Specials Stories

வீட்டு பாடம்

The Life Lesson behind home infrastructure
The Life Lesson behind home infrastructure

வீட்டை வைத்தே வாழ்க்கை பாடம் நடத்தி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள் எப்படி?

படி, நடை, கூடம், முற்றம், வெளி இப்படி பல பகுதிகள் வீட்டிற்குள் இருக்கும்.

முதலில் வாழ்வில் நல்லது எது? கெட்டது எது? என்பதை தெரிந்து கொள்ள படிக்க வேண்டும். படிப்படியாக வாழ்வில் முன்னேறுவதற்கு படிக்கட்டும் படிப்பும் ஒருவருக்கு துணை செய்கிறது.

படியில் ஏறினால் வருவது நடை( வீட்டு வாசல்) படித்ததை பின்பற்றி வாழ்வில் நடக்க வேண்டும்.

நடையின் முடிவில் கூடம் வரும். எல்லோரும் ஒன்று கூடும் இடம் கூடம். நல்வழியில் நடப்பவர்கள் எல்லாம் சமுதாயத்தில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இதையே “சத்சங்கம்””நல்லார் இணக்கம் “என்று சொல்வார்கள்.

கூடத்திற்கு அடுத்தது முற்றம். வாழ்வில் லட்சியம் முற்றுப்பெறுவது போல வீடும் முற்றத்தில் முடிவு பெறும்.

அடுத்தது, கொல்லைப்புறம் என்கிற வெளிப்பகுதி. இறுதியில் மனிதன் கடவுள் என்னும் பெருவெளியில் கலந்து விடுகிறான்.

இப்படி ஒரு வீட்டின் கட்டமைப்பை வைத்தே நமக்கு முன்னோர்கள் பாடம் நடத்தி இருக்கிறார்கள்.

அறிந்து உணர்ந்து நாம் நம் வீட்டில் வாழ்ந்தால் என்றும் நமக்கான வாழ்க்கை உயர்ந்தே இருக்கும்.

Article By – “சூரியோதயம் “என். செல்வராஜ், கோவை.