Specials Stories

Manorama: ஆச்சிக்கு பிறந்தநாள்!

Manorama Actress Special Article in Tamil
Manorama Actress Special Article in Tamil

Public exam-க்கு முன்னாடி நாள் night மொத்த syllabus-ம் cover பண்ணுற feel-லேயே article எழுதுறேன் because அவ்ளோ சாதனைகள் படைச்சிருக்காங்க… எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்க போறேன்னு so much confusion…but approximate-ஆ நான் start பண்றேன். பாட்டு,dance, நடிப்புன்னு 5000 stage performances,1500-க்கும் மேல movies நடிச்சு Guinness World Record பண்ணி இருக்காங்க…அது மட்டும் இல்ல பெண் சிவாஜி,ஆச்சினு குழந்தைகள் தொடங்கி பெரியவங்க வரைக்கும் அன்போட கூப்பிட படுற அத்தனை சிறப்புக்கும் சொந்தக்காரங்களான legendary actress “மனோரமாவோட” பிறந்தநாள் தான் இன்னைக்கு.

Yes இவங்களோட achievements-லாம் நான் தெரிஞ்சுக்கும் போது ஒரே Goosebumps…எப்படி அந்த காலத்திலேயே இவ்வளவு bold-ஆ இத்தனையும் செஞ்சிருக்க முடியும்னு. உங்களுக்கும் same feel-ஆ அப்போ go ahead நாம இன்னும் detailed-ஆ தெரிஞ்சுக்கலாம். மன்னார்குடி-ல பிறந்த இவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே பாட்டு பாடுறது பிடிக்குமாம். காலத்தின் கட்டாயமா தான் இவங்க சினிமாக்கும், நாடகத்துக்கும் வந்தாங்களாம் and மனோரமாவோட உண்மையான பெயர் கோபி சாந்தா. படங்கள்ல ஹீரோயின், காமெடி artist,குணச்சித்திர கதாபாத்திரங்கள்னு எது கொடுத்தாலும் சிறப்பா நடிப்பாங்களாம் அதோட இவங்க தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம் ஹிந்தி, கன்னடம்,தெலுங்கு மொழிகள்லேயும் நடிச்சிருக்காங்க. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா நம்ம நாட்டுல ஏழு முதலமைச்சர்களோட நடிச்ச ஒரே நடிகை நம்ம “ஆச்சி மனோரமா” தான்.

தன்னோட குரல்,body language and எதார்த்தமான நடிப்பால எல்லா பரிமாணங்களையும் நடிச்சு மக்கள் மனசுல நீங்கா இடம் புடிச்ச இவங்களோட.. personal life-ல பல struggles இருந்திருக்கு. அது எல்லாத்தையும் தாண்டி பல சவாலான கதாபாத்திரங்கள்ள அருமையா நடிச்சு இந்திய சினிமாவுல தனக்கான அடையாளத்தை உருவாக்கினவங்க. தமிழ் சினிமாவுல தவிர்க்க முடியாத பெண் கலைஞரா மாறினாங்க. அதாவது 1958 கவியரசு கண்ணதாசன் direction-ல release ஆன “மாலையிட்ட மங்கை” படத்துல நகைச்சுவை நடிகையா முதல் முதல்ல தமிழ் சினிமால அறிமுகமானாங்க. என்னதான் இவங்களோட பிறப்பு மன்னார்குடியில இருந்தாலும் school படிச்சதெல்லாம் காரைக்குடி பக்கத்துல.பிழைப்புக்காக அங்க வந்தாலும் அதுக்கப்புறம், தன்னோட திறமையால அந்த செட்டிநாட்டுக்கே பெருமை சேர்த்து அந்த மக்கள்கிட்டையே ஆச்சினு செல்லப் பேரும் வாங்கினவங்க.Actually என்ன என்னாலயே control பண்ண முடியல அதனால தான் அவங்க biography, கூடவே அவங்க சாதனையும் மாத்தி மாத்தி இந்த article-ல எழுதி இருக்கேன்.

Ok Let’s get back on track…அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால schooling continue பண்ண முடியாம போச்சு.Then ஒரு நாள் இவங்க ஊர்ல அந்தமான் காதலின்னு ஒரு நாடகம் நடந்துட்டு இருந்திருக்கு அதுல நடிக்கிற heroine-க்கு பாட சரியா வரல போல அப்போ அந்த வாய்ப்பு மனோரமாவ தேடி வந்துச்சு. அத ரொம்ப அழகா பயன்படுத்தி அவங்களோட இனிமையான குரல்லையும்,நடிப்புலையும் ரசிகர்களை வியக்க வச்சாங்க. அப்போ அதுல இயக்குனரா இருந்த சுப்பிரமணியனும்,ஹார்மோனிய வாசிப்பாளரா இருந்த தியாகராஜனும் இவங்களுக்கு மனோரமானு பெயர் கொடுத்தாங்களாம். அதுக்கப்புறம் யார் மகன் நாடகத்துல கதாநாயகியா நடிச்சிருக்காங்க at that time அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினவங்க வீணை எஸ் பாலச்சந்தர்,அதுல மனோரமா ரொம்ப நல்லா நடிச்சிருந்தாலும் அந்த நாடகத்தை organize பண்ணவங்க தங்களுக்கு இன்னொரு சிறந்த கதாநாயகிய பரிசா கொடுக்க சொல்றாங்க,அவரும் அதே மாதிரி கொடுத்துட்டு, இந்த பரிசுக்கு தகுதியானவங்க மனோரமானு சொல்லிட்டு போனாராம்.

