90-ஸ் கிட்ஸ் கிட்ட அம்மன் எப்படி இருப்பாங்கன்னு கேட்டா, அவங்க மனசுல ஒரு நொடி இவங்க தான் வந்து போவாங்க. அந்த அளவுக்கு ஒரு அம்மன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிச்ச நடிகை, ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி-னு பல மொழிகள்ல மக்கள் மனம் கவரும் 250-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்ல 34 வருஷங்களா, நடிச்சிக்கிட்டு இருக்குறவங்க இவங்க.

தன்னோட 15 வயசுல, எட்டாவது படிக்கும் போதே சினிமாவுக்குள்ள காலடி எடுத்து வைச்சாங்க ரம்யா கிருஷ்ணன். 1983 ஆம் ஆண்டு “வெள்ளை மனசு” படத்துல அறிமுகமாகி கேப்டன் பிரபாகரன் படத்துல ”ஆட்டமா தேரோட்டமா”-னு பாட்டு மூலமா பிரபலமாக உருவெடுத்தாங்க. சின்ன வயசுல இருந்து பரத நாட்டியம், குச்சிப்புடின்னு நடனங்கள் கத்துக்கிட்ட இவங்க ஏற்று நடிச்ச கதாபாத்திரங்கள்ல பெரும்பாலானது கலகலப்பானதுங்க.
அது மட்டுமில்லைங்க, தென்னிந்திய சினிமாவுல எல்லா சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்த பெருமை இவங்களுக்கே உண்டு. தமிழ்ல ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார், மோகன், தெலுங்குல என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், மலையாளத்துல மம்முட்டி, மோகன்லால், ஹிந்தில அமிதாபச்சன், ஷாரூக்கான், அணில் கபூர், கோவிந்தான்னு பல வெற்றி கதாநாயகர்கள் கூட இணைந்து நடிச்சு அசத்தி இருக்காங்க.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ற ரம்யம் கலந்த நடிப்பு, உடல்மொழியில் கம்பீரம், கண்களில் காதல், தேவையான கவர்ச்சின்னு ரம்யா கிருஷ்ணன் திரையில தோன்றி ரசிகர்களை மெய்மறக்க செய்வாங்க. இளம் நடிகர்கள் சிம்பு, ஷாம், நரேஷ் இன்னும் பலருடன் சேர்ந்து நடனம் ஆடியும் அசத்தி இருக்காங்க.
1995 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் தாங்க அம்மூர். தமிழ்ல அம்மன்-ன்னு டப்பிங் பண்ணினாங்க. அதுல அம்மன் கதாபாத்திரத்த ஏற்று நடிச்ச ரம்யா கிருஷ்ணன், தன்னோட முகத்துல கோபம், அன்பு, சாந்தம்-னு பல விதமான பாவனைகளைக் காட்டி நம்ம மனசுல நிலைச்சி நின்னாங்க. இந்த படத்துல வர்ற வில்லன் ராமிரெட்டிய பார்த்து பயப்புடாத 90ஸ் கிட்ஸே கிடையாது, ஆனா அவரை இந்த படத்தோட Climaxல கொல்லும் போது, ரம்யா கிருஷ்ணனோட ருத்ரதாண்டவம் இருக்கே, இன்னக்கி பார்த்தாலும் நமக்கு ஒரு பயம் வரும்.
இந்த படத்துக்கு பிறகு நிறைய அம்மன் வேடங்கள்ல இவங்க நடிச்சாங்க. அம்மன் திரைப்படங்களும் நிறைய வர தொடங்கியது. இப்படி ஒரு trend set பண்ணின ரம்யா கிருஷ்ணன், 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படத்துல இன்னோரு trend-அ உருவாக்கினாங்க. நீளாம்பரி கதாபாத்திரத்தை யாரால மறக்க முடியும். “hey, Who are you man?”, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் மாறல”, இந்த வசனங்களை ரம்யா கிருஷ்ணன் அவங்க குரல்ல, ஒரு தோனில சொல்லும் போது, வேற லெவல்ங்க அது.
90-ஸ் கதாபாத்திரங்கள் இப்படி இருக்க, 2002 ஆம் வருஷம் வெளிவந்த பஞ்சதந்திரம் படத்துல, உலக நாயகன் கமல்ஹாசன் கூட நகைச்சுவையில ஒரு தந்திரம் பண்ணி இருப்பாங்க. அதுலையும் அந்த மேகி கதாபாத்திரத்த, இவங்க கையாண்ட விதம் சூப்பர். Climaxக்கு முன்னாடி வர்ற அந்த “வந்தேன் வந்தேன்” பாட்டுல சிம்ரன் கூட போட்டி நடனம், Modern வஞ்சி கோட்டை வாலிபன் திரைப்படத்துல வந்த பத்மினி, வைஜெயந்தி மாலா நடனம்-னு சொல்லலாம்.
- Soundariya Nanjundan Wins Hearts with Her Mesmerizing New Photos – Viral Clicks
- Kayadu Lohar Adorable Expressions Go Viral – Trending Photos Inside
- Vedhika Stunning Photos Go Viral on Social Media – Latest Trending Clicks
- Divyabharathi Grabs Spotlight with Her Stunning New Photos – Viral Sensation on Social Media
- Sakshi Agarwal Stuns the Internet with Her Adorable Photos
அதுக்கு பிறகு 2015-ல ஒரு கதாபாத்திரத்தை, இவங்கள தவிர வேற யாரும் செய்ய முடியாதுன்றது போல நடிச்சு படம் பார்த்தவங்களை மிரள வைச்சாங்க. “இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” இந்த வசன உச்சரிப்புக்கு பாகுபலியே அடங்கி தான் போகணும். அப்படி ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் போதும் சரி, சூப்பர் டீலக்ஸ் படத்துல தன்னோட மகன காப்பாத்த டாக்டர் கிட்ட கெஞ்சி, சுத்தி நிக்கிறவங்க கிட்ட ஆதரவு கேட்குற காட்சிலயும் சரி, ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரமாவே மாறிடுவாங்க. அம்மன் வேடமோ, ultra-modern heroine-னோ “Ramyakrishnan, Always our Favourite”.

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by RJ Anand