Cinema News Stories

KS Ravikumar: கே எஸ் ரவிக்குமார் என்னும் பன்முக கலைஞன்..!

HIT MAKER K.S.RAVIKUMAR Special in Tamil 2026
HIT MAKER K.S.RAVIKUMAR Special in Tamil 2026

ஒரு hero/ heroine தொடர்ந்து 5 வருஷமா continue vaa படம் பண்றதே பெரிய விஷயம் , ஆனா ஒரு இயக்குனர் ஒரே ஒரு இயக்குனர் 365 நாட்கள்ல, அதாவது 1 வருஷத்துல 5 படம் வெளியிட்டு இருக்காங்க! 1990 ல புரியாத புதிர் ல directorial debut குடுத்தாங்க K.S.ரவிக்குமார், வெறும் 29 நாட்கள்ல இந்த படத்த முடிச்சாங்க. அடுத்து சேரன் பாண்டியன், அதுவும் வெறும் 33 நாட்கள் ல படமாக்கப்பட்டது. இப்படி நிறைய படங்கள் சொல்லலாம் சண்டைக்காட்சி பாடல்கள் னு ஒரு commercial படமா இருந்தாலே அதோட shoot duration late ஆகும் ஆனா K.S.ரவிக்குமார் படம் எடுக்கும் நாட்கள் கம்மியா இருந்தாலும், அந்த படங்கள் 100 நாள் கடந்த படங்களா அமையும்.

நேரத்த சிக்கனமா கையாள்ற மாதிரி தான் படத்திற்கான பட்ஜெட் ம் சிக்கனமா முடிச்சுடுவாரு. அவ்வை சண்முகி ல கமல்ஹாசன் ஓட மாமி get up ல பெண் குரல்ல audio conversion கு அப்போ இருந்த technology ல குறைஞ்ச buget ல பண்ணது , ஆதவன் ல சூர்யா ஓட childhood character கு 9 கோடி செலவு செய்ய இருந்த இடத்துல 28 லட்சத்துல green mat ல 3 layer ல cover பண்ணி shoot பண்ணதுன்னு தயாரிப்பாளருக்கும் tension இல்லாம audience கு excitement ல எந்த குறைவும் இல்லாத படங்கள் குடுக்கும் ஒரு இயக்குனர்.

இதுவரைக்கும் K.S.Raviukmar career ல அதிக budget ல பண்ண படம்னா அது தசாவதாரம் மட்டும் தான். அதை தவிர எல்லா படங்களும் குறுகிய காலத்துல கொறஞ்ச budjet ல முடிச்சு box office collection மட்டும் superduper ஆ குடுக்குற ஒரு legend Director K.S. ரவிக்குமார். இப்படி director ஆ இவரின் பயணம் தொடங்கியதுல இருந்து ஒரு ஒரு வருஷத்துக்கு கொறஞ்சது 2 படங்கள் release குடுத்து 1999 ல mass ஆ 5 படம் release பண்ணி இருப்பாங்க. அதுலயும் late 90’s ல peak ல இருந்த எல்லா Hero’s கும் box office collection குடுத்த director.

Super star ரஜினிகாந்த் career ல mass படங்கள் count ல படையப்பா top ல இருக்கும் , இந்த படம் release ஆனதும் 1999. Supreme star சரத்குமார் career ல hit ஆனா படங்கள் பட்டியல் ல நாட்டாமை first ல சொல்லலாம் , அதுவும் K.S.Ravikumar direction அடுத்து நட்புக்காக , அதை தொடர்ந்து பாட்டாளி 1999 ல release ஆச்சு . 1998 ல தமிழ் ல Supreme star சரத்குமார் வெச்சு பண்ண நட்புக்காக படம் , 1999 ல தெலுங்கு Mega star சிரஞ்சீவி வெச்சு remake பண்ணி 1999 ல release பண்ணாங்க K.S. ரவிக்குமார் தளபதி விஜய் மற்றும் K.S. ரவிக்குமார் direction ல வந்த ஒரே படம் , மின்சார கண்ணா release ஆனதும் 1999 ல … ஒன்னு ரெண்டு மூணு னு வரிசையா சொல்லிட்டு போன late ஆகும் , கிட்டத்தட்ட 14 நடிகர்கள் , 12 நடிகைகள் , 19 புகைப்பட கலைஞர்கள், 45 துணை இயக்குனர்கள் னு பாதி திரைஉலகத்தையும் ஒரே திரை ல பாக்குற ஒரே நாள் ல படமாக்கப்பட்ட படம் சுயம்வரம் 1999 ல release ஆச்சு.

