Cinema News Stories

2025 Feel Good Tamil Movies List

feed-good-tamilmovies
feed-good-tamilmovies

படம் பாக்குறது யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் நம்மளோட உணர்வுகளோட ஆழமா connect ஆகுற மாதிரியான படங்களை பார்க்கும் போது, நம்மள அறியாமலேயே நம்ம கண்ணுல இருந்து கொஞ்சம் கண்ணீர் துளிகள் வெளியே வந்து எட்டிப் பார்க்கும் இல்லையா! அப்படியான படங்கள் தான் என்ன பொறுத்த வரைக்கும் feel good movies! இந்த வருஷத்துல (2025) இன்றைய தேதி வரைக்கும் ( 15-12-2025 ) தமிழ்ல release ஆன எனக்கு பிடித்த  3 feel good movies ah படிக்கலாமா…

குடும்பஸ்தன்

      இந்த வருஷத்தோட முதல் மாசத்துல வெளியான படம் குடும்பஸ்தன் (January 24, 2025). இந்த படத்தோட director ராஜேஷ்வர் காளிசாமி, நடிகர் மணிகண்டன் அவர்களோடு எளிமையான நடிப்பினால, இந்த படத்தை  காவியமா மாத்தி இருப்பாரு. தான் விரும்புன பொண்ண பல நபர்களின்  எதிர்ப்புகளோட கல்யாணம் பண்ணிக்கிறாரு. கொஞ்சம் நல்லா போய்கிட்டு இருந்த இவங்களோட வாழ்க்கை, நவீன் ( மணிகண்டன் ) ஓட வேலை போனதுனால அப்படியே கொஞ்சம் கொஞ்சமா திசை மாறுது. குடும்பத்தோட வருமானம் இவரோடது மட்டும் தான் அப்படின்றதனாலயும், மனைவியோட கர்ப்பத்தாலும், இவருக்கு வேலை போனத யார்கிட்டயும்  சொல்லாம அப்படியே maintain பண்றாரு. பண நெருக்கடியால கடன் வாங்கி, கடன் வாங்கி கடனாளியா மாறிட்டாரு. காண மயிலாட, கடன் வந்து மேலாட, கொடுத்தவன் கொண்டாட, நான் இங்கு திண்டாட அப்படின்னு இவரோட நிலைமை ஆயிடுது. இதுக்கு நடுவுல அவங்க பணக்கார மாமா வேற, அடிக்கடி நவீன  ஏளனம் பண்ணிட்டு இருப்பாரு. கடன் கொடுத்தவங்க ஒரு பக்கம் நவீன துரத்த, தன்னோட தன்மானத்தை விட்டுக் கொடுக்காம எல்லார்கிட்டயும் போராடி,  கடைசில எப்படி கடன் தொல்லையில இருந்து மீண்டு வந்தாரு அப்படின்றத இந்த படத்துல ரொம்ப யதார்த்தமா நகைச்சுவையோட காட்டிருப்பாங்க. ஒரு நடுத்தர குடும்பத்துல இருக்கக்கூடிய இளைஞன், வாழ்க்கையில என்ன பாடுபடுவாருனு, இந்த படம் ரொம்ப அழகா சொல்லும்.

Tourist family

      மே, 1 ம் தேதி release ஆன tourist family, உண்மையாகவே ஒரு super feel good movie தாங்க. இலங்கையில் ஏற்பட்ட பயங்கர பொருளாதார நெருக்கடி காரணமா, அப்பா, அம்மா, ரெண்டு பசங்கன்னு ஒரு குடும்பமே, அவங்க பசங்களோட எதிர்காலத்துக்காகவும், பாதுகாப்பான வாழ்க்கையை தேடியும் தமிழ்நாட்டுக்கு வராங்க. வசந்தி ( சிம்ரன் ) அண்ணனான பிரகாஷின் (யோகி பாபு) உதவினால ஒரு வீட்டுல குடியேறிடுறாங்க.  தர்மதாஸ் (சசிகுமார்) ஒரு ஓட்டுணரா தற்காலிகமா ஒரு இடத்துல join பண்றாரு. அந்த குடும்பமே அவங்க தங்கியிருக்கக்கூடிய காலனி மக்களோட அன்பா பேசி பழகி எல்லாரோட மனசுலையும் இடம் பிடிச்சுடுறாங்க. முக்கியமா தாமஸோட உதவி பண்ற குணம் மனிதநேயம் இது எல்லாமே அங்க இருக்கிறவங்களுக்கு ரொம்ப பிடிச்சிடுது. இவங்களோட வாழ்க்கை அழகா போய்கிட்டு இருக்க நிலையில, ஒரு வெடிகுண்டு சம்பவத்தினால அவங்களோட நிம்மதி நிலை குலையுது. இத  விசாரிக்கக்கூடிய காவல்துறை இந்த சம்பவத்தோட இலங்கை தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கும்  கோணத்துல விசாரிக்கிறாங்க. இவங்க இருக்க கூடிய காலனிக்கு விசாரிக்க வராங்க, ஒட்டுமொத்த குடும்பமும் கண்கலங்கிய நிலையில இருக்காங்க. அங்கு இருக்க ஒவ்வொரு வீட்டையும் போய் விசாரிக்கும் போது எல்லோருமே இலங்கை தமிழ் தான் பேசுறாங்க, இதனால தர்மதாஸோட குடும்பம் பாதுகாப்பாயிடுது. இவங்க அந்த காலனி மக்கள் கிட்ட வெச்சி இருக்க அன்பு, அந்த காலனி மக்கள் இந்த குடும்பத்து மேல வச்சி இருக்க கூடிய பாசமும் எல்லாரும் சேர்ந்து இலங்கை தமிழ்ல பேசுற அந்த கடைசி காட்சி, படத்தை பார்க்கிற எல்லா கண்லையும் கண்ணீர் வர வச்சதுன்னு தான் சொல்லியாகணும்.

