இயற்கை அழகுனு நம்ம எல்லாருக்கும் தெரியும் ஆனா இயற்கையாவே அழகா ஒரு பொண்ணு அதுவும் make up இல்லாம ஹீரோயினா accept பண்ணுவாங்கலான்ற கேள்விக்கு சாய் பல்லவி னு பதில் சொல்லலாம்.
ரொம்ப அழகா இருந்தா கண்ணு பட்டுடும் னு இயற்கையே pimple னு திருஷ்டிப்புள்ளி வெச்சது போல சில பெண்கள் முகத்துல pimples வரும். அது சில girls, inferior ஆ கூட பீல் பண்ணலாம்.
But ஹீரோயின் கு pimple ஆ ? Onscreen ல நல்ல இருக்குமா ? Audience கு பிடிக்குமா ? இப்படி பல stereotypes ah actress சாய் பல்லவி break பண்ணி இருக்காங்க.
சாய்பல்லவி lead role ஆ பண்ண first படம் “பிரேமம் ” அந்த படத்துலே ரெண்டு ஹீரோயின் இருந்தும் , சாய் பல்லவி – மலர் character full movie travel பண்ணாது. ஆனாலும் still அந்த மலர் ஒவ்வொரு ரசிகர் மனசுலையும் மலர்ந்துட்டே இருக்கு..
The girl next door feel ல அப்படி ஒரு look ல தான் சாய் பல்லவி – மலர் character பண்ணி இருப்பாங்க ! ரொம்ப casual ஆ no make up look ல எல்லா ஹீரோயினும் இப்படி ரசிச்சு இருப்போமா னு தெரியல ! ஆனா சாய் பல்லவி அப்படி ரசிக்க வெச்சுட்டாங்க . ரசிச்சுட்டுக்கும் இருக்கோம் ..
அவுங்க dance and moves, dialogue and delivery, seamless ஆ நம்ம கவர்ந்துரும். Reality show ல dance performer ஆஹ் அவுங்க best ah குடுத்தாங்க மெல்ல, தாம் தூம், கஸ்துரி மான் போன்ற படங்கள் மூலமா cameo ல பாத்துருப்போம் . ஆனா பிரேமம் ல அவுங்க entry ku அப்பறம் எந்த படம் யார் கூட எந்த industry ல பண்ணாலும் பாத்துட்டே இருக்கலாம் .
Heroine chance அதும் multiple industry ல பண்ற அப்போ chance இருந்தா போதும்னு இல்லாம ஒரு ஒரு role ம் ஒரு ஒரு script ம் selective ஆ மனசுல நிக்க கூடிய கதாபாத்திரங்களா ஆ select பண்ணி பண்ற ஒரு artist.
ஒரு heroine glamour role பண்றதும் பண்ணாம இருக்குறதும் அவுங்க தனிப்பட்ட விருப்பம் . ஆனா, எப்போதுமே ஒரு homely look ஓட screen presence குடுக்குறதே நடிகை சாய் பல்லவி ஓட Siganture. Movies மட்டும் இல்லாம interview or press meet, audio launch ல கூட அவுங்கள carry பண்ற விதம் ரொம்பவே அழகா இருக்கும் .
டாக்டரா தன்னோட ambition & Actress ஆ தன்னோட passion, கூடவே family values னு எல்லாமே பக்காவா balance பண்ற ஒரு பொண்ணா நான் சாய் பல்லவிய பாக்குறேன் . என்னோட personal favourite னு சொன்னாலும் . பலரோட favourite ஆவும் சாய் பல்லவி இருக்காங்க .
ஷியாம் சின்ஹா ராய், பாவ கதைகள், கார்கி, அமரன் போன்ற படங்கள் அவுங்க நடிப்புக்கான சான்று ..
சும்மாவா எட்டு flimfare awards வாங்கி இருப்பாங்க, Dance, sentiment, love, courage னு எல்லாமே இவுங்க வெளிப்படுத்துனா இன்னும் ரசிக்கும் படியா இருக்கும்.
இப்போ கூட M.S.சுப்புலக்ஷ்மி அம்மா biography காக own voice ல vocals பண்றதுக்காக carnatic music கத்துட்டு இருக்காங்க, அமரன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு மாதிரி பிரேமம் படத்தை enjoy பண்ண மாதிரி இந்த movie ம் அமையும் னு wait பண்ற ரசிகர்கள்ல நானும் ஒரு ரசிகை…
Article by- RJ Hasini

