Cinema News Stories

உலக நாயகனுக்கு எதிரியாகும் எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யா தான் 2 நாளா சமூகவலைதளங்கள்ல ட்ரெண்டிங். என்னடா அப்டினு பாத்தா இந்தியன் 2 படத்துல இவர்தான் வில்லனாம்.

எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமால இயக்குநரா அறிமுகமாகி ஹிட் மேல ஹிட் குடுத்து அப்பறம் கதாநாயகனாகி ஹிட் மேல ஹிட் குடுத்து ஒரு சிறந்த நடிகனாகி இப்ப சூப்பர் வில்லனா கலக்கிட்டு இருக்காரு.

ஒரு படத்துல எஸ்.ஜே.சூர்யா நடிக்குறாரு அப்டினா அவருக்காக படம் பார்க்க ஒரு கூட்டம் உருவாகிருச்சு. அப்படி தன் நடிப்புத் திறமையால பலரையும் கவர்ந்திருக்காரு.

மெர்சல் படத்துல தளபதிக்கு வில்லனா நடிச்சு அட்டகாசம் பண்ணியிருப்பாரு. மாநாடு படத்துல எஸ்.டி.ஆர்க்கு வில்லனா காமெடியும் பண்ணி, பயப்படவும் வச்சு அற்புதமா நடிச்சிருப்பாரு. இது மட்டுமா இவருடைய ஒவ்வொரு படங்களுடைய கதாபாத்திரம் பத்தியும், நடிப்பு பத்தியும் பல மணி நேரம் பேசலாம்.

மான்ஸ்டர் படத்துல ரொம்ப எளிமையான வேலைக்கு போற மனுசனா வேற லெவல்ல நடிச்சிருப்பாரு. நெஞ்சம் மறப்பதில்லை, இறைவினு இன்னும் வித்தியாசம் காட்டிய கதாபாத்திரங்கள் இப்படி சொல்லிட்டே போகலாம்.

இப்படிப்பட்ட நடிகர் உலக நாயகனுக்கு வில்லனா நீண்ட நாள் எதிர்பார்ப்புல இருக்க இந்தியன் 2 படத்துல நடிச்சுருக்காரு அப்படிங்குறது எவ்வளவு பெரிய Surprise. அதனால இத பத்தி தான் எல்லாரும் இப்ப பேசிட்டு இருக்காங்க. எஸ்.ஜே.சூர்யா, கமல்ஹாசன் காம்போவ ஸ்க்ரீன்ல பாக்கும் போது எப்படி இருக்கும்னு நினைச்சாலே ரொம்ப பிரமிப்பா இருக்கு.

சீக்கிரமே இந்தியன் 2 அப்டேட்ஸ், டீசர் & ட்ரைலர்ல எஸ்.ஜே.சூர்யாவ பாப்போம்.

Article By MaNo

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.