Specials Stories

Hall of Fame 2025 – MS Dhoni: ஏன் எம் எஸ் தோனி ஸ்பெஷல் ! எதற்காக இந்த மிக பெரிய கௌரவம் !!

why-ms-dhoni-is-special-great-honor-behind-hall-of-fame
why-ms-dhoni-is-special-great-honor-behind-hall-of-fame

Hall of Fame 2025 – MS Dhoni: எம்.எஸ். தோனி ஏன் எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் என்பதை ஆராயுங்கள். அவரது புகழ்பெற்ற அந்தஸ்து, சாதனைகள் மற்றும் அவர் உண்மையிலேயே தகுதியான கௌரவங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறியவும்.


சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற” celebrating cricketing excellence across generations” என்ற விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனிக்கு, கிரிக்கெட் உலகின் மதிப்புமிக்க ICC Hall of Famers 2025 பட்டியலில் அவரை இணைத்து கௌரவித்துள்ளது ICC. இந்திய வீரர்களில் ICC Hall of Famers இணையும் 11வது வீரர் எம்எஸ் தோனி ஆவார். எம்எஸ் தோனி உடன் சேர்ந்து தென்னாப்ரிக்காவின் ஹாஷிம் ஆம்லாம் மற்றும் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி. பெண்கள் பிரிவில், பாகிஸ்தானின் சனாம் மிர் மற்றும் இங்கிலாந்தின் சாராட் டெய்லரும் இந்த வருடத்திற்கான ICC Hall of Famers பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ICC Hall of Fame என்பது கிரிக்கெட்டில் சாதனைந் நிகழ்த்திய வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் மற்ற முக்கிய பங்களிப்பாளர்களைக் கௌரவிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மூலம் 2009இல் நிறுவப்பட்ட ஒரு உயர்ந்த மரியாதைத் தொகுப்பு ஆகும், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுப் பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். உலகளவில் இதுவரை 122 கிரிக்கெட் வீரர்கள் ICC Hall of Famers பட்டியலில் உள்ளனர். ICC Hall of Fame என்பது கிரிக்கெட்டில் சிறந்த வரலாற்றை உருவாக்கிய ஜாம்புவான்களைக் கொண்டாடும் நிகழ்வு.

தனது தலைமைத்துவத்திற்காகப் புகழ்பெற்ற எம்.எஸ் தோனியின் தலைமையில் தான் இந்திய அணி 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி போன்ற கோப்பைகளை வென்றது, ICCயின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ் தோனி மட்டுமே. இவர் கேப்டனாக இருந்த பொழுது டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 கிரிக்கெட் போன்ற அணைத்து வடிவங்களிலும் இந்திய அணி முதல் இடத்தில் நீண்ட காலம் இருந்தது குறிப்படத்தக்கது.

தனிபட்ட முறையிலும் 15,000க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்களையும், விக்கெட் கீப்பராக 800க்கும் மேற்பட்ட ஆட்டமிழப்புகளையும் செய்துள்ள தோனி, கிரிக்கெட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக திகழ்ந்தார்.

இப்படி பல சாதனைகளைப் படைத்துள்ள தோனி ICC Hall of Famers பட்டியலில் இணைக்கப்பட்டதில் எந்த வித ஆச்சிர்யமும்இல்லை .. பல இளம் வீரர்களுக்கு insperationஆக இருக்கும் எம்.எஸ் தோனி இந்தியா மட்டுமில்லை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே போற்றி, வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய பொக்கிஷம்.

Article By சதீஸ்குமார் மனோகரன்

About the author

Sakthi Harinath