Specials Stories

இறைவனை அடைய, மோக்ஷம் பெற எளிமையான வழி!

இறைவனை அடைய, மோக்ஷம் பெற எளிமையான வழி! | The Easiest Way to Reach God in Tamil
இறைவனை அடைய, மோக்ஷம் பெற எளிமையான வழி! | The Easiest Way to Reach God in Tamil

க்ருதா யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் போன்ற ஒவ்வொரு யுகத்திலும் ரிஷிகளும் மகான்களும் மோக்ஷம் பெற பற்பல ஆண்டுகள் அன்ன ஆகாரம் இல்லாமல் தவம் இருந்து வரம் வேண்டி இறை அருள் பெற்றனர். இந்த கலியுகத்தில் மானுடர்களால் கடுந்தவமிருக்க இயலாததால், இறைவனை அடைய பாவங்கள் கழிக்க மோக்ஷம் பெற எளிமையான வழியாக அமைந்ததே நாம பாராயணம் நாம சங்கீர்த்தனம். எனினும் பலகோடி நாமங்கள் பல்லாயிரம் பதிகங்கள், கீர்த்தனைகள் மந்திரங்கள் உள்ளன. அவற்றுள் எந்த இறை நாமத்தை பாராயணம் செய்வது? எந்த இறை நாமம் பலஜென்ம பாவங்களை போக்கும் வலிமை கொண்டது, நன்மை எல்லாவற்றையும் கொடுக்கும் வல்லமை பெற்றது என எண்ணினால். குருமார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அஷ்டாக்ஷர மந்திரமே அதற்க்கான விடை. அவ்வளவு சிறப்பு பொருந்திய அஷ்டாக்ஷர மந்திரத்தை ராமானுஜர் யார் மூலம் அறிந்தார் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ள விருக்கிறோம்.

மக்களின் பாவங்கள் நீங்கி, துன்பக்கடலிலிருந்து மீண்டு உலக வாழ்க்கையின் பயன், மனித பிறவியின் மகத்துவத்தை மக்களிடம் உணர்த்துவதற்கான வழியை தேடினர் ராமானுஜர். மக்கள் அனைவரும் மோக்ஷம் பெற விரும்பினார். இதற்கான விடையை ஆளவந்தாரின் முதன்மை சீடரான திருக்கோட்டியூர் நம்பி அறிந்திருப்பர் என உணர்ந்த ராமானுஜர். பல மயில்கள் கடந்து திருக்கோட்டியூர் நம்பியை காண வந்தார் “நான் ராமானுஜர் வந்து இருக்கிறேன், உங்களை காண விரும்புகிறேன் என கூறினார்” இதை கேட்ட திருக்கோட்டியூர் நம்பிகளோ கதவினை மூடினார், ராமானுஜரை சந்திக்க மறுத்தார். ராமானுஜர் அவ்விடத்தை விட்டு புறப்பட்டார்.

இப்படியே பதினெட்டு முறைகள் ராமானுஜர், திருக்கோட்டியூர் நம்பிகளை சந்திக்க வர, நம்பிகளோ கதவினை மூட… இதனை நன்கு யோசித்த ராமானுஜர், மறுமுறை வரும் பொழுது அடியேன் ராமானுஜர் வந்திருக்கிறேன் என்றதும் திருக்கோட்டியூர் நம்பிகளின் கதவுகள் திறக்கப்பட்டன..அதன் தாத்பரியம் எவன் ஒருவன் தன்னை முன்னிலை படுத்தாமல், அனைத்தும் பரமாத்மாவின் விருப்பமே, நாம் அனைவரும் அவரின் அடியவர்கள் என உணர்வதே!

திருக்கோட்டியூர் நம்பிகளை சந்தித்த ராமனுஜர், தன் சந்தேகத்திற்கான விடையையும், விளக்கத்தையும் கேட்டறிந்தார். ஓம் நமோ நாரயணாய! என்ற அஷ்டாக்ஷர மந்திரமே, அதற்கான விடை. மேலும் இம்மந்திரத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் மீறீனால் உன் தலை வெடித்து சிதறும், நீ நரகத்துக்கு செல்வாய், என்று திருக்கோட்டியூர் நம்பிகள் கூறினார்.

இவை அனைத்தும் கேட்டு அறிந்த ராமனுஜர், திருக்கோட்டியூர் கோவில் கோபுரமேலேறி… அனைவரும் வாருங்கள், உங்களின் பாவங்கள் வநீங்கி, துன்பக்கடலிலிருந்து மீண்டு மோக்ஷம் பெற ‘ஓம் நமோ நாரயணாய என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை உச்சரியுங்கள் அதுவே மோக்ஷத்திற்கான திறவுகோள் என்றார் ராமனுஜர்.

அஷ்டாக்ஷர மந்திரம் இப்படியே உலக மக்களுக்கு அறியபட்டது. உலக மக்கள் நன்மைக்காக, அனைவரின் நலனுக்காக தான் நரகம் சென்றாலும், நம் அனைவரின் நலனுக்காக ஓம் நமோ நாரயணாய என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை உரைத்தார் ராமனுஜர்.

Article By ஹாசினி, (திருச்சி)