Cinema News Interview Stories

Stunt Man கிட்ட அடி வாங்கி கீழ விழுந்துட்டேன்! – வர்ஷா பொல்லம்மா

Varsha-Bollamma

செல்ஃபி பட வெளியீட்டை முன்னிட்டு சமீபத்தில் நடிகை வர்ஷா பொல்லம்மா சூரியன் FM நேர்காணலில் பங்குபெற்றார். அப்போது அவரிடம் செல்ஃபி படப்பிடிப்பில் மறக்க முடியாத சம்பவம் என ஏதாவது உள்ளதா என்ற கேள்வி எழுப்பினோம்.

அதற்கு பதிலளித்த அவர், “சென்னை Triplicane பகுதியில் ஒரு சண்டைக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தோம். அது மிகவும் சிறிய இடம். அதில் ஒரு Stunt guy என்னை அடிக்க வேண்டும், நான் கீழே விழ வேண்டும். இதுதான் காட்சி.

Stunt guy என்னை இடது கையால் அடிக்க வேண்டும். Stunt காட்சியில் நடிக்கும் போது நம்மை அடிப்பது போன்று இருக்கும், ஆனால் அடிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட காட்சியில் Stunt guy என்னை இடதுகையால் அடிப்பது போன்று நடிக்கும் போது Balance இல்லாமல் நிஜமாகவே என்னை அடித்து விட்டார். நான் கீழே விழுந்து விட்டேன்.

எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. தெரியாமல் நடந்துவிட்டது. பின்னர் என்னை அடித்தவர் நிறைய முறை என்னிடம் மன்னிப்பு கேட்டார். இதுதான் செல்ஃபி படப்பிடிப்பில் என்னால் மறக்க முடியாத சம்பவம்” என்று கூறினார். மேலும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.