இப்படி ஒரே வருஷத்துல 5 படங்கள் குடுத்த Legend Director K.S. ரவிக்குமார். எவ்ளோ பெரிய movie buff, cineholic ஆ இருந்தாலும் ஒரு படத்தை ஐந்திற்கும் மேற்பட்ட முறை பாத்தாலே bore அடிக்கும் ஆனா K.S.Ravikumar படங்கள் இப்பயும் சன் டிவி , கே டிவி ல போட்ட முதல் முறை பாக்குற மாதிரியே குடும்பமா ரசிச்சு, கலகலப்பா பாப்போம் பாத்துட்டு இருக்கோம்! Evergreen songs, evergreen comedy னு K.S. ரவிக்குமார் இயக்கிய படங்கள்ல evergreen movies னு list பண்ணலாம்.

இப்போ வர ஒவ்வொரு படத்துல வர scenes கூட தவிர்க்கமா பாப்போம், அந்த பட்டியல்ல முத்து, பஞ்சதந்திரம் , நாட்டாமை, அவ்வை ஷண்முகி, படையப்பா னு இன்னும் பல படங்கள் சொல்லிட்டே போகலாம் .
Sentiment, drama, comedy னு அவரு screen play ல எல்லாமே தேவையான அளவு ல wholesome treat ஆ இருக்கும் K.S.Ravikumar ஓட ஒரு ஒரு படம்மும் . ஒவ்வொரு directors கு ஒரு style இருக்கும் , அவுங்க படங்கள் பார்க்கும் போது அந்த directors ஓட signature அ நம்மளால கவனிக்க முடியும் . அப்படி முதல் படமான புரியாத புதிர்ல இருந்து இப்போ வரைக்கும் K.S. ரவிக்குமார் direct பண்ற படங்கள screen ல ஒரு character ஆவும் இவரை பார்க்க முடியும் .
ஒரு hero /heroine இன்னொரு படத்துல cameo பண்றதெல்லாம் இருக்கட்டும். K.S. ரவிக்குமார், ஓட ஒரு ஒரு படத்துலயும் ஏதாவது ஒரு role, guest appreance, இல்ல screen presence குடுத்துடுவார். படையப்பா ல ஓ! ஓ! ஓ! கிக்கு ஏறுதே! பாட்டுல dance பண்ணி மாஸ் பண்ணி இருப்பாரு .

இப்போ பல music directors hero வா entry குடுக்குறாங்க, நிறைய directors screen presence குடுத்தாலும், அதுக்கெல்லாம் முன்னோடி K.S. ரவிக்குமார். இப்போ நிறைய படங்கள்ல character artist அ பண்ணலும் , அவரோட direction ல வர படங்கள்ல வெறும் 2,3 scenes வந்தாலும் அதுவே மனசுல நிற்கும் படியா இருக்கும் ..இப்படி ஒரு எழுத்தாளராவும், நடிகராவும், இயக்குனராவும் மனசைவிட்டு நீங்காத பல படைப்புகள் குடுத்தா இயக்குனர் K.S.ரவிக்குமார் அவர்களின் பிறந்தநாளிற்கு வணக்கங்களுடன், ஒரு ரசிகையாக நான் கவனித்து , ரசித்ததை பகிர்ந்துள்ளேன் , படித்ததும் உங்கள் நினைவிற்கு வரும் K.S.ரவிக்குமாரின் படங்களை பார்த்து நாளும் கொண்டாடுவோம்.

Article By – RJ Hasini