கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் teaser தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல வெற்றி கூட்டணியான சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மூன்றாவது முறையாக இணையும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் first look வெளியானபோதே ‘இப்படம் எப்பேர்ப்பட்ட கதை அம்சத்தை கொண்டிருக்கும்?’, என தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் ஏற்படத் தொடங்கியது. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிம்பு இப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் first look போஸ்டரை பார்க்கும்போது விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற Romantic சிம்புவை காட்டிய கௌதம் மேனனா இப்படிப்பட்ட ஒரு சிம்புவை திரையில் காட்டப் போகிறார் என ரசிகர்கள் வியப்பில் மூழ்கினர்.

இன்று வெளியாகியுள்ள teaser-ஐ வைத்து பார்க்கும் போது இப்படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கக் கூடும் என கணிக்க முடிகிறது.Teaser முழுவதும் யதார்த்தமான கதாநாயகனாக சிம்பு வலம் வருகிறார். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுடன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை இந்த teaser-க்கு மேலும் வலு சேர்க்கிறது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கதை எழுதியுள்ளார். சிம்புவுடன் இணைந்து ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என இப்படத்தின் எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். படத்தின் சில பகுதிகள் நகர்ப்புறங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ‘முத்து’ எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இப்படத்தின் teaser வெளியான சில மணி நேரங்களிலேயே 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை youtube-ல் பெற்றுள்ளது. Teaser-ஐ பார்த்த ரசிகர்கள் சிம்புவுக்கும், படக்குழுவினருக்கும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
- Samantha Ruth Prabhu Latest Traditional Looks Go Viral
- பார் போற்றும் பாரதி
- லட்சாதிபதிகள் மட்டும் படிக்கவும்!
- ஐயப்பனின் பதினெட்டு படிகள் சொல்லும் பாடம்
- திரு, திருமதி பெயரில் இருக்கும் ரகசியம்
வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படத்தின் teaser-ஐ கீழே காணுங்கள்.

