !

எப்போவோ ஒரு மழை காலத்துல எதோ ஒரு டீக்கடைல ஒரு ரேடியோல கேட்ட பாட்டு அந்த நாள் முழுக்க நம்மள முணுமுணுக்க வெச்சுருக்கும். அந்த பட்ட பாடின குரல் அந்த நிமிசத்துல நம்ம எல்லா எண்ணங்களையும் மறக்க வெச்சு தாலாட்டிருக்கும் அந்த குரலுக்கு சொந்தமானவரா கண்டிப்பா ஒருத்தர் இருந்துருப்பாரு. ஆமா இவர் பேர்ல இருக்க அர்த்தம் மாதிரியே இசையோட இந்திரன் யுவன் ஷங்கர் ராஜா தான் அந்த வசீகரிக்குற குரலுக்கு சொந்த காரர்.

குரல்வளை எழுப்புற ஒலியால மனத இந்த அளவுக்கு வருட முடியுமான்னு கேட்டா யுவனோட குரலை ரசிச்சவங்க ஆமான்னு தான் சொல்லுவாங்க அவர் குரல்ல காட்டுற ஏற்ற இறக்கங்கள் நம்ம சந்தோஷத்தையும் கவலையையும் அப்பப்போ ஏத்தி ஏத்தி இறக்க தான் செய்யுது. எந்த மன நிலையில நீங்க யுவனோட பாடலை கேட்டாலும் அந்த நிமிஷம் அவரோட குரல் சோகத்தை கொஞ்சம் சுகமாவே வருடும் சந்தோசத்தை கொஞ்சம் சத்தமாவே கொண்டாடும், உறவுகளை உருகவே வெச்சுடும்…அப்படி ஒரு ஈர்ப்பு.

இளமை துள்ளல் இசைன்னு ஒரு பக்கம் இருந்தாலும் பாதகத்தி கண்ணுல காதல பாத்த நிமிஷத்த அழகா பாடின குரல் உலகத்தோடு நாடகத்த ஓரத்துல நின்னு ரசிக்குறப்ப கொஞ்ச கழன்று போச்சுன்னு தான் சொல்லணும்.

என்ன தான் நட்சத்திர அந்தஸ்து பொறப்புலயே இருந்தாலும் பொழப்புழ தன்னோட அந்தஸ்து திறமையால மட்டும் தான் வரணும்னு புருஞ்சு தனக்குனு ஒரு பாதையை உருவாக்கி இப்போ வரை ரசிர்களோட மனச இசையால ஆண்டுட்டு இருக்க இசையின் இந்திரன் யுவன் ஷங்கர் ராஜாவோட பிறந்த நாளான இன்னைக்கு கொஞ்சம்…
இல்ல இல்ல அதிகமாவே அவரோட குரல மனசுல ஓட விடலாம்…

Article by RJ NAGA.