வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் ஒரு ஒற்றுமை இருந்ததுதான் வருகிறது. அதற்க்கு காரணம் மிக பழங்காலத்திலிருந்தே வந்த ஒருமைப்பாடுதான்.
வட இந்தியாவில் பிராகிருதம்,பாளி முதலியவை செல்வாக்கு பெற்றதனால் பழந்திராவிட மொழி தென்னிந்தியாவின் அளவில் குறுகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் ஆட்சி வேறுபாடு, மலை ஆறுகளின் எல்லை வரையரை முதலிய காரணங்களால் ஒரு பகுதியில் வாழ்ந்த திராவிட மக்கள் பேசிய மொழிக்கும், மற்றொரு பகுதியில் வாழ்ந்த திராவிடர்கள் பேசிய மொழிக்கும் இடையே வேற்றுமை வளர்ந்தது. போக்குவரத்துக்கு குறைந்த அந்த காலத்தில் அந்த வேற்றுமை வளர்ந்துவருவது எளிதுதான். அதன் காரணமாகவே தெற்கே இருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என்று வேறுபட்டது.
திருப்பதி மலைக்கு வடக்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தெலுங்காகவும், மைசூர் பகுதி மக்கள் பேசிய மொழி கன்னடமானது, தென்மேற்கே கேரளத்தில் இருந்தவர்களின் மொழி மலையாளமாகவும் வளர்ச்சி பெற்றன. ஐந்தே நான்கு மொழிகளில் நெடுங்காலமாக இலக்கிய வளர்ச்சி பெற்று வளர்ந்த மொழி தமிழ். ஒரு காலத்தில் கன்னடத்தை கரு நாட்டு தமிழ் என்றும், துளு மொழியை துளு நாட்டு தமிழ் என்றும், மலையாளத்தை மலை தமிழ் என்றும் ஒரு சிலர் குறிப்பிட்ருக்கிறார்கள்.மற்ற மொழிகளில் இருந்து தமிழ் வேறுபட்டு இருந்தாலும் மலையாளமும் தமிழும் அவ்வளவு வேறுபடவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
கேரளத்தில் வடமொழியின் செல்வாக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் மிகுதியாயிருக்கிறது. அதற்கு முன் தமிழ் அங்கே ஆட்சி மொழியாகவும் கலைமொழியாகவும் இருந்து வந்திருக்கிறது. பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்டு வந்த சேர மன்னர்கள் தமிழரசர்கள். அதற்கு பிறகு பாண்டிய அரசர்களே ‘பெருமான்கள்’, ‘பெருமாக்கன்மார்’ என்ற பெயரோடு அங்கே பத்தாம் நூற்றாண்டு வரையில் ஆண்டுவந்தார்கள்.
பழைய இலக்கணமாகிய தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்டபோது, கேரளத்தை சேர்ந்த திருவிதாங்கூர் தமிழ் புலவர் ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டுவரை கேரள நாடு புலவர்கள் தமிழில் பாடியிருக்கிறார்கள். அவர்களின் பாடல்கள் பழைய தமிழ் தொகை நூல்களாகிய புறநானுறு,அகநானுறு பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
திராவிட மொழிகளில் இடத்தில் பரப்பு உடைய மொழி தமிழ். நான்கு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் தமிழ்நாட்டின் மொழியாக இருப்பதுடன் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசிய, இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா,பிஜி தீவு மொரிஷியஸ் முதலிய பல நாடுகளிலும் பல லட்சக்கணக்கான மக்கள் பேசும் மொழியாக உள்ளது. ஒரு காலத்தில் பிற மொழி சொற்கள் குறைந்த அளவில் கலந்த மொழியாக இருந்த தமிழ் இன்று ஆங்கில கலப்பில் எங்கிருக்கிறது என்பதை நாமே அறிவோம்.
Article By RJ Valli