எப்படியாவது படக்குழுவினரிடமிருந்து ஒரு Update ஆவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தங்களது கோரிக்கையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்த தல அஜித் ரசிகர்களுக்கு திடீரென வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
வலிமை படம் குறித்த முதல் அறிவிப்பு வந்த பிறகு நீண்ட நாட்களுக்கு வேறு எந்த Update-ம் வெளிவரவில்லை. இதனால் Update-க்காக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வலிமை படக்குழுவினரின் ட்விட்டர் பக்கங்களின் மீது விழி வைத்து அயராமல் காத்திருந்தனர். குறிப்பாக தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிடும் அனைத்து பதிவுகளிலும் ரசிகர்கள் வலிமை Update கேட்டு கமெண்ட் செய்து வந்தனர்.
ரசிகர்களின் கோரிக்கைக்கு நீண்ட நாட்கள் கழித்து போனி கபூர் தற்போது செவி சாய்த்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கூடிய விரைவில் வலிமை திரைப்படத்தின் First Look வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் ” வலிமை படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை கண்டு அகமகிழ்கிறேன் ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே போனி கபூர் தயாரித்து H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேற Level-ல் எகிறியுள்ளது. போனி கபூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.