இந்த வார்த்தைகள் அவங்களுக்கு ஒரு உந்துதலா இருந்துச்சாம். அதுக்கு அப்புறம் சின்ன சின்ன கேரக்டர்ல பல நாடகத்துல நடிச்சிருக்காங்க. அப்படியே நாள் போக போக எஸ் எஸ் ஆர் நாடக மன்றத்துல இவங்க சேர்ந்தாங்களாம். அப்படியே படிப்படியா முன்னேறி நாடக உலகத்தோட ராணின்னு சொல்லப்படற அளவுக்கு உச்சத்தை அடைஞ்சாங்க. அதுக்கப்புறமா தான், நான் ஏற்கனவே எழுதின மாதிரி மாலையிட்ட மங்கை படத்துல நடிச்சிருந்திருக்காங்க அத தொடர்ந்து களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் குமரி,தில்லானா மோகனாம்பாள், எதிர்நீச்சல்,பட்டிக்காடா பட்டணமா காசேதான் கடவுளடானு பல வெற்றி படங்களோட தமிழ் சினிமாவின் தனி அடையாளமா உருவானாங்க.
எத்தனை different characters-ல நடிச்சு நம்ம அவங்கள பார்த்தாலும் கூட தில்லானா மோகனாம்பாள் படத்துல ஜில் ஜில் ரமா மணி role நம்மள ரொம்ப ரசிக்க வைக்கிற விதமா super-ஆன screen presence,body language and dialogue delivery-னு அசத்தலா இருக்கும். ஆச்சி செந்தமிழ்,சென்னை தமிழ்,இலங்கை தமிழ்னு எல்லாத்தையும் அதோட இலக்கணம் மாறாம அருமையா பேசி நடிப்பாங்களாம் and இப்போ எனக்கு சம்சாரம் அது மின்சாரம் படத்துல வர கம்முனு கிட dialogue-லாம் கண்ணு முன்னாடி வந்துட்டு போகுது.

இவங்களுடைய comedies சிரிக்க வைக்கும்,சிந்திக்க வைக்கும், அரசியல் பேசும்,ஆனா ஒரு நாளும் double meaning -ல இருக்காதாம்,அத இவங்க கொள்கையாவே வச்சிருந்தாங்களாம் and முதல் முதல்ல நகைச்சுவை கதாபாத்திரத்துல நடிக்கணும்னு சொல்றப்போ வருத்தபட்டாங்களாம் ஏன்னா இவங்க ஆசை கதாநாயகியா நடிக்கணும்னு.But later ஆசைப்பட்ட மாதிரி heroine-ஆகி இருந்தா கூட கண்டிப்பா field out ஆகி இருப்பேன் now காமெடியால தான் 1500 மேல படங்கள் நடிச்சிருக்கேன்னு இவங்களே சொல்லி நெகிழ்ந்த தருணங்களும் உண்டு and நான் இந்த article காக சில interview videos தேடி தேடி பாத்தேன்.சொன்னா நம்ப மாட்டீங்க because அப்படி ஒரு humbleness, then எனக்கு புரிஞ்சுது சினிமாவ தாண்டி சிறப்பான குணம் கொண்ட ஒருத்தவங்கனு.

இப்படி கலை துறைக்கு ரொம்ப அர்ப்பணிப்போட contribute பண்ணின ஆச்சிக்கு gov of India பத்மஸ்ரீ,National Film Award,Filmfare Lifetime Achievement Award – South,Kalaimamani Award,Multiple Tamil Nadu State Film Awards கொடுத்து கௌரவிச்சாங்க.And இவங்க இப்போ நம்ம கூட இல்லனாலும் நடிப்பின் பெண் இலக்கணமா நம்ம நினைச்ச உடனே நியாபகத்துக்கு வரக்கூடிய மகா நடிகைய தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும்,எப்போதும் கொண்டாடிட்டே இருக்கும் . பல தலைமுறையினரையும் பேச்சால,நடிப்பால,பாட்டால கவர்ந்த காவியமாம் நம்ம ஆச்சி மனோரமாவுக்கு சூரியன் FM-ன் “Happy Birthday wishes

Article by – RJ Monika