வருஷம் வருஷம் டிசம்பர் 1 ஆம் தேதில இருந்து உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுது. உலகத்தையே அச்சுறுத்துற நோய்கள்ல எய்ட்ஸும் ஒன்னு. இதை பத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தோட முக்கிய நோக்கம். எச்ஐவி தொற்றுக்கு எதிர்வினை ஆற்றும் சமூக விழிப்புணர்வ உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்குது .
மக்களை அச்சுறுத்திய இந்த கொடிய ஆட்கொல்லி நோய் பத்தின விழிப்புணர்வ மக்கள் கிட்ட கொண்டு போக பல வழிகளில் முயற்சி எடுத்துட்டு வராங்க. இன்னைக்கு சமூகத்துல அந்த நோயால பாதிக்கப்பட்டவங்கள பாத்தாலே தீண்டத் தகாதவங்க போல ஒதுக்கி வச்சிருக்காங்க. அதனால எச்ஐவி நோய் பாதிப்ப ஆரம்பத்துலயே கண்டுபிடிச்சாலும் சிலர் சிகிச்சை எடுத்துக்க தயாரா இல்லாம தாமாதமாக்குறாங்க.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களும் கூட எச்.ஐ.வி நோயால பாதிக்கப்படறாங்க. பாலியல் தொடர்பால் மட்டுமே இந்த நோய் பரவுவதில்லை. இரத்தம், ஊசி மூலமாவும் நிறைய பேருக்கு பரவுது. இதைத்தான் அருவி திரைப்படத்தில் அப்பட்டமாக காட்டியிருப்பார்கள். எச்.ஐ.வி உடன் வாழும் 39 மில்லியன் மக்களில், 9.2 மில்லியன் மக்கள் உயிர்காக்கும் சிகிச்சையை அணுகவில்லை என்பது தான் உண்மை .
ஒவ்வொரு நாளும் 1700 உயிர்கள் இந்த நோயால இழக்கப்படுது. ஒருநாளைக்கு 3500 பேர் பாதிக்கப்படுறாங்க. பலரும் தங்கள் நிலையை அறியாமல் சிகிச்சையை பெறாமல் இருக்கின்றனர். வரும் 2030 ஆண்டுக்குள் எய்ட்ஸை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை கையிலெடுத்துள்ள நிலையில்… சமூகங்கள் வழிநடத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.