 Idly kadai

      தனுஷே இயக்கி தனுஷே நடிச்ச படத்துல, ஒரு அருமையான feel good movie அப்படின்னா அது கண்டிப்பாக இட்லி கடையாதாங்க (01:09:2025)  இருக்கும். முக்கியமா இந்த காலத்து இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு பெரிய பாடமாக இருக்கும் அப்படின்னு தான் சொல்லணும். கிராமத்து வாழ்க்கை பிடிக்காம, எங்க தன்னோட வாழ்க்கை கிராமத்திலேயே முடிஞ்சிடுமோ, சின்னதா இட்லி கடை வச்சிருக்க அப்பாவோட வாழ்க்கை மாதிரியே தன்னோட வாழ்க்கையும் ஆயிடுமோ, அப்படின்னு பயந்துகிட்டு வெளியூருக்கு போறாரு முருகன் ( தனுஷ் ). அங்க பிடிச்சமான வேலை, பயங்கர வசதியான வாழ்க்கை, கூடவே தனக்கு காதலிக்க ஒரு காதலி. ஆனா அவரு அங்க சந்தோஷமா இல்ல, வெளிய போலியான சிரிப்போட உள்ள ஆயிரம் குழப்பத்தோட வாழ்ந்து கிட்டு இருக்காரு. இவங்களுக்கு கல்யாணம் தேதி நெருங்குகிற நேரத்துல ஊர்ல அப்பா தவறிட்டாரு, ஊருக்கு போய் அப்பாவோட துக்கத்துல இருந்து, மீண்டு வருவதற்குள்ள அவரோட அம்மாவும் தவறிடாங்க. அங்க தான் நம்ம heroine entry (கயல்). முருகனும், கயலும் ( நித்யா மேனன் ) சேர்ந்து அப்பாவோட இட்லி கடை அழிஞ்சு போயிடக் கூடாது, அப்படின்னு பாடு படுறாங்க. என்னதான் முருகன் சமையல வல்லுனரா இருந்தாலும் கூட, அவங்க அப்பாவோட இந்த இட்லி, சாம்பார் கை பக்குவத்த கொண்டு வர முடியல, அதேபோல அவரோட ஊர் மக்களோட மனசுலையும் இடம் பிடிக்க முடியல. பல முயற்சிகளுக்கு அப்புறம் அவர் அப்பாவோட கை பக்குவத்தை கொண்டு வந்துட்டாரு. அந்த ஊர் மக்கள் மனசுலையும் இடம் பிடிச்சிட்டாரு. இதுக்கு நடுவுல தான் இதுக்கு முன்னாடி காதலிச்ச காதலியோட அண்ணன் பயங்கர பிரச்சனை பண்ணிட்டாரு. அதுவும் ஒரு பக்கம் சுவாரசியமா போகும், ஒரு கட்டத்துல  உண்மையான சந்தோஷம் பணத்துல மட்டும் இல்ல, தான் வாழ்ந்து கிட்டு இருக்க இடம், தன்னை சுத்தி இருக்கக்கூடிய மக்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைக்கக்கூடிய அன்பு இது எல்லாத்துலயும் தான் இருக்கு அப்படின்னு அவரு புரிஞ்சிக்கிறாரு. இந்த படத்துக்கு நடுவுல நிறைய இடத்துல கண்ணுல இருந்து கண்ணீர் துளிகள் வந்தாலும் படம் முடியும்போது, ஒரு மாதிரி feel good ah இருந்தது.

 இந்த வருஷம் நிறைய தமிழ் படங்கள் release ஆயிருந்தது. அதுல நிறைய feel good movies uhh இருக்கு. Like பறந்து போ, மாமன், ஆண்களோட மனக்குமுறல்கள் சொல்ற மாதிரி ஆண் பாவம் பொல்லாதது, இந்த மாதிரியும் நிறைய படங்கள் இருக்கு. But அதுல இந்த வருஷம் release ஆன feel good movies அப்படின்னா, நான் கண்டிப்பா இந்த மூன்று படங்கள் தான் சொல்லுவேன். இத படிக்கும் போது, இந்த படங்கள் உங்க கண்ணு முன்னாடி வந்து போயிருக்கும் அப்படின்னு நம்புறேன். நல்ல படங்களை பார்ப்போம்! நல்லதை ஏற்போம்!

Article by – RJ Sandhiya